விழியில் தெரியும் அழகு
கதைக்கரு
நம் விழியில் பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும் ஒருவரின் அழகு, ஒவ்வொருவரின் பார்வையிலும் வேறுபடும்.
ச்சே... இவங்க எவ்வளவு அழகா இருக்காங்க இல்லை... மெச்சுதலாக நினைப்பது ஒரு வகை.
அவங்களுக்கு என்ன குறை? ஆளை அசரடிக்கும் அழகு... பெருமூச்சோடு பொறாமைக் கொள்வது அடுத்த வகை.
இன்னொரு வகை, அந்த அழகை தாங்கள் அபகரித்துக் கொண்டு அனுபவிக்க நினைக்கும் வல்லூறுகளின் கொடூரம் சார்ந்து இருக்கும்.
இவற்றில் இந்தக் கதை எதைப் பற்றி பேசப் போகிறது?
வாருங்கள்... சினிமா துறையில் வெற்றிக் கொடி நாட்டிய அம்மா, மகனை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். அதோடு நாயகனின் கலக்கலான பெர்மான்ஸை வைத்து அவன் ஆன்ட்டி ஹீரோவா, இல்லையா என சற்றுக் குழம்பி விடைத் தேடவும் தயாராகுங்கள்.
“சார்... டேக் போகலாமா? உங்களுக்கான சீனை இன்னொரு முறைச் சொல்லிடவா?”
கேரவனில் இருந்து அப்பொழுது தான் உடை மாற்றி, தனது டச்சப் முடித்து வெளியே வந்த இந்திரஜித்திடம், மிகவும் பவ்யமாக சென்று விசாரித்தான் ரவிவர்மாவின் உதவியாளன் ஒருவன்.
“நோ... நீட் நாட்!”
பட்டென்று அவனை கத்தரித்தவனின் விழிகள், நாயகியின் கேரவன் பக்கம் பாய்ந்துச் சென்றது.
அதைக் கவனித்தவன், “மேடம்... இன்னும் அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆகிடுவாங்களாம் சார்!” என்று விவரம் தெரிவித்தான்.
ம்... என தலையசைத்துக் கொண்டவன், தனக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் இடம் நோக்கிச் சென்று, அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அடுத்த நிமிடம் அவசர நடையில் அவனருகே வந்த ஒருவர், குளிர்ந்த பழச்சாறு பாட்டில் ஒன்றினை கொடுக்க, சுவாதீனமாக அதைக் கையில் வாங்கி தன் உதட்டினில் பொருத்தியவன், பார்வையை கவனமாய் சுழல விட்டு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.
அங்கிருந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டில் திருப்தி அடைந்தவன், கண்ணசைவில் தனது பாடிகார்டை அருகில் அழைத்தான்.
“சார்!”
வேகமாக ஓடி வந்தவர் அவனிடம் குனிய, “தாஸ்... திரும்பத் திரும்ப நான் இதை உங்களுக்குச் சொல்லனும்னு அவசியமில்லைன்னு நினைக்கறேன். பீ அலர்ட் வித் பீப்பிள்ஸ். எப்பவும், யாரையும் நம்பாதீங்க.
ஸ்பாட்ல இருக்கவங்க மேல அதிக கவனம் வைங்க. மிஸ்.தேஜஸ்வினி பற்றிய எந்தவொரு டீடைல்ஸ்ஸும் வெளியில போகக் கூடாது... இன்க்ளுடிங் போட்டோக்ராப்ஸ், தட்ஸ் மச் இம்பார்டன்ட்!” என்று எச்சரித்தான்.
“ஷ்யூர் சார்... வி டேக் கேர் ஆப் எவ்ரிதிங், டோன்ட் வொர்ரி!”
“ம்... குட்!” என்றவன் தாஸிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த இடத்தில் சின்னப் பரபரப்பு எழுந்தது.
இந்திரஜித் பார்வையை திருப்ப, தூரத்தில் தேஜஸ்வினி தன் அழகுக்கலை நிபுணருடன் மெல்லமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
இள ரோஜா வண்ண சிம்பிளான அனார்க்கலி சுடிதார் அவள் நிறத்திற்கு எடுப்பாக தெரிய, கை, காது, கழுத்து என இயல்பான நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு உரிய மெல்லிய தங்க ஆபரணங்களை அணிந்திருந்தாள்.
நாயகியின் இடைக்குச் சற்று மேல் வரை நீண்டிருந்த கூந்தல், கேட்ச் க்ளிப்பால் இரண்டாக பிரிக்கப்பட்டு மயில் தோகையென அவள் முதுகில் படர விடப்பட்டிருக்க, எளிமையான அலங்காரத்தில் துலக்கி வைத்த குத்துவிளக்காக மிளிர்ந்தாள் பெண்.
தயங்கித் தயங்கி தன் வேல் விழிகளை சுழற்றியபடி அங்கே வந்தவள், இந்திரஜித்தின் முகத்தை கண்டதும் மெல்ல அமைதி அடைந்தாள்.
பெண்ணின் பார்வை தன் முகத்தில் பட்டதும் அவன் வரவேற்பாக கையசைக்க, இதழ்களை மெலிதாக விரித்தவள் அவனருகே செல்வதற்குள், நாயகனின் அருகிலேயே நாயகிக்குப் புதிதாக ஒரு நாற்காலி அவசரமாக கொண்டு வந்துப் போடப்பட்டது.
கீழிருந்து மேல்வரை தனது அலங்காரத்தை சரிப் பார்ப்பவனின் பார்வையை உணர்ந்து, “முகத்துக்கு மேக்கப் கொஞ்சம் அதிகமா போட்டது மாதிரி ஃபீலா இருக்கு. எதுவும் அசிங்கமா தெரியுதா?” என்று விழிகளில் கவலையோடு கேட்கும் பெண்ணிடம் பேசுவதற்கு வசதியாக, சிரித்தபடி சற்றே முன்னால் குனிந்து அமர்ந்தான் இந்திரஜித்.
“இதையே தான் மேக்கப் போட ஆரம்பிச்ச முதல் நாளில் இருந்து டைலாக் மாறாம திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்கே. நானும் அதே பதிலைத் தான் இப்பவும் சொல்லப் போறேன்.
உனக்கு மேக்கப்பே பிடிக்காதுங்கிறதை உன் பியுட்டீசியன் தாராகிட்ட முதல்லயே சொல்லியாச்சு. அவ அதுக்கேத்த மாதிரி உனக்கு லைட் மேக்கப் தான் செஞ்சு விடறா. இதுக்கும் கீழே குறைச்சா ஸ்க்ரீன்ல பேஸ் டல்லடிக்கும்!”
புன்சிரிப்புடன் தனக்குச் சமாதானம் சொல்பவனிடம் மெல்லமாக தலையாட்டிக் கொண்டவள், “இன்னும் எவ்வளவு நாள்ல இந்தப் படம் முடியும்?” என்றாள் மெல்லியக் குரலில் தவிப்புடன்.
இந்தரின் முகத்தில் சட்டென்று ஒரு இறுக்கம் பரவி, அதுவரை இருந்த இலகுத்தன்மை தொலைந்து அவன் கண்களில் கண்டனம் தெரியவும் தடுமாறியவள், அவசரமாக பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
அதோடு, “சாரி... நான் வீட்டுல கேட்டுக்கறேன்!” என வேகமாக ஒரு மன்னிப்பையும் வேண்டினாள்.
கீழே விழுந்து விட்டப் போதிலும் எழுவதற்கு சிறு முயற்சியும் எடுக்காமல், தரையோடு தரையாக புதைந்துப் போயிருந்து மௌனமாக முதுகு குலுங்க கதறி அழுபவளை இவன் என்னவென்று தேற்றுவது.
பெண்ணிற்குள் அழுகையை விதைத்தவனே, அதைத் துடைத்திடவும் முடிந்திடுமா என்ன? முடிந்திடத் தான் வேண்டும் என்றது அவனுடைய இளகிய இதயம்.
அவளருகில் கால்கள் மடங்க அமர்ந்தவன், “தேஜு...” என்று வருந்திய குரலில் அழைத்து தோள் பற்றித் தூக்க முயல, அவளோ அதற்கு ஒத்துழைக்க மறுத்தாள்.
“என்னை விடுங்க... நான் இப்படியே செத்துப் போறேன்!” என்று இன்னமும் ஏங்கி அழுதவளை, வலுக்கட்டாயமாய் தூக்கி அமர்த்தினான் இந்தர்.
