Menu

Search This Blog

Nanoru Sindhu 1 - Deepababu

 




*1*


அன்று வெகு சீக்கிரமாக வேலை முடிந்து விட்டதால், மாலை ஐந்து முப்பது மணிக்கே தனது அப்பார்ட்மென்டுக்கு திரும்பினான் சித்தார்த்.

Nanoru Sindhu - Deepababu





நானொரு சிந்து


பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை பெற்றோரின் அரவணைப்பே என்னவென்று அரிச்சுவடி அறியாத ஒருவன் அவளுக்கும் அவள் மகவுக்கும் தாயுமானவனாக மாறி அன்பால், நேசத்தால் அழகிய இல்லறத்தை எவ்வாறு உருவாக்குகிறான் என்பது தான் தெளிந்த நீரோடையாக கதையோட்டம்.

Theeyumillai Pugaiyumillai 45 – Deepababu

 


*45* 


முகத்தில் எந்த பாவமும் இன்றி கிருஷையே பார்த்தவள், "உஃப்... மாமா! இவ்வளவு நேரமாக அது ரிலேட்டடாக தான் பேசிக் கொண்டிருந்தேன். சரி விடுங்கள் மீண்டும் அதைப்பற்றி பேசி குழப்பிக் கொள்ள வேண்டாம். நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், நம் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்பெஷல் நபர் வரப் போகிறார்!" என்றாள் வெட்கப் புன்னகையோடு.

Sivapriya's Thachanin Thirumagal - 23





*23*


மதியநேர உணவை முடித்த கையோடு உடலைத் தளர்த்தி ஓய்வாய் தோட்டத்தில் கால்நீட்டி மெளனமாய் படுத்திருந்தவனை சோபையாய் பார்த்தாள் குந்தவை.

Mamanar - Deepababu



மாமனார்


முகத்தில் எரிச்சல் மிகுந்திருக்க தன்னை முறைக்கும் கணவனை எப்படி சமாளிப்பது என புரியாமல் பரிதவிப்புடன் நோக்கினாள் ஜோதி.

Yenge Yenathu Kavithai - Deepababu


எங்கே எனது கவிதை


கல்லூரியில் முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருந்த ஹாசினிக்கு வாழ்க்கை வண்ணமயமாகத் தோன்றியது.

Nitharsanam - Deepababu


நிதர்சனம்

"ஹாய்...! என்ன இவ்வளவு நேரம்?" என்று புன்னகையுடன் கதவைத் திறந்தாள் இனியா.

Kannal Pesum Penne - Deepababu



கண்ணால் பேசும் பெண்ணே


"அதிகாலை நிலவே... அலங்காரச் சிலையே...
புதுராகம் நான் பாடவா...

Sivapriya's Thachanin Thirumagal - 22




 *22*

‘உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க, வாசலில் நிற்கச் சொல்லியிருக்கேன்.’ என்று அலுவலக உதவியாளர் அவளிடம் வந்து செய்தியைக் கடத்த, வியப்புடன் தன் இருக்கையில் இருந்து எழுந்தாள். 

100 words story - Deepababu



காற்றாய் வருவேன்


டிவியில் லயித்திருந்த தேவாவை போன் சத்தமிட்டு கலைத்தது.

Sivapriya's Thachanin Thirumagal - 21

 

*21*

“ரெண்டு நாளா ஆளே மாறிட்ட? எல்லாம் தங்கச்சியின் கைவண்ணமோ?” தச்சனை மெச்சுதலாய் பார்த்த குணா கைலியை மடித்து கட்டிக்கொண்டு கழனியில் இறங்க, தச்சன் கெத்தாய் தன் சட்டை காலரை தூக்கிவிட்டான்.

Unarvu Porattam - Deepababu



உணர்வுப் போராட்டம்

"அம்மா!" என்று ஆவலுடன் அழைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள் ஹரிணி.

Gnabagam Varuthe - Deepababu


ஞாபகம் வருதே

தீபிகாவுக்கு மிகவும் டென்ஷனாக இருந்தது.

