Menu

Search This Blog

Malai Yenai Vattuthu - Deepa Babu

 




மாலை எனை வாட்டுது

கதைக்கரு


"Feel My Love"
A feel good romantic love story.

Kadhaluku Naan Puthithu - Deepa Babu

 




காதலுக்கு நான் புதிது

கதைக்கரு


உறவுகளின் கட்டாயத்தின் பேரில் மனம் முழுவதும் வெறுப்பு சூழ்ந்திருக்க, விருப்பமில்லா திருமணத்திற்கு மணமேடை ஏறுகிறாள் அவள். தன்னை வெறுப்பவளின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காது, தன் உடமையென அவளை துச்சமாக நினைத்து திருநாண் பூட்டுகிறான் அவன்.

Matru Kuraiyatha Mannavan 35 - Deepa Babu

 


*35*


"டியர் பிரெண்ட்ஸ் அன்ட் ரிலேட்டிவ்ஸ்!" என்கிற பரத் சீனிவாசனின் கணீர் குரலில், அந்த நட்சத்திர விடுதியின் பார்ட்டி ஹாலில் குழுமியிருந்த அத்தனைப் பேரும் ஒரு சேர திரும்பி மேடையை பார்த்தனர்.

Matru Kuraiyatha Mannavan 34 - Deepa Babu

 


*34*


சுவாஹனாவின் பார்வையில் தனக்குள் பதிலை தேடித் தவித்த ரித்திகா, "அது... வந்து... எனக்கு அப்படி பிரித்துப் பார்க்க தெரியவில்லைக்கா!" என்று தடுமாறினாள்.

Matru Kuraiyatha Mannavan 33 - Deepa Babu

 


*33*


அன்றைய மேட்ச் முடிந்து குடும்பத்தினர் கிளம்பும் நேரம் அருகில் வந்த பரத்தின் விழிகள் ரித்திகாவின் முகமாற்றத்தை நிதானமாக அளவிட்டது.

Matru Kuraiyatha Mannavan 32 - Deepa Babu

 


*32*


இந்திய அணியில் அபரிதமான வளர்ச்சிப் பெற்று வந்த பரத்தின் முன்னேற்றத்தை தடுக்கவென்றே அவனுக்கே தெரியாமல் ஊக்கமருந்தை அருந்த வைத்து அக்குற்றச்சாட்டின் பேரில் அணியை விட்டு அவனை நீக்கவும் வைத்தவனின் முகமூடி நாட்டு மக்களின் முன்னால் கிழிக்கப்படவும் கொதித்தெழுந்தனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

Matru Kuraiyatha Mannavan 31 - Deepa Babu

 


*31*


எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை.

Matru Kuraiyatha Mannavan 30 - Deepa Babu

 


*30*


"அடடா... வாங்க மாப்பிள்ளை. என் தங்கை உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள் போலிருக்கிறதே!" என்று சாய்கிருஷ்ஷை வரவேற்றபடி வைதேகியின் கைகளில் இருந்த முகுந்த்தை ஆசையுடன் வாங்கிக் கொண்டான் தேவா.

Matru Kuraiyatha Mannavan 29 - Deepa Babu

 


*29*


"ஏன் இந்த அக்கா இப்படி ஓடுகிறார்கள்?" என்று ரித்திகா திகைப்புடன் வினவ, "வா... நேரிலேயே பார்க்கலாம்!" என லேசான சிரிப்புடன் அவள் கைப்பற்றி இழுத்துக்கொண்டு பக்கத்து வீடான தன் சுகந்தி அத்தை வீட்டிற்குச் சென்றாள் வைதேகி.

Matru Kuraiyatha Mannavan 28 - Deepa Babu

 


*28*


பரத் உடன் தாங்களும் வளவன்குடிக்கு சென்ற சீனிவாசனும், கோதையும் அங்கே மகனுடன் நான்கு நாட்கள் தங்கியிருந்து அருகிலுள்ள பழம் பெருமை வாய்ந்த கோவில்களையும், இயற்கை எழிழ்மிகு சுற்றுலா தளங்களையும் கண்டுக் களித்து மகிழ்ந்ததுடன் தங்களின் மனமார்ந்த நன்றியையும் சிவலிங்கத்திடம் மறவாமல் தெரிவித்துக் கொண்டனர்.