அவனிடம் கோபமாக நிமிர்ந்து எதையோ சொல்ல வந்தவளை, “வாயை திறந்து ஒரு வார்த்தைப் பேசினேனா, அறைஞ்சுப் பல்லைக் கழட்டி உன் கையில கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பேன்!” என்றவன் முசுட்டு முகத்துடன் கண்களை உருட்டி மிரட்டவும், பெண்ணின் வாய் தன்னால் அடைந்துக் கொண்டது.
இது வரை அவன் அவளை கடிந்து தான் பேசி இருக்கிறானே தவிர, மேலே கை வைத்ததில்லை எனவும் அவனுடைய புதிய பரிமாணத்தில் அதிர்ந்து விழித்தவளை, ஒரு முறை அழுத்தமாகப் பார்த்து விட்டு எழுந்து வெளியே சென்றான் இந்திரஜித்.
சிந்திக்கும் திறனை இழந்ததன் விளைவால் செயலாற்றவும் மறந்து அசையாமல் தேஜஸ்வினி அப்படியே அமர்ந்திருக்க, இந்தர் அவளிடம் வந்தான்.
முகத்தை சுளித்துக் கொண்டு வேறுபுறம் கழுத்தை திருப்பிக் கொண்டவளின் செயலில் இதழ் மடித்துச் சிரித்துக் கொண்டவன், அவள் எதிரே சென்று அப்பாவி பாவனையுடன் நின்றான்.
பெண்ணின் விழிகள் உயர்ந்து அவனை உறுத்து விழிக்க அதை அசட்டை செய்தவன், “இதைக் கொஞ்சம் சூடா குடி. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு... தமிழ்நாட்டோட இந்த ஹேண்ட்ஸம் ஸ்டார், தான் கையாலேயே உனக்கு இந்தப் பாதாம் பாலை சூடா கலந்து எடுத்துக்கிட்டு வந்திருக்கான்!” என்று பெருமையாக சொன்னபடி தன் கையில் இருந்த பானத்தை அவள் முன்னால் நீட்ட, அவளோ அதை அலட்சியம் செய்தாள்.
“யாருக்கு வேணும் உங்க உபசரிப்பு எல்லாம்... என்னை தனியா விட்டுட்டு வெளியே போங்க!” என்று சிடுசிடுத்தாள் தேஜு.
“ஆஹான்... அது முடியாது. உன் வயசுக்கு கலர் கலரா கனவு கண்டு சிரிச்சிட்டு இருந்தேனா... சரி இந்தப் பொண்ணோட தனிமையையும், இனிமையையும் நாம கெடுக்க வேணாம்னு அமைதியா வெளியே போயிடுவேன்.
நீதான் இங்கே ஒட்டு மொத்தமா கங்கா தேவியை இறக்குமதி செஞ்சு வீட்டை முழுசா மூழ்கடிக்கப் பார்க்கறியே... அப்புறம் எப்படி நான் துணிஞ்சு உன்னை இதே நிலைமையில விட்டுட்டு நிம்மதியா போறது.
என்னை நான் காப்பாத்திக்க வேணாமா... வாழ வேண்டிய வயசுல மூச்சு முட்ட கண்ணீர் வெள்ளத்துல முழுகச் சொல்றியா நீ?”
“ஆ... போதும் நிறுத்துங்க. உங்க மொக்கையை கேட்கறதுக்கு நானே எழுந்து என் ரூமுக்குப் போறேன்!” என்று பொருமியவாறு எழ முயன்றவளுக்கு, சிறிது நேரம் முன்பு பொத்தென்று தரையில் வீழ்ந்ததில் கால்கள் எப்படியோ எக்குத்தப்பாக பிசகிக் கொண்டிருந்தது.
“இட்ஸ் ஓகே... அதுக்கு ஏன் இவ்வளவு வொர்ரி பண்ணிக்கறே? ஈவ்னிங் வரை நல்லா ரெஸ்ட் எடு. அப்பவும் சரி ஆகலைன்னா டாக்டரை பார்க்கலாம்!”
இன்னமும் தெளியாமல் உம்மென்று இருந்தவளை, “என்ன தேஜு?” என்று மென்மையாய் விசாரித்தான்.
“எனக்கு அம்மாவை பார்க்கனும்!” என்றாள் அவனிடம் தயக்கத்துடன்.
எதுவும் திட்டப் போகிறானோ என்றவள் கவலையாய் பார்த்திருக்க, நாயகனோ மெல்லமாக சிரித்துக் கொண்டான்.
“ஓகே... பார்த்தா மட்டும் போதும் இல்லை?”
“ஹான்...?” என்று புரியாது புருவங்களை சுருக்கினாள்.
“அம்மாவை லைவ்வா பார்க்கறியா?”
“லைவ்வான்னா... வீடியோ கால்லா? ஆனா நான் பேசக் கூடாதா?” என ஏக்கமாக கேட்டாள்.
ம்ஹும்... என அவன் மறுப்பாய் தலையசைக்க, விழிகளை சோர்வு தீண்ட அவனை இயலாமையுடன் பார்த்தவள், பின் ஒப்புதலாய் தலையாட்டினாள்.
“குட்... வெயிட் பண்ணு. ஒரு பைவ் மினிட்ஸ்ல அவங்களை பார்க்க அரேஞ்ச் பண்றேன்!” என்று தனது அறைக்குச் சென்றான்.
தன் அன்னையை பார்த்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என ஒருவித பரிதவிப்புடன் தேஜஸ்வினி அமர்ந்திருக்க, சொன்னதுப் போலவே அடுத்த ஐந்து நிமிடங்களில் அவளிடம் வேக நடையில் வந்தான் இந்திரஜித்.
அவன் கையில் இருந்த அலைபேசியையும், அவனையும் அவள் பரபரப்புடன் பார்க்க, சின்னக் கண்சிமிட்டலுடன் அவளிடம் அந்தக் காணொளியை காண்பித்தான் நாயகன்.
பூஜையறையில் அன்னலட்சுமி விழிகளை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். முகத்தில் எப்பொழுதும் இருக்கும் சோபை குறைந்து மெல்லிய வேதனை படர்ந்து இருப்பது, இவளை வெகுவாக கவலைக் கொள்ள செய்தது.
தன்னை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல், தன் நலம் குறித்தும் செய்தி ஒன்றும் கிடைக்காமல், இந்த ஆறு மாதங்களில் அவர் எவ்வளவு தவித்துக் கொண்டு இருப்பார் என்பது புரிந்ததில் மகளின் விழிகள் நீர் மழையை பொழிந்தது.
கண்ணீர் திரை பெற்றவளின் பிம்பத்தை மறைக்கவும், வேக வேகமாக அதனை கைகளில் துடைப்பவளை கண்டவன் உள்ளே சென்று டிஸ்யூ பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்துக் கொடுக்க, இமைகளை உயர்த்தி அவனை பார்வையால் எரித்து விட்டு வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள் தேஜு.
சிறு பிள்ளையென தன்னிடம் கோபத்தை காண்பிக்கும் பெண்ணின் மீதான பிடித்தம், இன்னும் இதயத்துள் ஆழமாய் சென்று ஊடுருவுவதில் மெல்லிய சோர்வு தீண்டவும், சன்னப் பெருமூச்சுடன் விரைந்து அவ்விடம் விட்டு அகன்றான் இந்தர்.
கண்ணும், மனமும் நிறைய அம்மாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அவர் கண் திறக்கும் வேளையில் பட்டென்று இணைப்பு துண்டிக்கப் பட்டதில் பெரியதாக ஏமாற்றம் கொண்டாள்.
உணர்வற்று கைபேசியின் திரையை அவள் வெறித்திருக்க, அடுத்த நொடியில் அது தன் இயக்கத்தை நிறுத்தி இருண்டுப் போனது. அதில் சுயம் பெற்றவள், நிமிர்ந்து அமர்ந்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
‘நீ அழறதால எதுவும் மாறுமான்னு மட்டும் யோசிச்சுப் பார்த்துக்கோ!’
இந்தரின் வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, சலிப்புடன் கையில் இருந்த அலைபேசியை முன்னிருந்த சிறு மேஜையில் வைத்தவள், இரு கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு இமைகளை மூடினாள்.
இறைவனை மட்டுமே நம்பி அவன் காலடியில் சரணடைந்து இருக்கும் தாயின் மங்களகரமான முகம் தெளிவாக மனக்கண்ணில் தெரிய, அவர் இடையை கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைக்க உள்ளம் வெகுவாக ஏங்கியது.