Sivapriya's Thachanin Thirumagal - 20

 

*20*

உச்சி வெயில் நடுமண்டையை பிளக்க, நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் குந்தவை. பிறந்தவீட்டில் சிறு சிறு வேலைகள் செய்து பழகியிருந்தவள் புகுந்த வீடு வந்தும் பெரிதாய் வேலைகள் செய்ததில்லை. மணமான உடனேயே ஏற்பட்ட தந்தையின் இழப்பு அதன் பின்னான பிரச்சனைகள், தேர்வுகள் என்று குந்தவைக்கு ஓய்வு அதிகம் தரப்பட்டது.

Yaro Yarodi - Deepababu



யாரோ யாரோடி

அந்த திருமண அரங்கமே மெல்லிசைக் கச்சேரியால் கலை கட்டியிருந்தது.

Sivapriya's Thachanin Thirumagal - 19

 

*19*

விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எப்படி திடுமென இவ்வளவு பெரிய மகன் என்று இயல்பாய், ஆர்வமாய், வம்பாய் கேட்ட அனைவருக்கும் கடத்தப்பட்ட தகவலோ உறவினரிடம் வளர்ந்தான் என்ற சுருக்கமான பதிலே ஒன்றுபோல தெரிவிக்கப்பட்டது.

Sivapriya's Thachanin Thirumagal - 18

 

*18*


வார்த்தைகள் மரணித்து உணர்ச்சிகள் உச்சானிக்கொம்பில் இருக்க, தச்சன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. விழி எதிரில் தந்தை, அன்னை, ஆச்சி என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் புதிதாய் அண்ணன் என்று சொல்லப்பட்டவனின் அருகே கண்ணீருடன் அமர்ந்து அவன் கரத்தை இறுக்கமாய் பற்றியிருக்க, திவ்யா தச்சனின் கரத்தை கெட்டியாக பிடித்திருந்தாள்.

Yennai Theriyuma 1 - Deepababu



*1*


வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஒன்று ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு பங்களாவிற்குள் நுழைய, அதனை பின் தொடர்ந்து வந்த ஜெய்சங்கர் அருகே இருந்த பெரிய மரத்தின் பின்னே மறைவாக தன் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கே நடமாடுகின்ற ஆட்களை நோட்டமிட ஆரம்பித்தான்.

காரிலிருந்து இறங்கிய அந்த பிரபலமான தொழிலதிபர் வீட்டினுள் செல்ல, அவருடன் இரண்டு நபர்கள் மட்டும் உள்ளே சென்றனர். வெளியே நல்ல திடகாத்திரமாக இருந்த இருவர் தொடர்ந்து காவலுக்கு நின்றிருந்தனர்.

பைக்கை மெல்லமாக உருட்டிக்கொண்டு ஓசையின்றி வீட்டிற்குப் பின்னால் சென்றான் ஜெய். சுற்றுச்சுவரை ஒட்டி வண்டியை ஓரமாக நிறுத்தியவன் மெதுவாக அதன் மேல் ஏறிப் பார்க்க பின்புறம் ஒருவரும் இல்லை. அதில் உற்சாகமானவன் மெல்ல ஒரு எம்பு எம்பி சத்தம் எழாமல் உள்ளே குதித்தான்.

தன் சட்டைப் பையிலிருந்து மொபைலை எடுத்தவன் வீடியோ ரெக்கார்டிங் ஆன் செய்துக் கொண்டு பூனை போல் பதுங்கிப் பதுங்கி சுற்றும்முற்றும் கவனமாகப் பார்த்தவாறே வீட்டை நோக்கி முன்னேறினான்.

அருகில் சென்றதும் ஒரு இடத்தில் பேச்சுக்குரல் நன்றாக கேட்க, அந்த ஜன்னலருகே சென்று நின்றவன் மெல்ல தன் கையிலிருந்த அலைபேசியை அட்ஜெஸ்ட் செய்து உள்ளே நடப்பதை அதன் திரையில் கவனிக்க ஆரம்பித்தான்.