Matru Kuraiyatha Mannavan 27 - Deepa Babu

 


*27*


"பரத்... உனக்கு திருமணம் முடிந்துவிட்டதா? எங்கள் மீது உள்ள கோபத்தில் தகவல் தெரிவிக்காமலே இருந்து விட்டாயா நீ?" என்று கோதை வாடிய முகத்துடன் வினவ, சீனிவாசனும் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார்.

Matru Kuraiyatha Mannavan 26 - Deepa Babu

 


*26*


உண்மை தெரிந்தால் விசனம் கொள்வானே என்று இவள் தவிக்க, மாறாக தன் தமையனிடம் வெளிப்பட்ட அதீத சிரிப்பு ஆர்த்திக்கு கடுப்பையே வரவழைத்தது.

Matru Kuraiyatha Mannavan 25 - Deepa Babu

 


*25*


"ஆர்த்தி..." என தயக்கத்துடன் அழைக்கும் தமையனிடம் பார்வையை திருப்பியவள், "என்னடா?" என்றாள் ஆதரவாக.

Matru Kuraiyatha Mannavan 24 - Deepa Babu

 


*24*


"செய்தி சானல்களில் ப்ளாஸ் நியூஸை பார்த்ததும் எங்களுக்கு முதலில் உன்னை நினைத்து தான் கவலையாக இருந்தது. இவன் அப்படி நடந்துக் கொள்பவன் இல்லையே, உண்மையில் மும்பையில் என்ன தான் நடந்துக் கொண்டிருக்கிறது, இவன் என்ன பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லையே என்று தவிக்கும் பொழுது தான் கிஷோர் உடைய சித்தியிடம் இருந்து நம் வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.

Matru Kuraiyatha Mannavan 23 - Deepa Babu

 


*23*


தான் வீட்டை விட்டு வெளியேறியதை மரத்த குரலில் கூறிய பரத், "அதன்பிறகு பரத் சீனிவாசன் என்கிற என்னுடைய அடையாளத்தையும், என்மீது நம்பிக்கை வைக்க மறுத்த இந்த உலகத்தையும் நான் முழுவதுமாக வெறுத்தேன்.

Matru Kuraiyatha Mannavan 22 - Deepa Babu

 


*22*


ஆர்த்தியின் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருந்த நிலையில் நெருங்கிய உறவில் இருந்து வயதில் மூத்தவர்கள் முதலில் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர ஆரம்பிக்க, இந்தப் பக்கம் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி வழியாகவும் உடனே கமிட்டி உறுப்பினர்களை நேரில் வந்து சந்திக்குமாறு பரத்திற்கு உத்திரவு வந்தது.

Matru Kuraiyatha Mannavan 21 - Deepa Babu

 


*21*


"ம்... இதைச் சொல்ல மறந்துவிட்டேனே... என் அப்பாவின் எதிர்பார்ப்பையும், ஆசையையும் சரியாக பூர்த்தி செய்தவள் என் தங்கை ஆர்த்தி தான். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் அவள் எழுதிய தபால்துறை தேர்வில் வெற்றிப் பெற்று கல்லூரி முதலாம் ஆண்டில் இருக்கும் பொழுதே அவளுக்கு மத்திய அரசின் தபால் துறையில் க்ளரிக்கல் ஜாப் கிடைத்து விட்டது.

Matru Kuraiyatha Mannavan 20 - Deepa Babu

 


*20*


"அப்பா பணம் தர மறுத்ததும், அடுத்து யாரிடம் பணம் திரட்டி எப்படி என் கேரியரை தொடர்வது என ஒன்றும் புரியாமல் ரொம்பவே தவித்துப் போனேன். அப்பொழுது தான் எங்களை பார்க்கவென்று என் அம்மா வழி பாட்டி வீட்டிற்கு வந்தார்கள்.

Matru Kuraiyatha Mannavan 19 - Deepa Babu

 


*19*


"பட்டயப்படிப்பு முடியும் தருவாயில் இறுதிப் பரீட்சையில் அரியர் விழுந்ததால் மிகவும் ஆத்திரம் கொண்ட அப்பா, என்னை பேசாத வார்த்தையில்லை.