சட்டென்று நெற்றிச் சுருங்க வேகமாக இமைகளை திறந்தவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவசரமாக தலையை திருப்பி நேரம் பார்த்தாள், காலை ஏழு மணி.
முகத்தில் அதிர்ச்சியை தாங்கி அமர்ந்து இருப்பவளை பார்வையிட்டபடி அங்கே வந்த இந்திரஜித், அவள் எதிரே சாவகாசமாக அமர்ந்துப் புன்னகைத்தான்.
“என்ன? அதுக்குள்ளே கால் கட் ஆகிடுச்சா...”
அவனை கூர்மையாகப் பார்த்தவள், “அப்போ... நீங்க என்னை சும்மா பேச்சுக்கு ஒண்ணும் மிரட்டலை!” என்றாள் கோபமாக.
முதலில் யோசனையில் கண்களை இடுக்கியவன் பின், “டூ ஸ்மார்ட்!” என வசீகரச் சிரிப்புடன் பெண்ணை மெச்சிக் கொண்டான்.
பற்களை அழுந்தக் கடித்தவள், “அன்னிக்கு முதல் நாள் சொன்ன மாதிரி, என் வீட்டுல உங்க ஆளுங்க ஊடுருவி இருக்காங்க. அவங்க பக்கத்துல இருந்து நினைச்ச நேரம், உங்களோட தேவைக்கு ஏற்ப தகவல்களை அங்கிருந்து தர்றாங்க!” என்று படபடத்தாள்.
“ஈஸி தேஜு... ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறே? நான் என்ன இன்னிக்கா புதுசா ஆள் போட்டு இருக்கேன்? ஏழெட்டு மாச அறுதப் பழைய விஷயத்துக்கு போய் இத்தனை கோபப்படுறே!” என்று சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தன்னை சமாதானம் செய்பவனின் மீது இன்னமுமே அவளுக்குச் சினம் மூண்டது.
“ஆமா... அதுல என்ன சந்தேகம்? வேர்ல்ட்லயே வெரி வொர்ஸ்ட் வுமன்னா அது நீங்க தான். ச்சே... ஒரு பையன் தன் அம்மாவை பத்தி எது எல்லாம் அவன் காதால கேட்க கூடாதோ, அது அத்தனையையும் உங்களால நான் கேட்டுட்டு அவமானத்துல துடிச்சிட்டு இருக்கேன்.
நீங்க எனக்கு அம்மாவா கிடைச்சதை நினைச்சு, அவ்வளவு வெறுப்பா இருக்கு. வேற ஒரு நல்ல பேமிலியில மத்தப் பசங்க மாதிரி, நான் பொறந்து இருக்க கூடாதான்னு ரொம்ப ஏங்கி நிக்கறேன். நீங்க கேரக்டர்லஸ் வுமன் அப்படிங்கும் போது, அதே மாதிரி தொடர்ந்து இருந்து இருக்கலாமே...
எதுக்கு நடுவுல கல்யாணம் செஞ்சு எனக்கு பிறப்பு கொடுத்து, என் வாழ்க்கையில உங்க மகன்கிற ஒரு அடையாளத்தை வைச்சு, சொஸைட்டில இவ்வளவு பெரிய அசிங்கத்தை தேடித் தர்றீங்க. ஐ ஃபீல் வெரி அஷேம்ட்... ஐ ஹேட் யூ ம்மா... ஐ ஹேட் யூ!” என்று வெறுப்புடன் கூறி, சோர்வாக கண்களை மூடி சுருண்டுப் படுத்துக் கொண்டான் பதின்வயது இந்திரஜித்.
சில நிமிடங்கள் தொடர்ந்த அமைதியை கிழித்து, “இந்த அம்மாவை உனக்கு பிடிக்கலையா இந்தர்?” என்று பொறுமையாக விசாரித்தாள் சந்தியா.
“ஆமா... ஐ ஹேட் யூ!”
மகனின் குரல் பட்டென்று வெளியே வந்த நேரம், “ஹோ... சரி, அப்போ... நான் செத்துப் போயிடட்டுமா?” என நிதானமாக அவனுடைய அபிப்பிராயம் கேட்டாள் அவள்.
லேசாய் திகைத்தவன், ஒரு கணம் தனக்குள் அலைபாய்ந்தான். பிறகு தன் வேதனையை எண்ணி இறுகிப் போனவனாக, அவளிடம் வாயைத் திறவாமல் மௌனத்தை கடைப் பிடித்தான்.
“நீ அமைதியா இருக்கறதே... உன் மனசை வெளிப்படையா சொல்லுதுடா கண்ணா!”
இந்தர் அசையாமல் படுத்துக் கிடக்க, “அம்மா...” என்ற சந்தியாவின் மெல்லிய முனகலில் சட்டென்று திடுக்கிட்டு விழிகளை திறந்தவன், அவள் செய்து இருந்த வேலையில் பதறி எழுந்து அவளிடம் ஓடினான்.
கை நாடியை அறுத்துக் கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட தரையில் மடிந்து அமர்ந்தவளை கண்டு, “அம்மா...” என அலறி வேகமாக அவளின் கரம் பற்றினான்.
“அம்மா செத்துப் போயிடறேன்டா இந்தர்... அதுக்கு அப்புறமாவது நீ சந்தோசமா இருப்பியாடா... உன்னை அவமானப்படுத்தற இந்த ஊர், ஸ்கூல் எதுவும் வேணாம் உனக்கு. சந்தியாவோட பிள்ளைங்கிற அடையாளத்தை அழிச்சிட்டு, வேற எங்கேயாவது போர்டிங் ஸ்கூல்ல சேர்ந்து படி.
சேகர் மாமாட்ட ஹெல்ப் கேளு... அவர் ஒருத்தர் தான் நமக்கு நம்பிக்கையானவரு, நீ பெரியவனாகற வரைக்கும் அவர் உன்னை கேர் எடுத்துப்பார். அம்மாவோட ப்ராப்பர்டீஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ், டெபாசிட்ஸ் எல்லா டீடைல்ஸும் அவருக்குத் தெரியும்.
நீ பினான்ஸியலா எந்தச் சிரமும் இல்லாம, உன் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகலாம். அம்மா அதை எல்லாம் தெளிவா தயார் செஞ்சு வைச்சு இருக்கேன். உன்னை பெத்தவ கேரக்டர்லஸ் வுமன் அப்படிங்கிற கெட்டப் பேரைத் தவிர, உனக்கு வேற எந்த கஷ்டத்தையும் நான் வர விட மாட்டேன்!”
சந்தியா பேசப் பேச துடித்துப் போன இந்தர், “அம்மா... ஸாரிம்மா, எனக்கு நீங்க வேணும்மா. நான் இனிமே உங்களை இப்படி ஹர்ட் பண்ண மாட்டேன்!” என்று கண்ணீரோடு வருந்தினான்.
“வேணாம்டா இந்தர்... இந்த அம்மா ரொம்ப வொர்ஸ்ட் கேரக்டர் இருக்கறவ, உயிரோட இருந்தா உனக்கு அசிங்கத்தை தான் தேடித் தருவேன்!”
“நோம்மா... ப்ளீஸ், ப்ளீஸ்... ரியலி ஸாரிம்மா. இந்த மாதிரி எதுவும் சொல்லாதீங்க நீங்க!” என்று தாயிடம் மன்றாடினான்.
“அம்மா... உன்னை ரொம்ப நம்பினேன்டா கண்ணா... நீ என்னை சரியா புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன். உனக்கு புரியலைன்னாலும் என்னோட பிரச்சனை என்ன, நான் ஏன் அப்படி எல்லாம் செஞ்சேன்னு, என்கிட்ட விவரம் கேட்டாவது தெரிஞ்சுப்பேன்னு அவ்வளவு நம்பினேன்டா உன்னை.
கடைசியில நீயும் என்னை கை விட்டுட்டே இல்லை. ஊர்ல இருக்க எல்லோருக்கும் நான் மோசமானவளா தெரிஞ்சா பரவாயில்லை... உனக்கும் நான் அப்படித் தானே தெரியறேன்...” என வெடித்து அழுத சந்தியா,
“என்னால தாங்க முடியலை இந்தர். ரொம்ப வலிக்குதுடா... என் வாழ்க்கையில ஆரம்பத்துல ஒரு சிலரை நம்பி ரொம்பவே ஏமாந்துப் போய் இருக்கேன். அதுக்கப்புறம் மத்தவங்க மேலே நம்பிக்கை வைக்கிறதையே நான் விட்டுட்டேன்.