பெரிய டேபிள் முழுவதும் பண்டில் பண்டிலாக இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுக்கள் அடுக்கப்பட்டிருக்க எதிரே நின்றிருந்த அந்த பணம் படைத்த மனிதர் அதில் சில நோட்டுக்களை எடுத்துக் கண்கள் மூடி ஆசையாய் வாசம் பிடித்தவாறு அட்டகாசமாய் சிரித்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டு அதிர்ந்தவன், 'அடப்பாவி... இப்படியெல்லாம் தொழில் செய்துதான் நீ பெரிய தொழிலதிபர் ஆனாயா? இந்தக் கள்ள நோட்டுக்களை எல்லாம் மார்க்கெட்டில் சுற்றவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகளை போலீஸில் மாட்டி வைத்துவிட்டு நீங்கள் தப்பி விடுகிறீர்களே... உங்களை விட மாட்டேன்!' என்று தனக்குள் சூளுரைத்தவாறு கைபேசி கேமராவில் அவர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்யத் துவங்கினான்.

அந்த தொழிலதிபரின் முகம் நன்றாகத் தெளிவாக தெரிய, "ம்... இதையெல்லாம் என்றைக்கு டெஸ்பாட்ச் செய்கிறீர்கள்?" என தன் கைக்கூலிகளிடம் விவரம் கேட்டார்.

"நாளை நம் ஆட்களை வரச் சொல்லியிருக்கிறேன் சார், இரண்டாயிரம் தனியாக ஐநூறு தனியாக என்று எல்லாம் தனித்தனியாக பிரித்து அனுப்ப வேண்டும்!" என்றான் ஒருவன்.

"நோ... நோ... முதலில் ஐநூறை மட்டும் வெளியே விடுங்கள். புது நோட்டு, மேலும் ரிசர்வ் பேங்கே அதில் இரண்டு டிசைன்களில் விட்டிருப்பதால் மக்கள் மத்தியில் பல குழப்பங்கள் நிலவுகிறது.

ஸோ... யாராலும் சட்டென்று நோட்டில் வித்தியாசத்தை கண்டுப்பிடித்து விட முடியாது!" என்று அவர் ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்க, ஜெய்யின் பின்னால் ஏதோ குர்ர்... குர்ர்ரென்று சத்தம் கேட்டது.

‘எவன்டா அது ரெக்கார்டிங் பொழுது டிஸ்டர்ப் பண்றது?’ என எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தவனின் விழிகள் வெளியே தெறித்து விழும் அளவிற்கு பெரிதாக விரிந்தது.

சின்னக் கன்றுக்குட்டி உயரத்தில் உள்ள பெரிய அல்சேஷன் ஒன்று நாக்கை வெளியே தொங்கவிட்டு மூச்சிரைத்தவாறு அவன் பின்னால் நின்று முறைத்துக் கொண்டிருந்தது.

நெஞ்சம் அதிர பதற்றத்தோடு அதைப் பார்த்தவன், யாருக்கும் தெரியாமல்... குறிப்பாக இதனிடமிருந்து தான் எப்படி தப்பித்துச் செல்வது என்று நெற்றியில் வியர்வை அரும்ப பயத்தோடு வேகவேகமாக சிந்தித்தான்.

இன்னமும் உள்ளே தீவிரமாய் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருக்க, இவன் மெல்ல மெல்ல சுவற்றை ஒட்டியே பல்லி போல நகர ஆரம்பித்தான். அந்த அல்சேஷன் அமைதியாக கூர் விழிகளுடன் நீர் உமிழும் நாக்கோடு அவன் செய்கையை அசட்டையாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

அப்படியே மெதுவாக தன் வண்டி நின்றிருக்கும் நேரெதிர் சுவருக்கு வந்து விட்டான் ஜெய். சட்டென்று ஓடிப்போய் சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து வண்டியில் பறந்து விட்டால் போதும் வேலை முடிந்தது.

இதுவரை எடுத்த ஷுட்டை வைத்தே இவர்களை மக்களுக்கும், போலீஸுக்கும் அடையாளம் காட்டிவிடலாம் என நிம்மதியாக முடிவு செய்தவன் அவசரமாக சுவரை விட்டுப் புல் தரையில் வேக நடையிட, அந்த நாயோ அப்பொழுது தான் வள்வள்ளென்று குரைத்தபடி அவன் அருகில் பாய்ந்தோடி வந்தது.