Matru Kuraiyatha Mannavan 18 - Deepa Babu

 


*18*


"பொதுவாகவே பசங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் ரொம்ப அதிகமாக இருக்கும். இதற்கு நானும் விதி விலக்கில்லை, பெரும்பான்மையான சிறுவர்கள் போல் அந்த ஏரியாவில் உள்ள சிறுவர்களோடு இணைந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அந்த மட்டையை கையில் எடுத்துக்கொண்டு அவர்களோடு சேர்ந்து விளையாடுவதில் தான் எனக்கு அத்தனை பேரின்பம்.

Matru Kuraiyatha Mannavan 17 - Deepa Babu

 


*17*


"குட்மார்னிங் தத்து!" என்ற பேத்தியின் உற்சாக குரலில் பூஜைக்கு வேண்டி தோட்டத்தில் செவ்வரளி பூக்களை பறித்துக் கொண்டிருந்த சிவலிங்கம் மலர்ந்து திரும்பினார்.

Matru Kuraiyatha Mannavan 16 - Deepa Babu

 


*16*


ரித்திகா ஒரு கணம் தன் செவித்திறன் மேல் சந்தேகம் கொண்டு, "என்ன?" என்று புரியாமல் திரும்பி அவனிடம் குழப்பத்துடன் விவரம் கேட்டாள்.

Matru Kuraiyatha Mannavan 15 - Deepa Babu

 


*15*



"என்ன... உங்களுக்கு எல்லாம் தெரியுமா? அப்பொழுது உங்களின் அனுமதியோடு தான் இவர்கள் இருவரும் இந்த அளவிற்கு இங்கே துணிந்துப் பழகுகிறார்கள் என்று சரியாக சொல்லுங்கள்!" என்றார் சுப்பிரமணியம் ஆவேசமாக.

Matru Kuraiyatha Mannavan 14 - Deepa Babu

 


*14*


பரத் எதற்காக காலையிலேயே இவளை இத்தனை முறை அழைத்திருக்கிறான் என்கிற சிந்தனையில் தான் குழம்பி சிவலிங்கம் தடுக்கும் முன்னரே அவனிடம் உரையாட ஆரம்பித்து விட்டாள் ரித்திகா.

Matru Kuraiyatha Mannavan 13 - Deepa Babu

 


*13*


தன்னுடைய வலி மறைந்து பரத்தை எண்ணி மிகவும் கவலையாகிப் போனது ரித்திகாவிற்கு.

Matru Kuraiyatha Mannavan 12 - Deepa Babu

 


*12*


"அப்புறம் பரத்... பசங்களோடு விளையாடுவது எப்படி உனக்கு பிடித்திருக்கிறதா இல்லை பிள்ளைகள் எதுவும் தொந்திரவு செய்கிறார்களா?" என்று அவன் அபிப்பிராயத்தை கேட்டார் சிவலிங்கம்.

Matru Kuraiyatha Mannavan 11 - Deepa Babu

 


*11*


உடல் முழுவதும் ஒருவித மெல்லிய சிலிர்ப்பு விரவி ஓட, உள்ளிருந்து பிறக்கும் உணர்வுகளின் கொந்தளிப்பால் மேனியில் பிறந்த நடுக்கத்தை ஒரு கணம் கண்களை மூடி மெல்ல கட்டுக்குள் கொண்டு வந்து தன்னை நிதானித்த பரத், மெதுவாக இமைகளை பிரித்து ரித்திகாவின் முகம் நோக்கினான்.

Matru Kuraiyatha Mannavan 10 - Deepa Babu

 


*10*


"அட... என்னப்பா நீ? இவர்கள் என்ன ஜல்லிக்கட்டில் காளை மாடுகளை அடக்கும் மஞ்சுவிரட்டா நடத்துகிறார்கள்... ஏதோ இரண்டு பேட், பந்து, சுற்றிப் பத்து பேர் நின்று வருகிற பந்தை பிடிக்கிறார்கள். இதிலென்ன உனக்கு பிரச்சினை? விளையாட தெரியாது என்று வேறு தயங்குகிறாய், போ போ... போய் இரண்டு தடவை பந்தை தட்டினாய் என்றால் உனக்கே விளையாட்டு பிடிப்பட்டுவிடும்.

Matru Kuraiyatha Mannavan 9 - Deepa Babu

 


*9*


உங்கள் முகத்தை பார்க்காமல் தூங்க முடியவில்லை என்று ரித்திகா மிகவும் இயல்பாக பரத்திடம் கூறிச் செல்ல, சில நிமிடங்களுக்கு அசைவற்று நின்று விட்டான் அவன்.