நீ என் மகன், என் இரத்தம்னு உன்னை மட்டும் தான்டா நான் முழுசா நம்பி இருந்தேன். ஆனா நீயும் அம்மாவை ஏமாத்திட்டியேடா... எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லை... என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு உண்மையான பாசம் வைக்க யாருமில்லை.
இதுக்கு மேலே நான் எதுக்கு உயிரோட இருக்கனும்? நான் செத்துப் போயிடறேன். என் பிள்ளை சந்தோசமா இருக்கத் தானே சாகறேன்... பரவாயில்லை போயிட்டுப் போறேன். உன் அம்மா சந்தியா அப்படிங்கிறதை மட்டும் மறக்காம அழிச்சிடு இந்தர், அது எந்த வயசுலயும் உன்னை அசிங்கப் படுத்தும்!”
தீவிரமாக பேசி இருந்தவளின் கண்கள் அடுத்து மயக்கத்தில் சொருகத் தொடங்கவும், மிரண்டுப் போனவன் வேகமாக அம்மாவின் உதவியாளரை அழைத்து விஷயத்தை கூறி, மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்து, சந்தியாவை தன் மடித் தாங்கி காரில் அமர்ந்தான்.
தான் விழித்து விட்டதை கண்டதும், “ஹாய் அத்தை... வெல்கம் பேக்!” என்று ஆரவாரமாய் தன்னை நெருங்கிய பெண்ணை இவள் நேசத்துடன் பார்க்க, இந்தர் சற்றுத் தள்ளி இறுக்கமாக நின்று இருந்தான்.
அதைக் கவனித்தவளின் முகம் வாடுவதைக் கண்டு தம்பியின் தோள்களை பற்றி அவளிடம் நகர்த்திச் சென்று, “உங்களோட பையன் உங்க மேலே செம காண்டுல இருக்கான்!” என்று கண்சிமிட்டினாள் பெண்.
மெலிதாய் உதடுகளை மலர்த்தியவளிடம், “நீங்க எழுந்துட்டிங்கன்னு டியூட்டி டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றேன்!” என்று அவர்களுக்கு தனிமைக் கொடுத்து வெளியேறினாள் பிரியா.
மகனின் முகத்தையே பெற்றவள் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க, சட்டென்று உடைந்து அவள் தோளில் முகம் புதைத்து கட்டிக் கொண்டு ஓசையின்றி விம்மி அழுதான் இந்தர்.
“ஐம் ரியலி ஸாரிம்மா... நான் வேணும்னே உங்களை ஹர்ட் பண்ணலை, அந்த நேரக் கோபம் என் அறிவை மழுங்க அடிச்சிடுச்சு. அதுக்குன்னு என்னை அப்படியே தனியா விட்டுட்டு போய்டுவீங்களா... நீங்களும் இல்லைன்னா உங்கப் பையன் இந்த உலகத்துல யாரும் இல்லாம, அனாதையா நின்னுடுவான்னு கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்கலை இல்லை...”
வேகமாக கேட்டவன் நிமிர்ந்து அன்னையை முறைத்துப் பார்த்து, “ஐ ஹேட் யூ!” என்றான் கோபமாக.
இதழ்களில் மெல்லிய கோடாய் புன்னகை கீற்று நெளிய, “டேய் இந்து...” என்று உருக்கமாக அழைத்தாள் சந்தியா.
“பேசாதீங்க நீங்க!” என்றவன் விறைப்பாய் அதட்ட, “சரி பேசலை... நீ பேசு கேட்கறேன்!” என்று விழிகள் கலங்கி நிற்க, மகனை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்து இருந்தாள்.
தாயின் தலையை ஆதூரமாய் தடவிக் கொடுத்து, “லைப்ல ரொம்பவே கஷ்டப்பட்டு, எல்லாத்தையும் கடந்து வந்து இருக்கீங்கம்மா நீங்க!” என்றவன் கவலையுடன் பேச, “பிரியா எதுவும் சொன்னாளா?” என்று லேசான திகைப்புடன் விசாரித்தாள் சந்தியா.
அவன் ஆமோதிப்பாய் தலை அசைக்க, மங்கை அவளின் உதடுகள் விரக்தியாய் வளைந்தது.
“எஸ்... ஒரு பொண்ணு தான் வாழ்க்கையில என்னென்ன கொடுமை எல்லாம் அனுபவிக்க கூடாதோ, அது அத்தனையையும் அனுபவிச்சு கடந்து வந்தவ தான் உன் அம்மா!”
சந்தன முகம் சிவந்து கலங்கிப் போக, குரல் அடர்ந்து வேதனையுடன் கூறத் தொடங்கியவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டவன், “இனி தன் பையனால சந்தோசத்தை மட்டும் தான் பார்ப்பாங்க, இந்த அம்மா!” என்று முடித்து அவள் கன்னத்தில் அன்புடன் முத்தமிட்டான் மகன்.
“இந்து...” என்று வாஞ்சையாய் அழைத்து தழுதழுத்தவளை, “நோ மோர் ட்யர்ஸ்... என் அம்மா எப்பவும் கலங்கிப் போகாம தலை நிமிர்ந்து நிக்கனும். மனசறிஞ்சு எந்த ஒரு தப்பும் செய்யாத அவங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்லைன்னு எப்பவும் போல, இன்னமும் தான் வாழ்க்கையில தைரியமா, தன்னம்பிக்கையா, இரும்பு மனுஷியா வாழ்ந்துக் காண்பிக்கணும்!” என்றான் கட்டளையாய்.
“கண்டிப்பா நிப்பேன்டா... சும்மாவே உன் அம்மாவை கையில பிடிக்க முடியாது. இப்போ மகனோட துணை வேற அவளுக்கு டபுள் ஸ்ட்ராங்க், எனர்ஜி பூஸ்டரா கிடைச்சு இருக்கு, இனி ஒரு கலக்கு கலக்கிட மாட்டேன்!”
“தட்ஸ் த ஸ்ப்ரிட், லவ் யூ அம்மா...” என்று ஆசையாய் தன் கன்னம் பிடித்துக் கொஞ்சியவனிடம், “என் மேலே இருந்த வருத்தம் எல்லாம் உனக்குப் போயிடுச்சாடா இந்தர்!” என தயக்கத்துடன் கேட்பவளை புன்னகையுடன் பார்த்தான் அவன்.
“ஒன்னு சொல்லவா... உங்களை பத்திக் கேட்டதுல இருந்து இனிமே அம்மான்னு பார்க்கறதை விட, என் பொண்ணா கேர் எடுத்துக்கனும்னு தோணுது. என்னடா இவன் சின்னப் பையன் எப்படி நம்மளை பார்த்துக்க முடியும்னு சாதாரணமா நினைக்காதீங்க.
சூழ்நிலை கொடுக்கற மெட்சூரிட்டில அது பையனோ, பொண்ணே தான் கூட பொறந்தவங்களை அப்பாவா, அம்மாவா இருந்து பொறுப்பா பார்த்துக்க முடியும் அப்படிங்கும் போது... உங்களை என்னால பார்த்துக்க முடியாதா?” என்றான் பையன் அனாயசமாக.
தான் ஓரிடத்தில் நில்லாமல் சுழன்று ஓடிக் கொண்டு இருக்கையில், தன் துணை இல்லாமல் பெரும்பாலும் தனிமையில் தன்னை மெருகேற்றிக் கொண்ட மகனின் ஆளுமை பெற்றவளுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், இந்தப் பதின்வயதில் இன்னமும் பொறுப்பாய் மிளிர்பவனை பெருமையாகப் பார்த்தாள் சந்தியா.
“என்ன பார்வை?”
அவன் அதட்டலுக்கு, “இல்லை... ரெண்டு வயசுல பறிக் கொடுத்த என் அப்பாவை, திரும்பவும் நாப்பத்தாறு வயசுல பார்க்கனும்னு எனக்கு விதி இருந்திருக்கு பாரேன்!” என்று நாடியில் கை வைத்து அதிசயத்தாள் அவள்.
ம்... என கண்களை இடுக்கியவன், “சரி... இனிமே இப்படி ஒரு முட்டாள்தனமான வேலை எல்லாம் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க!” என்று அவளிடம் தன் வலக்கையை நீட்டினான்.