'அட நாயே... இப்படி மாட்டி விட்டுட்டியே!' என்று உள்ளுக்குள் அதனை சபித்தபடி அசுரவேகத்தில் அவன் காம்பவுன்டை நோக்கி ஓட, நாயின் குரல் கேட்டு அங்கே ஓடி வந்த அடியாள் ஒருவன் தன் கையில் இருந்த தடியை ஜெய் சுவரேறும் நேரம் அவன் காலை நோக்கி அதிவேகமாக வீசினான்.

ஆ... என்று அலறியபடி கீழே விழுந்தவன் அடுத்த நொடி ரப்பரென துள்ளி எழுந்து நின்று, அருகில் வந்து விட்டவனின் மூக்கை நோக்கி கைமுஷ்டியை மடக்கி ஓங்கி ஓர் குத்து விட்டான்.

"ஐயோ... அடப்பாவி நாயே..." என்ற அம்மாவின் கூக்குரலை காதில் கேட்டுப் பதறியவன்,

'அடக்கடவுளே... இந்த அம்மா எங்கே இங்கே வந்தார்கள்? நான் ஒருவன் தப்பிப்பது இல்லாமல் இவர்களை வேறு இப்பொழுது காப்பாற்ற வேண்டுமா? ஓ மை காட்... ஹெல்ப் மீ!' என சுற்றும்முற்றும் செண்பகத்தை தேட ஆரம்பிக்க, அவன் முகத்தில் யாரோ பளீரென்று தண்ணீரை அடித்து ஊற்றினார்கள்.

“ஆ... அம்மா...” என்று சின்ன மூச்சிரைப்போடு அலறி அடித்துக்கொண்டு படுக்கையில் வேகமாக எழுந்தமர்ந்தான் ஜெய்சங்கர்.

"ஏன்டா பன்றி... எட்டரை மணிக்கு கிளம்ப வேண்டிய அலுவலகத்திற்கு எட்டு மணி வரை தூங்குகிறாயே என்று உன்னை எழுப்ப வந்தால்... என் மூக்கிலேயே குத்துகிறாயா நீ? உன்னை..." என முகமெல்லாம் ஆத்திரத்தில் சிவந்திருக்க பற்களை அழுந்தக் கடித்தவர் அவன் என்ன ஏதுவென்று சுதாரிக்கும் முன்னர், விறுவிறுவென வெளியே சென்று மாப்ஸ்டிக் ஒன்றை எடுத்து வந்து அவனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்.

"ஆ... அம்மா வலிக்கிறது வேண்டாம்!" என்று அவன் இங்கும் அங்கும் தாவி தப்பித்து ஓடினான்.

"ஏன்டா எனக்கு மட்டும் நீ விட்ட குத்து வலிக்காமல் இனிக்கிறதா? இங்கே பார்டா... எப்படி சிவந்து வீங்கிப் போயிற்று!" என்று வலியுடன் தன் மூக்கை தேய்த்தபடி அவர் புலம்ப ஆரம்பிக்க, இதுதான் சமயம் என்று அருகில் ஓடி வந்தவன் வேகமாக அவர் கைகளிருந்த ஸ்டிக்கை பிடுங்கியபடி செண்பகத்தின் மூக்கை மெதுவாக தேய்த்து விட்டான்.

"ஐயோ... சாரிம்மா... அவனை குத்தும்பொழுது நீ ஏன்மா குறுக்கே வந்தாய்?" என்று வருந்தியபடி அவரை கட்டிலில் அமர வைத்து ஆயின்மென்ட் போட்டு விட்டான் ஜெய்.

"அவனா... இங்கே எவன்டா வந்தான்? நீ அப்படி ஓங்கிக் குத்தினாய்!" என்று விழித்தார் பெற்றவர்.

ஹிஹி... என்று தலையை சொரிந்தபடி அசடுவழிந்தவன், "அது... அது கனவு போலிருக்கிறதும்மா, அதில் ஒரு ரௌடியை தான் நான் ஓங்கிக் குத்தினேன். தண்ணீர் ஊற்றவும் எழுந்துப் பார்த்தால் உன் மூக்கு வீங்கியிருக்கிறது!" என்றான் நாயகன் மென்று விழுங்கி.