Matru Kuraiyatha Mannavan 8 - Deepa Babu

 


*8*


இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், ட்வென்டி ட்வென்டி மேட்ச் என ஆர்ப்பாட்டமாக விளையாடி வந்தது.

Matru Kuraiyatha Mannavan 7 - Deepa Babu

 


*7*


தன்னை கொஞ்சமும் யோசிக்க விடாமல் படபடவென்று முடிவெடுத்து நட்பு பாராட்டும் ரித்திகாவை உண்மையில் பரத்திற்கும் பிடித்து தான் போயிற்று.

Matru Kuraiyatha Mannavan 6 - Deepa Babu

 


*6*


ஞாயிறு காலை எழுந்ததிலிருந்தே ரித்திகா ரொம்பவும் தீவிரமாக பக்கத்து வீட்டின் அசைவுகளை பிறர் கவனம் கவராவண்ணம் ஊன்றி கண்காணித்துக் கொண்டிருந்தாள்.

Matru Kuraiyatha Mannavan 5 - Deepa Babu

 


*5*


இரவு உணவு உண்ணும் வேளையில் வீட்டிற்கு வெளியே பைக்கை உதைத்துக் கிளப்புகின்ற ஓசைக் கேட்கவும் அது பரத்தாக இருக்குமோ, கம்பெனிக்கு கிளம்புகிறானா என்ன என்று தன் வாயில் இருந்த உணவோடு எண்ணத்திலும் அசைப்போட்டாள் ரித்திகா.

Matru Kuraiyatha Mannavan 4 - Deepa Babu

 


*4*


தாத்தாவின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்த பரத், இவள் சமைத்ததையா நாம் உண்கிறோம் என்று திகைத்துப் போய் பார்க்க, ரித்திகாவோ தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

Matru Kuraiyatha Mannavan 3 - Deepa Babu

 


*3*


தன்னை எரித்து விடுவதை போல் பார்த்துவிட்டு விலகிச் சென்றவன் தனது இருசக்கர வாகனத்தை அந்த இடமே பலமாக அதிரும்படி உதைத்து வேகமாக முறுக்கிவிட்டு கிளப்பிச் சென்றதிலேயே அவனுடைய கோபத்தின் அளவு உறைக்க அதிர்ந்துப் போய் நின்றிருந்தாள் ரித்திகா.

Matru Kuraiyatha Mannavan 2 - Deepa Babu

 

*2*


லேசாக வாயைப் பிளந்து கைமறைவில் கொட்டாவி ஒன்றை விட்டவாறே அறையை விட்டு வெளியே வந்த ரித்திகா, மூக்கு கண்ணாடி என்கின்ற பெயருக்கு ஏற்ப தாத்தா அணிந்திருந்த கண்ணாடி அவர் மூக்கின் சரிவில் முழுவதும் சரியாமல் இடையில் தடையிட்டு தேங்கி நிற்பதை சிரிப்புடன் பார்த்தவாறே அருகில் வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கையில் ஏதோ ஒரு தடிமனான தமிழ் புத்தகத்தை வைத்து கூர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவரின் தோளில் வசதியாக தலையை சாய்த்துக் கொண்டாள்.

Matru Kuraiyatha Mannavan 1 - Deepa Babu

 


*1*


"துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்;

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்

கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்,

Matru Kuraiyatha Mannavan - Deepa Babu

 



மாற்றுக் குறையாத மன்னவன்

கதைக்கரு

Oru Vithai Uyir Kondathu - Deepa Babu

 


ஒரு விதை உயிர் கொண்டது


இன்று உள்ள கல்வி கொள்கைகளால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் குறித்து சிறு அளவில் அலசி என் அறிவுக்கு எட்டிய ஒரு தீர்வையும் சொல்லி இருக்கிறேன். கதையின் கரு பின் பகுதியில் தான் வரும். அதற்குமுன் நம் நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க நாயகன், நாயகியின் மோதலையும், காதலையும் சுமந்துச் செல்லும் கதை.

*******

கதையிலிருந்து சிறு துளிகள்


இதழ்களில் பரவிய புன்சிரிப்புடன், “மாமா உன்னை காதலிக்கிறாரா மதி?” என ஆர்வத்துடன் கேட்டான் முகேஷ்.