“என்னது?” என்றவள் வாயைப் பிளக்க, “பின்னே... நீங்க செஞ்ச வேலைக்கு இதைவிட கேவலமா நான் ஏதாவது சொல்றதுக்கு உள்ளே, வேகமா சத்தியம் பண்ணிக் கொடுத்துடுங்க!” என கேலியாய் சிரித்தான்.
“ரொம்பத் தான்... போடா!” என்று உதட்டை சுழித்துக் கொண்டவள், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவன் கையில் தன் கையை வைத்து அழுத்தினாள்.
ச்சே... இவங்க எவ்வளவு அழகா இருக்காங்க இல்லை... மெச்சுதலாக நினைப்பது ஒரு வகை.
அவங்களுக்கு என்ன குறை? ஆளை அசரடிக்கும் அழகு... பெருமூச்சோடு பொறாமைக் கொள்வது அடுத்த வகை.
இன்னொரு வகை, அந்த அழகை தாங்கள் அபகரித்துக் கொண்டு அனுபவிக்க நினைக்கும் வல்லூறுகளின் கொடூரம் சார்ந்து இருக்கும்.
இவற்றில் இந்தக் கதை எதைப் பற்றி பேசப் போகிறது?
வாருங்கள்... சினிமா துறையில் வெற்றிக் கொடி நாட்டிய அம்மா, மகனை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். அதோடு நாயகனின் கலக்கலான பெர்மான்ஸை வைத்து அவன் ஆன்ட்டி ஹீரோவா, இல்லையா என சற்றுக் குழம்பி விடைத் தேடவும் தயாராகுங்கள்.
*******
Vizhiyil Theriyum Azhagu - Amazon Link
கதையிலிருந்து சிறு துளிகள்
“சார்... டேக் போகலாமா? உங்களுக்கான சீனை இன்னொரு முறைச் சொல்லிடவா?”
கேரவனில் இருந்து அப்பொழுது தான் உடை மாற்றி, தனது டச்சப் முடித்து வெளியே வந்த இந்திரஜித்திடம், மிகவும் பவ்யமாக சென்று விசாரித்தான் ரவிவர்மாவின் உதவியாளன் ஒருவன்.
“நோ... நீட் நாட்!”
பட்டென்று அவனை கத்தரித்தவனின் விழிகள், நாயகியின் கேரவன் பக்கம் பாய்ந்துச் சென்றது.
அதைக் கவனித்தவன், “மேடம்... இன்னும் அஞ்சு நிமிஷத்துல ரெடி ஆகிடுவாங்களாம் சார்!” என்று விவரம் தெரிவித்தான்.
ம்... என தலையசைத்துக் கொண்டவன், தனக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் இடம் நோக்கிச் சென்று, அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
அடுத்த நிமிடம் அவசர நடையில் அவனருகே வந்த ஒருவர், குளிர்ந்த பழச்சாறு பாட்டில் ஒன்றினை கொடுக்க, சுவாதீனமாக அதைக் கையில் வாங்கி தன் உதட்டினில் பொருத்தியவன், பார்வையை கவனமாய் சுழல விட்டு சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான்.
அங்கிருந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டில் திருப்தி அடைந்தவன், கண்ணசைவில் தனது பாடிகார்டை அருகில் அழைத்தான்.
“சார்!”
வேகமாக ஓடி வந்தவர் அவனிடம் குனிய, “தாஸ்... திரும்பத் திரும்ப நான் இதை உங்களுக்குச் சொல்லனும்னு அவசியமில்லைன்னு நினைக்கறேன். பீ அலர்ட் வித் பீப்பிள்ஸ். எப்பவும், யாரையும் நம்பாதீங்க.
ஸ்பாட்ல இருக்கவங்க மேல அதிக கவனம் வைங்க. மிஸ்.தேஜஸ்வினி பற்றிய எந்தவொரு டீடைல்ஸ்ஸும் வெளியில போகக் கூடாது... இன்க்ளுடிங் போட்டோக்ராப்ஸ், தட்ஸ் மச் இம்பார்டன்ட்!” என்று எச்சரித்தான்.
“ஷ்யூர் சார்... வி டேக் கேர் ஆப் எவ்ரிதிங், டோன்ட் வொர்ரி!”
“ம்... குட்!” என்றவன் தாஸிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த இடத்தில் சின்னப் பரபரப்பு எழுந்தது.
இந்திரஜித் பார்வையை திருப்ப, தூரத்தில் தேஜஸ்வினி தன் அழகுக்கலை நிபுணருடன் மெல்லமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
இள ரோஜா வண்ண சிம்பிளான அனார்க்கலி சுடிதார் அவள் நிறத்திற்கு எடுப்பாக தெரிய, கை, காது, கழுத்து என இயல்பான நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு உரிய மெல்லிய தங்க ஆபரணங்களை அணிந்திருந்தாள்.
நாயகியின் இடைக்குச் சற்று மேல் வரை நீண்டிருந்த கூந்தல், கேட்ச் க்ளிப்பால் இரண்டாக பிரிக்கப்பட்டு மயில் தோகையென அவள் முதுகில் படர விடப்பட்டிருக்க, எளிமையான அலங்காரத்தில் துலக்கி வைத்த குத்துவிளக்காக மிளிர்ந்தாள் பெண்.
தயங்கித் தயங்கி தன் வேல் விழிகளை சுழற்றியபடி அங்கே வந்தவள், இந்திரஜித்தின் முகத்தை கண்டதும் மெல்ல அமைதி அடைந்தாள்.
பெண்ணின் பார்வை தன் முகத்தில் பட்டதும் அவன் வரவேற்பாக கையசைக்க, இதழ்களை மெலிதாக விரித்தவள் அவனருகே செல்வதற்குள், நாயகனின் அருகிலேயே நாயகிக்குப் புதிதாக ஒரு நாற்காலி அவசரமாக கொண்டு வந்துப் போடப்பட்டது.
கீழிருந்து மேல்வரை தனது அலங்காரத்தை சரிப் பார்ப்பவனின் பார்வையை உணர்ந்து, “முகத்துக்கு மேக்கப் கொஞ்சம் அதிகமா போட்டது மாதிரி ஃபீலா இருக்கு. எதுவும் அசிங்கமா தெரியுதா?” என்று விழிகளில் கவலையோடு கேட்கும் பெண்ணிடம் பேசுவதற்கு வசதியாக, சிரித்தபடி சற்றே முன்னால் குனிந்து அமர்ந்தான் இந்திரஜித்.
“இதையே தான் மேக்கப் போட ஆரம்பிச்ச முதல் நாளில் இருந்து டைலாக் மாறாம திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்கே. நானும் அதே பதிலைத் தான் இப்பவும் சொல்லப் போறேன்.
உனக்கு மேக்கப்பே பிடிக்காதுங்கிறதை உன் பியுட்டீசியன் தாராகிட்ட முதல்லயே சொல்லியாச்சு. அவ அதுக்கேத்த மாதிரி உனக்கு லைட் மேக்கப் தான் செஞ்சு விடறா. இதுக்கும் கீழே குறைச்சா ஸ்க்ரீன்ல பேஸ் டல்லடிக்கும்!”
புன்சிரிப்புடன் தனக்குச் சமாதானம் சொல்பவனிடம் மெல்லமாக தலையாட்டிக் கொண்டவள், “இன்னும் எவ்வளவு நாள்ல இந்தப் படம் முடியும்?” என்றாள் மெல்லியக் குரலில் தவிப்புடன்.
இந்தரின் முகத்தில் சட்டென்று ஒரு இறுக்கம் பரவி, அதுவரை இருந்த இலகுத்தன்மை தொலைந்து அவன் கண்களில் கண்டனம் தெரியவும் தடுமாறியவள், அவசரமாக பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.
அதோடு, “சாரி... நான் வீட்டுல கேட்டுக்கறேன்!” என வேகமாக ஒரு மன்னிப்பையும் வேண்டினாள்.
*******
அவசரமாக கதவை திறந்தவனின் தேகம், தான் கண்ட காட்சியில் ஒரு கணம் நிலைகுலைந்துப் போனது. நெஞ்சில் தவிப்பு ஏறிட சில நொடிகள் அப்படியே செயலற்று நின்று விட்டவன், பின்பு வேகமாக கதவை மூடிவிட்டு பெண்ணை நெருங்கினான்.கீழே விழுந்து விட்டப் போதிலும் எழுவதற்கு சிறு முயற்சியும் எடுக்காமல், தரையோடு தரையாக புதைந்துப் போயிருந்து மௌனமாக முதுகு குலுங்க கதறி அழுபவளை இவன் என்னவென்று தேற்றுவது.