"அடேய்... அடேய்..." என ஆவேசத்துடன் மகனின் தலைமுடியை கொத்தாகப் பிடித்திழுத்து நங்நங்கென்று பலமாக கொட்டியவர்,

"இரவில் ஜெய்சங்கர் படத்தை பார்த்துவிட்டு தூங்காதே என்று எத்தனை முறை உனக்கு சொல்லியிருப்பேன். இன்னமும் திருந்தாமல் ஏழு வயதில் ஆரம்பித்த பழக்கத்தை, கனவுலகில் மிதந்தபடி என்னை அடிப்பதையும், உதைப்பதையும் நிறுத்த மாட்டேன் என்கிறாயே..." என்று அலுத்தபடி தலையில் கைவைத்து ஓய்ந்துப் போய் அமர்ந்து விட்டார்.

அவர் அருகில் அமர்ந்து சலுகையுடன் கழுத்தை கட்டிக்கொண்டவன், "சாரிம்மா... உன் பேச்சைக் கேட்டு பத்து வருடங்களாக இரவில் தலைவர் படம் பார்க்காமல் தானே இருந்தேன். நேற்று சுத்தமாக தூக்கம் வரவில்லை, சரி... இப்பொழுது தான் வளர்ந்து விட்டோமே கனவு வராது என்று நம்பி... வல்லவன் ஒருவன் போட்டுப் பார்த்தேன்!" என்றான் அவரிடம் பரிதாபமாக.

"வாயை மூடிக்கொண்டு எழுந்து ஓடிப் போய்விடு, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும். உன் அப்பாவிடம் அப்பொழுதே தலையால் அடித்துக் கொண்டேன், பத்து வயது பையனுடைய பேச்சை எல்லாம் கேட்டுப் பெயரையெல்லாம் மாற்றாதீர்கள் என்று. கேட்டாரா? பாவம்... குழந்தை ஆசைப்படுகிறானாம்... குழந்தையாம் குழந்தை..." என இடையில் நிறுத்தி, அவன் தாடையில் ஒரு குத்து விட்டுவிட்டு சோகமாக தொடர்ந்தார்.

"உன் பேச்சைக் கேட்டு ஜெயக்குமார் என்றிருந்த பெயரை கெஸட்டில் ஜெய்சங்கர் என்று மாற்றினாரே அவரைச் சொல்ல வேண்டும்.

மனுஷன்... அதன்பிறகு உன்னிடம் இரண்டு வருடங்கள் மட்டும் உதை வாங்கிவிட்டு, என்னை காலம் முழுவதும் வாங்க வைத்துவிட்டுப் பாதியில் போய் விட்டாரே!" என்று அங்கலாய்க்க ஆரம்பித்தார் செண்பகம்.

'ஐயையோ... இந்த அம்மா காலையிலேயே ஆரம்பித்து விட்டார்களே... நான் எத்தனை மணிக்கு அலுவலகம் போவது? நிறுத்தவும் முடியாதே... செய்தப் பிரச்சினைக்கு முதுகில் நல்லப் பெரிய டின்னை வேறு கட்டி விடுவார்கள்!' என்று செய்வதறியாது தலையை பிய்த்துக்கொள்ள ஆரம்பித்தான் ஜெய்.

"அம்மா!" என மெல்ல அழைத்தவனிடம், "என்னடா?" என்று எரிந்து விழுந்தார்.

"இல்லை... என்னை எதற்கு எழுப்பி விட்டாய்?"

"ஏன் அலுவலகத்திற்கு..." என வேகமாக ஆரம்பித்தவர் பாதியில் நிறுத்தி அவனை முறைத்தார்.

"ஓஹோ... போட்டு வாங்குகிறாயா?"

"இல்லைம்மா... மணி எட்டேகால்!" என்றான் பப்பி முகத்தை வைத்து.

"நீ குளிக்கின்ற காக்கா குளியலுக்கு ஒரு ஐந்து நிமிடம், உடை மாற்ற ஐந்து நிமிடம், வயிற்றில் ஆவி பறக்க கொட்டிக் கொள்வதற்கு ஒரு ஐந்து நிமிடம்.