தனக்குள் நடக்கும் களேபரத்தில் அவனை நிமிர்ந்தும் பாராமல் தன் நினைவுகளில் உழன்றபடி நடைப்பயின்றுக் கொண்டிருந்தவள் அளித்தப் பதிலில் இவன் அதிர்ச்சியாகி வாயைப் பிளந்து நின்றான்.

“ஐயோ... காதல் எல்லாம் இல்லை...” என அவள் மறுக்க ஆரம்பிக்கவும், ‘அது இல்லையென்றால் வேறு என்ன?’ என்று அவன் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன்பு அவளே பட்டென்று விஷயத்தை போட்டு உடைத்து விட்டாள்.

“என் கழுத்தில் தாலி தான் கட்டி விட்டார்!” என்று பரிதாபமாக முகத்தை வைத்தபடி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

‘காதலிக்கவில்லை... கல்யாணமே செய்துக் கொண்டாரா?’

தன் சொல்லில் அசையாமல் சிலையாக சமைந்து விட்டவனை எரிச்சலுடன் நோக்கிவிட்டு அருகில் சென்று அவனை பிடித்துப் பலமாக உலுக்கி எடுத்தாள் நிறைமதி.

“அண்ணா... உன்னிடம் தானே பேசிக் கொண்டிருக்கிறேன், என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்!”

ஆங்... என திடுக்கிட்டு விழித்தவன், ம்... ம்... என்றபடி, “அப்பொழுது உனக்கு திருமணம் முடிந்துவிட்டதா?” என்றான் இன்னமும் நம்ப முடியாமல்.

“கடவுளே... தாலி தான் கட்டினார் என்றேன், திருமணம் எல்லாம் இல்லை!” என அசட்டையாக கூறியவளை கொலை வெறியோடு நோக்கினான் முகேஷ்.

“உனக்கு மனதில் பெரிய சின்னத்தம்பி பிரபு என்று நினைப்பா...” என விழிகளை உருட்டினான்.

ஹான்... என விழித்துவிட்டு, “என்ன உளறுகிறாய் நீ?” என்று பெண்ணும் திரும்பி முறைத்தாள்.

“அப்புறம்... கழுத்தில் தாலி கட்டுவதற்கு பெயர் திருமணம் இல்லாமல் வேறு என்னவாம்?” என்று அவனும் பதிலுக்கு எகிறினான்.

“அதைத்தான் நான் உடனே கழற்றி வீசி விட்டேனே...” என மதி வேகமாக மொழியவும், “அடிப்பாவி... என்னடி சொல்கிறாய்? தாலியை கழற்றி வீசி விட்டாயா!” என்று நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தான் முகேஷ்.

‘ஐயோ... என்ன இது? ஆதரவு எதிர்பார்த்து நம்பி விஷயத்தை சொன்ன இவனே இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கிறான். அப்பொழுது வீட்டில் உள்ள மற்றவர்கள் என்ன சொல்வார்கள்?’ என்று அச்சத்தில் மிரண்டுப் போனாள் நம் மனுவின் தர்மபத்தினி.

“கடவுளே... என்னடா நீ இப்படி செய்து வைத்திருக்கிறாய்?” என்று தன் சிகையை அழுந்தக் கோதியபடி தலைகுனிந்திருந்த தங்கையுடன் சேர்ந்து தானும் தவிக்க ஆரம்பித்தான் முகேஷ்.

கீழுதட்டை அழுந்தக் கடித்தபடி மற்றவரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் நாம் என்கின்ற பயத்தில் கைவிரல்களை பிசைந்துக்கொண்டு முகம் முழுவதும் கலவரத்தை சுமந்தபடி பரிதாபமாக நின்றிருந்தவளை காணும்பொழுது நெஞ்சம் உருகித்தான் போனது தமையனுக்கு.

“எப்படி பாப்பா இது நடந்தது? உனக்கும், மாமாவிற்கும் தான் சுத்தமாக எதுவும் ஒத்துப் போகாதே... நீங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே மாட்டீர்கள். பிறகு எப்படி அவர் உன் கழுத்தில் தாலி கட்டினார்?” என்று விவரம் கேட்டான்.

***

சுகமான உறக்கத்தை விட்டு வெளிவர மனமில்லாதவளோ மகளை மீண்டும் இழுத்துப் பிடித்து அருகில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தாள்.