பெண்ணிற்குள் அழுகையை விதைத்தவனே, அதைத் துடைத்திடவும் முடிந்திடுமா என்ன? முடிந்திடத் தான் வேண்டும் என்றது அவனுடைய இளகிய இதயம்.
அவளருகில் கால்கள் மடங்க அமர்ந்தவன், “தேஜு...” என்று வருந்திய குரலில் அழைத்து தோள் பற்றித் தூக்க முயல, அவளோ அதற்கு ஒத்துழைக்க மறுத்தாள்.
“என்னை விடுங்க... நான் இப்படியே செத்துப் போறேன்!” என்று இன்னமும் ஏங்கி அழுதவளை, வலுக்கட்டாயமாய் தூக்கி அமர்த்தினான் இந்தர்.
அவனிடம் கோபமாக நிமிர்ந்து எதையோ சொல்ல வந்தவளை, “வாயை திறந்து ஒரு வார்த்தைப் பேசினேனா, அறைஞ்சுப் பல்லைக் கழட்டி உன் கையில கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பேன்!” என்றவன் முசுட்டு முகத்துடன் கண்களை உருட்டி மிரட்டவும், பெண்ணின் வாய் தன்னால் அடைந்துக் கொண்டது.
இது வரை அவன் அவளை கடிந்து தான் பேசி இருக்கிறானே தவிர, மேலே கை வைத்ததில்லை எனவும் அவனுடைய புதிய பரிமாணத்தில் அதிர்ந்து விழித்தவளை, ஒரு முறை அழுத்தமாகப் பார்த்து விட்டு எழுந்து வெளியே சென்றான் இந்திரஜித்.
சிந்திக்கும் திறனை இழந்ததன் விளைவால் செயலாற்றவும் மறந்து அசையாமல் தேஜஸ்வினி அப்படியே அமர்ந்திருக்க, இந்தர் அவளிடம் வந்தான்.
முகத்தை சுளித்துக் கொண்டு வேறுபுறம் கழுத்தை திருப்பிக் கொண்டவளின் செயலில் இதழ் மடித்துச் சிரித்துக் கொண்டவன், அவள் எதிரே சென்று அப்பாவி பாவனையுடன் நின்றான்.
பெண்ணின் விழிகள் உயர்ந்து அவனை உறுத்து விழிக்க அதை அசட்டை செய்தவன், “இதைக் கொஞ்சம் சூடா குடி. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு... தமிழ்நாட்டோட இந்த ஹேண்ட்ஸம் ஸ்டார், தான் கையாலேயே உனக்கு இந்தப் பாதாம் பாலை சூடா கலந்து எடுத்துக்கிட்டு வந்திருக்கான்!” என்று பெருமையாக சொன்னபடி தன் கையில் இருந்த பானத்தை அவள் முன்னால் நீட்ட, அவளோ அதை அலட்சியம் செய்தாள்.
“யாருக்கு வேணும் உங்க உபசரிப்பு எல்லாம்... என்னை தனியா விட்டுட்டு வெளியே போங்க!” என்று சிடுசிடுத்தாள் தேஜு.
“ஆஹான்... அது முடியாது. உன் வயசுக்கு கலர் கலரா கனவு கண்டு சிரிச்சிட்டு இருந்தேனா... சரி இந்தப் பொண்ணோட தனிமையையும், இனிமையையும் நாம கெடுக்க வேணாம்னு அமைதியா வெளியே போயிடுவேன்.
நீதான் இங்கே ஒட்டு மொத்தமா கங்கா தேவியை இறக்குமதி செஞ்சு வீட்டை முழுசா மூழ்கடிக்கப் பார்க்கறியே... அப்புறம் எப்படி நான் துணிஞ்சு உன்னை இதே நிலைமையில விட்டுட்டு நிம்மதியா போறது.
என்னை நான் காப்பாத்திக்க வேணாமா... வாழ வேண்டிய வயசுல மூச்சு முட்ட கண்ணீர் வெள்ளத்துல முழுகச் சொல்றியா நீ?”
“ஆ... போதும் நிறுத்துங்க. உங்க மொக்கையை கேட்கறதுக்கு நானே எழுந்து என் ரூமுக்குப் போறேன்!” என்று பொருமியவாறு எழ முயன்றவளுக்கு, சிறிது நேரம் முன்பு பொத்தென்று தரையில் வீழ்ந்ததில் கால்கள் எப்படியோ எக்குத்தப்பாக பிசகிக் கொண்டிருந்தது.
*******
இரு விழிகளையும் நீர்ப்படலம் முழுதாய் ஆக்கிரமித்து இருக்க, உதட்டை கடித்து அழுகையை அடக்க முயல்பவளை கனிவுடன் பார்த்தவன், அவளின் கன்னம் வருடி ஆறுதல் அளிக்கத் துடித்த கைவிரல்களை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான்.“இட்ஸ் ஓகே... அதுக்கு ஏன் இவ்வளவு வொர்ரி பண்ணிக்கறே? ஈவ்னிங் வரை நல்லா ரெஸ்ட் எடு. அப்பவும் சரி ஆகலைன்னா டாக்டரை பார்க்கலாம்!”
இன்னமும் தெளியாமல் உம்மென்று இருந்தவளை, “என்ன தேஜு?” என்று மென்மையாய் விசாரித்தான்.
“எனக்கு அம்மாவை பார்க்கனும்!” என்றாள் அவனிடம் தயக்கத்துடன்.
எதுவும் திட்டப் போகிறானோ என்றவள் கவலையாய் பார்த்திருக்க, நாயகனோ மெல்லமாக சிரித்துக் கொண்டான்.
“ஓகே... பார்த்தா மட்டும் போதும் இல்லை?”
“ஹான்...?” என்று புரியாது புருவங்களை சுருக்கினாள்.
“அம்மாவை லைவ்வா பார்க்கறியா?”
“லைவ்வான்னா... வீடியோ கால்லா? ஆனா நான் பேசக் கூடாதா?” என ஏக்கமாக கேட்டாள்.
ம்ஹும்... என அவன் மறுப்பாய் தலையசைக்க, விழிகளை சோர்வு தீண்ட அவனை இயலாமையுடன் பார்த்தவள், பின் ஒப்புதலாய் தலையாட்டினாள்.
“குட்... வெயிட் பண்ணு. ஒரு பைவ் மினிட்ஸ்ல அவங்களை பார்க்க அரேஞ்ச் பண்றேன்!” என்று தனது அறைக்குச் சென்றான்.
தன் அன்னையை பார்த்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது என ஒருவித பரிதவிப்புடன் தேஜஸ்வினி அமர்ந்திருக்க, சொன்னதுப் போலவே அடுத்த ஐந்து நிமிடங்களில் அவளிடம் வேக நடையில் வந்தான் இந்திரஜித்.
அவன் கையில் இருந்த அலைபேசியையும், அவனையும் அவள் பரபரப்புடன் பார்க்க, சின்னக் கண்சிமிட்டலுடன் அவளிடம் அந்தக் காணொளியை காண்பித்தான் நாயகன்.
பூஜையறையில் அன்னலட்சுமி விழிகளை மூடி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். முகத்தில் எப்பொழுதும் இருக்கும் சோபை குறைந்து மெல்லிய வேதனை படர்ந்து இருப்பது, இவளை வெகுவாக கவலைக் கொள்ள செய்தது.
தன்னை பற்றிய விவரம் எதுவும் தெரியாமல், தன் நலம் குறித்தும் செய்தி ஒன்றும் கிடைக்காமல், இந்த ஆறு மாதங்களில் அவர் எவ்வளவு தவித்துக் கொண்டு இருப்பார் என்பது புரிந்ததில் மகளின் விழிகள் நீர் மழையை பொழிந்தது.
கண்ணீர் திரை பெற்றவளின் பிம்பத்தை மறைக்கவும், வேக வேகமாக அதனை கைகளில் துடைப்பவளை கண்டவன் உள்ளே சென்று டிஸ்யூ பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்துக் கொடுக்க, இமைகளை உயர்த்தி அவனை பார்வையால் எரித்து விட்டு வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள் தேஜு.
சிறு பிள்ளையென தன்னிடம் கோபத்தை காண்பிக்கும் பெண்ணின் மீதான பிடித்தம், இன்னும் இதயத்துள் ஆழமாய் சென்று ஊடுருவுவதில் மெல்லிய சோர்வு தீண்டவும், சன்னப் பெருமூச்சுடன் விரைந்து அவ்விடம் விட்டு அகன்றான் இந்தர்.