ஆகமொத்தம்... கூட்டிக் கழித்துப் பார், எட்டரை மணிக்கு நீ கிளம்புவதற்கு கணக்கு சரியாக வரும்!" என்று மகனிடம் நக்கலடித்து விட்டு அறை வாயில்வரை சென்றவர் அவனிடம் திரும்பி,

"டேய்... இதைச் சொல்ல மறந்து விட்டேனே!" என்றார் வேகமாக.

பல்லைக் கடித்து தலையாட்டியவாறே, "சொல்லும்மா... அதையும் கேட்டுவிட்டே குளிக்கப் போகிறேன்!" என்றான் பையன் முறைப்புடன்.

"இல்லை... தயவுசெய்து எந்தப் பெண்ணையாவது இழுத்து வந்து அவளை உனக்கு திருமணம் செய்து வைக்கும்படி மட்டும் என்னிடம் எதுவும் கேட்டு விடாதே.

சத்தியமாக அந்தப் பாவக் காரியத்தை எல்லாம் நான் செய்ய மாட்டேன். என்ன தான் நான் அவளுக்கு மாமியாராக இருந்தாலும், தினமும் உன்னிடம் என் மருமகள் உதை வாங்கட்டும் என்று நினைத்து மகிழும் அளவிற்கு ரொம்ப கல்நெஞ்சுக்காரி இல்லை!" என கூறி தன் இதயத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டவர்,

ஜெய்யின் அம்மா... என்ற காட்டுக்கத்தலை திருப்தியுடன் நின்று கேட்டுவிட்டே வெளியேறினார்.

ஜெய்சங்கர் சிறுவயது முதலே அவன் அம்மா குறிப்பிட்டிருந்தபடி மக்கள் கலைஞரின் தீவிர ரசிகன். அவருடைய படங்களின் தாக்கத்தால் பெயரை மாற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் படித்ததும் ஜெர்னலிசம் தான்.

அவரை போல் சமூகத்தில் நடக்கின்ற நிறைய குற்றங்களை கண்டுப்பிடித்து மக்கள் முன் நிரூபித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உதவ வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவன்.

கடந்த நான்கு வருடங்களாக ஃபார்யு டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ரிப்போர்ட்டராகவும் பணியில் இருக்கிறான்.

ஆனால் இத்தனை நாட்களில் அவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கப் பெறாமல், 'திக் திக் நிமிடங்கள்!' என்கிற கிரைம் தொடரையும், 'உங்களால் வெல்ல முடியும்!' என்கிற உத்வேக தொடரையும் எழுதி இயக்கி வருகிறான். இதுவரை திரையில் தன்னை அவன் வெளிப்படுத்திக் கொண்டதில்லை.


Yennai Theriyuma - Deepababu

 



என்னை தெரியுமா?

Sivapriya's Thachanin Thirumagal - 17


                                                                  *17*

போதையில் கூர்மையை இழந்து அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் தச்சன் கால்களை ஆட்டிக்கொண்டு மெத்தையில் படுத்திருக்க, அவன் சட்டை பொத்தான்களை கழற்றிக் கொண்டிருந்தாள் குந்தவை. போதையை தெளியவைத்த பின்தான் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அன்பரசன் கறாராய் நிற்க, நீலாவுக்கோ வானதி, குந்தவை முன்னர் அவர் தச்சனைக் கடிந்துகொண்டது துளியும் பிடிக்கவில்லை.

SIvapriya's Thachanin Thirumagal - 16

 


*16*

நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே வண்டி நிறுத்தியவனை திட்ட வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, தச்சனைக் கண்டதும் முறைப்போடு நிறுத்திக்கொண்டாள் குந்தவை.

Sivapriya's Thachanin Thirumagal - 15

 

*15*

“குந்தவை டிபன் எடுத்து வச்சிட்டேன்… சீக்கிரம் வாடி… நேரமாகிட்டு இருக்கு…” என்று வானதி வெளியிலிருந்தே சத்தமாய் தங்கையை அழைக்க, குந்தவை அறையினுள்ளே தச்சனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.