“ம்மா...” என முரண்டுப் பிடித்து அவள் அணைப்பில் இருந்து திமிறி வெளியே வந்தப் பிள்ளை அவளின் கன்னம் தொட்டு எழுப்ப ஆரம்பித்தது.

“பேபி... அம்மாவிற்கு ரொம்ப டயர்டாக இருக்கிறதுடா தங்கம். நான் தூங்க வேண்டும், நீ அப்பாவை எழுப்பு!” என்று விழிகளை திறவாமலே முனகினாள் நிறைமதி.

முகத்தை சுருக்கிய குழந்தை அம்மாவின் மீதேறி உருண்டுப் பிரண்டு முகம் சுளித்த அவளின், “ஏய்...” என்கிற அதட்டலை அலட்சியம் செய்து அப்பாவின் அருகில் சென்று விழுந்தாள்.

தன்னருகில் எதுவோ பொத்தென்று விழுந்ததில் திடுக்கிட்டு விழித்த மன்வந்த், தான் இமைகளை பிரித்துப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்து ஈயென்று உதடு பிரித்து பச்சரிசிப் பற்களை காட்டிய மழலையை கண்டு முகம் கனிந்தான்.

விரிந்தப் புன்னகையுடன், “என் பப்புக்குட்டி... எழுந்து விட்டாயாடா தங்கம்!” என்றவாறு மகளை தூக்கி தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான் அவன்.

அருகினில் திரும்பிப் பார்க்க மனைவி ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தாள். “அதென்ன உன் அம்மாவை விட்டுவிட்டு நீ என்னை வந்து எழுப்பி இருக்கிறாய்?” என்று கண்களை இடுக்கினான்.

நிலாவோ திருதிருவென்று விழித்துவிட்டு தந்தையை பார்த்து அசட்டுப் புன்னகை புரிந்தது. அதிலேயே தனக்கான விடையை கண்டுக்கொண்டவன் விஷமமாக சிரித்தான்.

“நாம் இரண்டு பேரும் எழுந்து விட்டோம் இல்லை... இவளுக்கு மட்டும் என்ன தூக்கம்?” என போலியாய் மனைவியின் புறம் ஒரு முறைப்பை செலுத்தியவன் மகளிடம் திரும்பி, “அம்மாவை எழுப்பலாமா?” என்று கேட்டு ஒற்றைக் கண்சிமிட்டினான்.

அதில் உற்சாகமானவள் தலையாட்டிக் கொண்டே மதியிடம் தவழ்ந்து செல்ல, இவன் மெதுவாக மனைவியின் முகத்தருகே குனிந்தான்.

அப்பாவின் செயலை கண்டு கிளுக்கிச் சிரித்த குழந்தை மீண்டும் அவனே தன் அம்மாவை நெருங்கவும் வேகமாக தடுத்து, “பாப்பா... பாப்பா...” என தன் நெஞ்சில் கைவைத்து காண்பித்துவிட்டு மதியை நெருங்கினாள்.

சின்ன முறுவலிப்புடன் மகளை பார்த்திருந்தவனின் முகம் அடுத்து அவள் செய்த செயலால் பேயறைந்தது போல் மாறியது.

“ஏய்... குட்டிம்மா!” என பாய்ந்து மகளை தூக்கிக் கொண்டவன், ‘ஐயோ... இவள் முன்னால் இனி கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும்!’ என்று பதற்றத்துடன் மனதில் குறித்துக் கொண்டான்.



Oru Vithai Uyir Kondathu - Part 2 (Kindle Link)










Azhage Azhage Yethuvum Azhage - Deepa Babu

 


அழகே அழகே எதுவும் அழகே


எந்தவொரு தீவிரமான சிந்திக்க கூடிய பகுதி இல்லாமல் முற்றிலும் மகிழ்ச்சியுடன் படித்து ரசிக்க கூடிய வகையில் எழுதிய கதை இது. இரு வேறு ஜோடிகளின் திருமண ஏற்பாடுகளும், அதைத் தொடர்ந்த கலாட்டாக்களுமாக கலகலப்புடன் நகரும் கதை. வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் அவர்கள் இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.


Azhage Azhage Yethuvum Azhage - Kindle Link




Unakagave Naan Vaazhgiren - Deepa Babu

 


உனக்காகவே நான் வாழ்கிறேன்


கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.


Unakagave Naan Vazhgiren - Kindle Link











Most Popular