கண்ணும், மனமும் நிறைய அம்மாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அவர் கண் திறக்கும் வேளையில் பட்டென்று இணைப்பு துண்டிக்கப் பட்டதில் பெரியதாக ஏமாற்றம் கொண்டாள்.
உணர்வற்று கைபேசியின் திரையை அவள் வெறித்திருக்க, அடுத்த நொடியில் அது தன் இயக்கத்தை நிறுத்தி இருண்டுப் போனது. அதில் சுயம் பெற்றவள், நிமிர்ந்து அமர்ந்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள்.
‘நீ அழறதால எதுவும் மாறுமான்னு மட்டும் யோசிச்சுப் பார்த்துக்கோ!’
இந்தரின் வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, சலிப்புடன் கையில் இருந்த அலைபேசியை முன்னிருந்த சிறு மேஜையில் வைத்தவள், இரு கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு இமைகளை மூடினாள்.
இறைவனை மட்டுமே நம்பி அவன் காலடியில் சரணடைந்து இருக்கும் தாயின் மங்களகரமான முகம் தெளிவாக மனக்கண்ணில் தெரிய, அவர் இடையை கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைக்க உள்ளம் வெகுவாக ஏங்கியது.
சட்டென்று நெற்றிச் சுருங்க வேகமாக இமைகளை திறந்தவளின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அவசரமாக தலையை திருப்பி நேரம் பார்த்தாள், காலை ஏழு மணி.
முகத்தில் அதிர்ச்சியை தாங்கி அமர்ந்து இருப்பவளை பார்வையிட்டபடி அங்கே வந்த இந்திரஜித், அவள் எதிரே சாவகாசமாக அமர்ந்துப் புன்னகைத்தான்.
“என்ன? அதுக்குள்ளே கால் கட் ஆகிடுச்சா...”
அவனை கூர்மையாகப் பார்த்தவள், “அப்போ... நீங்க என்னை சும்மா பேச்சுக்கு ஒண்ணும் மிரட்டலை!” என்றாள் கோபமாக.
முதலில் யோசனையில் கண்களை இடுக்கியவன் பின், “டூ ஸ்மார்ட்!” என வசீகரச் சிரிப்புடன் பெண்ணை மெச்சிக் கொண்டான்.
பற்களை அழுந்தக் கடித்தவள், “அன்னிக்கு முதல் நாள் சொன்ன மாதிரி, என் வீட்டுல உங்க ஆளுங்க ஊடுருவி இருக்காங்க. அவங்க பக்கத்துல இருந்து நினைச்ச நேரம், உங்களோட தேவைக்கு ஏற்ப தகவல்களை அங்கிருந்து தர்றாங்க!” என்று படபடத்தாள்.
“ஈஸி தேஜு... ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறே? நான் என்ன இன்னிக்கா புதுசா ஆள் போட்டு இருக்கேன்? ஏழெட்டு மாச அறுதப் பழைய விஷயத்துக்கு போய் இத்தனை கோபப்படுறே!” என்று சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் தன்னை சமாதானம் செய்பவனின் மீது இன்னமுமே அவளுக்குச் சினம் மூண்டது.
*******
“அம்மா... வொர்ஸ்ட்டா இந்தர்?” என்று நடுங்கும் குரலில் அமைதியாக கேட்டாள் சந்தியா.“ஆமா... அதுல என்ன சந்தேகம்? வேர்ல்ட்லயே வெரி வொர்ஸ்ட் வுமன்னா அது நீங்க தான். ச்சே... ஒரு பையன் தன் அம்மாவை பத்தி எது எல்லாம் அவன் காதால கேட்க கூடாதோ, அது அத்தனையையும் உங்களால நான் கேட்டுட்டு அவமானத்துல துடிச்சிட்டு இருக்கேன்.
நீங்க எனக்கு அம்மாவா கிடைச்சதை நினைச்சு, அவ்வளவு வெறுப்பா இருக்கு. வேற ஒரு நல்ல பேமிலியில மத்தப் பசங்க மாதிரி, நான் பொறந்து இருக்க கூடாதான்னு ரொம்ப ஏங்கி நிக்கறேன். நீங்க கேரக்டர்லஸ் வுமன் அப்படிங்கும் போது, அதே மாதிரி தொடர்ந்து இருந்து இருக்கலாமே...
எதுக்கு நடுவுல கல்யாணம் செஞ்சு எனக்கு பிறப்பு கொடுத்து, என் வாழ்க்கையில உங்க மகன்கிற ஒரு அடையாளத்தை வைச்சு, சொஸைட்டில இவ்வளவு பெரிய அசிங்கத்தை தேடித் தர்றீங்க. ஐ ஃபீல் வெரி அஷேம்ட்... ஐ ஹேட் யூ ம்மா... ஐ ஹேட் யூ!” என்று வெறுப்புடன் கூறி, சோர்வாக கண்களை மூடி சுருண்டுப் படுத்துக் கொண்டான் பதின்வயது இந்திரஜித்.
சில நிமிடங்கள் தொடர்ந்த அமைதியை கிழித்து, “இந்த அம்மாவை உனக்கு பிடிக்கலையா இந்தர்?” என்று பொறுமையாக விசாரித்தாள் சந்தியா.
“ஆமா... ஐ ஹேட் யூ!”
மகனின் குரல் பட்டென்று வெளியே வந்த நேரம், “ஹோ... சரி, அப்போ... நான் செத்துப் போயிடட்டுமா?” என நிதானமாக அவனுடைய அபிப்பிராயம் கேட்டாள் அவள்.
லேசாய் திகைத்தவன், ஒரு கணம் தனக்குள் அலைபாய்ந்தான். பிறகு தன் வேதனையை எண்ணி இறுகிப் போனவனாக, அவளிடம் வாயைத் திறவாமல் மௌனத்தை கடைப் பிடித்தான்.
“நீ அமைதியா இருக்கறதே... உன் மனசை வெளிப்படையா சொல்லுதுடா கண்ணா!”
இந்தர் அசையாமல் படுத்துக் கிடக்க, “அம்மா...” என்ற சந்தியாவின் மெல்லிய முனகலில் சட்டென்று திடுக்கிட்டு விழிகளை திறந்தவன், அவள் செய்து இருந்த வேலையில் பதறி எழுந்து அவளிடம் ஓடினான்.
கை நாடியை அறுத்துக் கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட தரையில் மடிந்து அமர்ந்தவளை கண்டு, “அம்மா...” என அலறி வேகமாக அவளின் கரம் பற்றினான்.
“அம்மா செத்துப் போயிடறேன்டா இந்தர்... அதுக்கு அப்புறமாவது நீ சந்தோசமா இருப்பியாடா... உன்னை அவமானப்படுத்தற இந்த ஊர், ஸ்கூல் எதுவும் வேணாம் உனக்கு. சந்தியாவோட பிள்ளைங்கிற அடையாளத்தை அழிச்சிட்டு, வேற எங்கேயாவது போர்டிங் ஸ்கூல்ல சேர்ந்து படி.
சேகர் மாமாட்ட ஹெல்ப் கேளு... அவர் ஒருத்தர் தான் நமக்கு நம்பிக்கையானவரு, நீ பெரியவனாகற வரைக்கும் அவர் உன்னை கேர் எடுத்துப்பார். அம்மாவோட ப்ராப்பர்டீஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ், டெபாசிட்ஸ் எல்லா டீடைல்ஸும் அவருக்குத் தெரியும்.
நீ பினான்ஸியலா எந்தச் சிரமும் இல்லாம, உன் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகலாம். அம்மா அதை எல்லாம் தெளிவா தயார் செஞ்சு வைச்சு இருக்கேன். உன்னை பெத்தவ கேரக்டர்லஸ் வுமன் அப்படிங்கிற கெட்டப் பேரைத் தவிர, உனக்கு வேற எந்த கஷ்டத்தையும் நான் வர விட மாட்டேன்!”
சந்தியா பேசப் பேச துடித்துப் போன இந்தர், “அம்மா... ஸாரிம்மா, எனக்கு நீங்க வேணும்மா. நான் இனிமே உங்களை இப்படி ஹர்ட் பண்ண மாட்டேன்!” என்று கண்ணீரோடு வருந்தினான்.
“வேணாம்டா இந்தர்... இந்த அம்மா ரொம்ப வொர்ஸ்ட் கேரக்டர் இருக்கறவ, உயிரோட இருந்தா உனக்கு அசிங்கத்தை தான் தேடித் தருவேன்!”