Sivapriya's Thachanin Thirumagal - 14

 

*14*

எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று எழுந்த எண்ணத்தை துரிதமாய் ஒதுக்கியவள்,

Sivapriya's Thachanin Thirumagal - 13

 

*13*

உறக்கத்தில் இருந்த அறிவழகியை வாகாய் மெத்தையில் படுக்க வைத்து, தலையணை கொண்டு அணை கட்டிவிட்டு வானதியை கீழே அமரச் சொல்லி தானும் அருகில் அமர்ந்துகொண்டாள் குந்தவை. விவரம் தெரியாமல் குந்தவை குழப்பத்துடன் தவிக்க, வானதியிடம் எந்த பதட்டமும் இல்லை. 

Sivapriya's Thachanin Thirumagal - 12

 

*12*

தன்னருகில் அமைதியாய் கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் மருமகளைப் பார்த்தவர் விழியை கூர்மையாக்கி கேள்வியாய் என்னவென்று பார்வையாலே வேண்ட, குந்தவை ஒருநொடி தயங்கிப் பின்,

Sivapriya's Thachanin Thirumagal - 11

 

*11*

“உனக்கு அங்க எல்லாம் பொருந்திப் போகுதாடி? உன்கிட்ட முன்னாடியே கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன் அதற்குள் என்னென்னவோ நடந்துப் போச்சு…” 

Sivapriya's Thachanin Thirumagal - 10

 

*10*

“என்னங்கடா நடக்குது இங்க? எவன் வீட்டுக் கூடாரத்தில் எவன் குளிர் காயுறது? எழுந்திருங்க தடிமாடுகளா?” என்று கடுகடுத்தவன் வயல் வரப்பில் அங்குமிங்கும் போதையின் பிடியில் விழுந்துக் கிடந்த அவனின் சகாக்களை காலால் எட்டி உதைத்தான். 

Sivapriya's Thachanin Thirumagal - 9

 

*9*

குளியறையில் இருந்த போதே சிகரெட்டின் வாடை நாசியை எட்டி குமட்ட, அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் புகைத்துக் கொண்டிருப்பார்கள் என்றெண்ணி குளித்து உடைமாற்றி வந்தவளின் பார்வையில் சுருள் சுருளாய் புகைவிடும் தச்சனே எதிர்பட ஒருநிமிடம் எதுவுமே புரியவில்லை குந்தவைக்கு. 

Sivapriya's Thachanin Thirumagal - 8

 

*8*

மாலை வேலையெல்லாம் முடித்து வீட்டிற்குள் நுழைந்ததுமே தனக்கு தண்ணீர் எடுத்து வந்து நீட்டியவளை ஆச்சர்யமாய் பார்த்த அன்பரசன், “என்னமா அதுக்குள்ள வந்துட்ட? பரீட்சை முடிஞ்சதும் அனுப்பி வைக்குறேனு தகவல் சொன்னாங்க?”

Sivapriya's Thachanin Thirumagal - 7

 

*7*

“அப்படியே இரு. உள்ள வராத.” என்ற மறுப்புக் குரலில் குழப்பமாய் புருவம் சுருக்கியவன், உள்ளே நுழையாமல் குதித்து திண்ணை திண்டில் அமர்ந்து கைகளை தரையில் ஊன்றி கால்களை ஆட்டிக்கொண்டே, “ஏனாம்?”

Sivapriya's Thachanin Thirumagal - 6





*6*


மாற்றம் ஒன்றே மாறாதது என்பது வெறும் வார்த்தை இல்லை போலும் அதிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் மெய். ஆனால் அந்த மாற்றம் எத்தகையது என்பதில் தான் ஒருவரின் மனநலன் தீர்மானிக்கப்படுகிறது. என்ன செய்வது என்று வழி அறியாது சஞ்சலமாய் அலையும் போது வழி கிடைத்துவிட்டால் அந்த மாற்றம் வாழ்க்கையையே மாற்றியமைப்பது போல, இருந்தவற்றை இழக்கும் வலி தரும் மாற்றமும் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்துவிடும்.

Sivapriya's Thachanin Thirumagal - 5





*5*


அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது. அதெல்லாம் இந்த அற்ப உவகையில் சற்று மட்டுப்பட்டது.

Sivapriya's Thachanin Thirumagal - 4



*4*



பிடிவாதம். பிடிவாதம். பிடிவாதம். கொள்கையை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து என்ன பயன்? அவள் விரும்பியது கிடைக்கவில்லையே. தச்சன் இனி தான் வேலை பார்க்கணும் என்று சொல்லியிருக்க, அதை அப்படியே தந்தையிடம் கடத்தி என்திது என்று கேட்க, அவரோ சாவுகாசமாய்,


“அவங்க

Sivapriya's Thachanin Thirumagal - 3






*3*


தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்தாலும் அவன் இருப்பிடம் குடந்தையை ஒட்டிய ஊராட்சியான திருநறையூரில் இருந்து அவள் வசிப்பிடம் செல்ல ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது. இரண்டு வாடகைக் கார் பிடித்து மகளின் புகுந்த வீட்டினரை மட்டும் தங்களுடன் அழைத்துக் கொண்டு, தேவையானவற்றை குடந்தையில் வாங்கிவிட்டு பயணமாக, வெள்ளைவேட்டிக்கு தோதாய் அரக்குச் சட்டையில்

Sivapriya's Thachanin Thirumagal - 2





*2*


“என்னது கல்யாணமா?” என்று அன்னை கடத்திய செய்தியை கேட்டு வாயைப் பிளந்தான் அவன்.


அவனது பாவனையில் குழப்பமுற்ற நீலா, “ஏன் தச்சா இப்போ வேணாம்னு நினைக்குறியா?” என்றார் கணவர் தயங்கியது போல மகனும் தயங்குகிறானோ என்ற எண்ணத்தில்.


“நான் எப்போ வேணாம்னு சொன்னேன்? எவ்வளவு நாள் தான் சிங்கிளாவே சுத்துறது... ஸ்கூல் பையனுங்க கூட காதலிக்கிறேன்னு கண்ணு முன்னாடியே சுத்தி கடுப்பேத்துறாங்க. வாழ்க்கையில் ஒரு கிக்கே இல்லை.”

Sivapriya's Thachanin Thirumagal - 1






*1*


“தென்னாடுடைய சிவனே போற்றி! 

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!”

என்ற பக்தி கானத்தை ஒருவர் துவங்க, அவர் வழியே அனைவரும் அந்த எம்பெருமானை துதித்து முழங்க, அந்த நகர் முழுதும் சிவனின் நாமம் அதிர்வை ஏற்படுத்தி மக்களின் மனசஞ்சலங்களை இறக்கி வைத்து, நம்பிக்கையுடன் தங்களின் குறைகளை வேண்டலாய் குவிக்கும் இடமாக மாறியிருந்தது.

Theeyumillai Pugaiyumillai 34 – Deepababu


*34*


வேறு வழியில்லாத சுவாஹனா மெதுவாக எழுந்து நின்றாள், 'தூங்குவதைப் பார்... வளர்ந்துக் கெட்டவன், கட்டில் நீளத்துக்கு படுத்துக் கொண்டால் தாண்டி செல்வதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கிறது?' என சிணுங்கினாள்.

Theeyumillai Pugaiyumillai 26 – Deepababu

 


*26*


காரை தெருமுனை தாண்டி நிறுத்திய கிருஷ், யோசனையோடு மொபைலை எடுத்து தன் மாமனாருக்கு டயல் செய்தான்.

Theeyumillai Pugaiyumillai 17 – Deepababu


*17*


"இங்கே எதுவும் நன்றாக இல்லை போகலாமா?" என்ற கேள்வியுடன் சுஹா அங்கே வந்தாள்.

Theeyumillai Pugaiyumillai 8 - Deepababu

 


*8*​


சுவாஹனா நிம்மதியாகப் படுத்திருப்பதை காணக் காண சாய்கிருஷுக்குள் கோபம் கன்னாபின்னாவென்று எகிறியது.

Theeyumillai Pugaiyumillai 1 - Deepababu

 



*1*


சென்னை சர்வதேச விமான நிலையம்!!!

விடியற்காலை மணி நான்கு முப்பது. 

Theeyumillai Pugaiyumillai - Deepababu

 




தீயுமில்லை புகையுமில்லை

Most Popular