“நோம்மா... ப்ளீஸ், ப்ளீஸ்... ரியலி ஸாரிம்மா. இந்த மாதிரி எதுவும் சொல்லாதீங்க நீங்க!” என்று தாயிடம் மன்றாடினான்.
“அம்மா... உன்னை ரொம்ப நம்பினேன்டா கண்ணா... நீ என்னை சரியா புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன். உனக்கு புரியலைன்னாலும் என்னோட பிரச்சனை என்ன, நான் ஏன் அப்படி எல்லாம் செஞ்சேன்னு, என்கிட்ட விவரம் கேட்டாவது தெரிஞ்சுப்பேன்னு அவ்வளவு நம்பினேன்டா உன்னை.
கடைசியில நீயும் என்னை கை விட்டுட்டே இல்லை. ஊர்ல இருக்க எல்லோருக்கும் நான் மோசமானவளா தெரிஞ்சா பரவாயில்லை... உனக்கும் நான் அப்படித் தானே தெரியறேன்...” என வெடித்து அழுத சந்தியா,
“என்னால தாங்க முடியலை இந்தர். ரொம்ப வலிக்குதுடா... என் வாழ்க்கையில ஆரம்பத்துல ஒரு சிலரை நம்பி ரொம்பவே ஏமாந்துப் போய் இருக்கேன். அதுக்கப்புறம் மத்தவங்க மேலே நம்பிக்கை வைக்கிறதையே நான் விட்டுட்டேன்.
நீ என் மகன், என் இரத்தம்னு உன்னை மட்டும் தான்டா நான் முழுசா நம்பி இருந்தேன். ஆனா நீயும் அம்மாவை ஏமாத்திட்டியேடா... எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்லை... என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு உண்மையான பாசம் வைக்க யாருமில்லை.
இதுக்கு மேலே நான் எதுக்கு உயிரோட இருக்கனும்? நான் செத்துப் போயிடறேன். என் பிள்ளை சந்தோசமா இருக்கத் தானே சாகறேன்... பரவாயில்லை போயிட்டுப் போறேன். உன் அம்மா சந்தியா அப்படிங்கிறதை மட்டும் மறக்காம அழிச்சிடு இந்தர், அது எந்த வயசுலயும் உன்னை அசிங்கப் படுத்தும்!”
தீவிரமாக பேசி இருந்தவளின் கண்கள் அடுத்து மயக்கத்தில் சொருகத் தொடங்கவும், மிரண்டுப் போனவன் வேகமாக அம்மாவின் உதவியாளரை அழைத்து விஷயத்தை கூறி, மருத்துவமனைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்து, சந்தியாவை தன் மடித் தாங்கி காரில் அமர்ந்தான்.
*******
மயக்கம் தெளிந்து கண் விழித்த சந்தியா, தன்னெதிரே மலர்ந்த முகத்துடன் தங்களுக்குள் உரையாடிக் கொண்டு இருக்கும் மகனையும், பிரியாவையும் சோர்வாய் கவனித்தாள்.தான் விழித்து விட்டதை கண்டதும், “ஹாய் அத்தை... வெல்கம் பேக்!” என்று ஆரவாரமாய் தன்னை நெருங்கிய பெண்ணை இவள் நேசத்துடன் பார்க்க, இந்தர் சற்றுத் தள்ளி இறுக்கமாக நின்று இருந்தான்.
அதைக் கவனித்தவளின் முகம் வாடுவதைக் கண்டு தம்பியின் தோள்களை பற்றி அவளிடம் நகர்த்திச் சென்று, “உங்களோட பையன் உங்க மேலே செம காண்டுல இருக்கான்!” என்று கண்சிமிட்டினாள் பெண்.
மெலிதாய் உதடுகளை மலர்த்தியவளிடம், “நீங்க எழுந்துட்டிங்கன்னு டியூட்டி டாக்டர்கிட்ட சொல்லிட்டு வர்றேன்!” என்று அவர்களுக்கு தனிமைக் கொடுத்து வெளியேறினாள் பிரியா.
மகனின் முகத்தையே பெற்றவள் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க, சட்டென்று உடைந்து அவள் தோளில் முகம் புதைத்து கட்டிக் கொண்டு ஓசையின்றி விம்மி அழுதான் இந்தர்.
“ஐம் ரியலி ஸாரிம்மா... நான் வேணும்னே உங்களை ஹர்ட் பண்ணலை, அந்த நேரக் கோபம் என் அறிவை மழுங்க அடிச்சிடுச்சு. அதுக்குன்னு என்னை அப்படியே தனியா விட்டுட்டு போய்டுவீங்களா... நீங்களும் இல்லைன்னா உங்கப் பையன் இந்த உலகத்துல யாரும் இல்லாம, அனாதையா நின்னுடுவான்னு கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்கலை இல்லை...”
வேகமாக கேட்டவன் நிமிர்ந்து அன்னையை முறைத்துப் பார்த்து, “ஐ ஹேட் யூ!” என்றான் கோபமாக.
இதழ்களில் மெல்லிய கோடாய் புன்னகை கீற்று நெளிய, “டேய் இந்து...” என்று உருக்கமாக அழைத்தாள் சந்தியா.
“பேசாதீங்க நீங்க!” என்றவன் விறைப்பாய் அதட்ட, “சரி பேசலை... நீ பேசு கேட்கறேன்!” என்று விழிகள் கலங்கி நிற்க, மகனை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்து இருந்தாள்.
தாயின் தலையை ஆதூரமாய் தடவிக் கொடுத்து, “லைப்ல ரொம்பவே கஷ்டப்பட்டு, எல்லாத்தையும் கடந்து வந்து இருக்கீங்கம்மா நீங்க!” என்றவன் கவலையுடன் பேச, “பிரியா எதுவும் சொன்னாளா?” என்று லேசான திகைப்புடன் விசாரித்தாள் சந்தியா.
அவன் ஆமோதிப்பாய் தலை அசைக்க, மங்கை அவளின் உதடுகள் விரக்தியாய் வளைந்தது.
“எஸ்... ஒரு பொண்ணு தான் வாழ்க்கையில என்னென்ன கொடுமை எல்லாம் அனுபவிக்க கூடாதோ, அது அத்தனையையும் அனுபவிச்சு கடந்து வந்தவ தான் உன் அம்மா!”
சந்தன முகம் சிவந்து கலங்கிப் போக, குரல் அடர்ந்து வேதனையுடன் கூறத் தொடங்கியவளை வேகமாக இழுத்து அணைத்துக் கொண்டவன், “இனி தன் பையனால சந்தோசத்தை மட்டும் தான் பார்ப்பாங்க, இந்த அம்மா!” என்று முடித்து அவள் கன்னத்தில் அன்புடன் முத்தமிட்டான் மகன்.
“இந்து...” என்று வாஞ்சையாய் அழைத்து தழுதழுத்தவளை, “நோ மோர் ட்யர்ஸ்... என் அம்மா எப்பவும் கலங்கிப் போகாம தலை நிமிர்ந்து நிக்கனும். மனசறிஞ்சு எந்த ஒரு தப்பும் செய்யாத அவங்க யாருக்கும் குறைஞ்சவங்க இல்லைன்னு எப்பவும் போல, இன்னமும் தான் வாழ்க்கையில தைரியமா, தன்னம்பிக்கையா, இரும்பு மனுஷியா வாழ்ந்துக் காண்பிக்கணும்!” என்றான் கட்டளையாய்.
“கண்டிப்பா நிப்பேன்டா... சும்மாவே உன் அம்மாவை கையில பிடிக்க முடியாது. இப்போ மகனோட துணை வேற அவளுக்கு டபுள் ஸ்ட்ராங்க், எனர்ஜி பூஸ்டரா கிடைச்சு இருக்கு, இனி ஒரு கலக்கு கலக்கிட மாட்டேன்!”
“தட்ஸ் த ஸ்ப்ரிட், லவ் யூ அம்மா...” என்று ஆசையாய் தன் கன்னம் பிடித்துக் கொஞ்சியவனிடம், “என் மேலே இருந்த வருத்தம் எல்லாம் உனக்குப் போயிடுச்சாடா இந்தர்!” என தயக்கத்துடன் கேட்பவளை புன்னகையுடன் பார்த்தான் அவன்.
“ஒன்னு சொல்லவா... உங்களை பத்திக் கேட்டதுல இருந்து இனிமே அம்மான்னு பார்க்கறதை விட, என் பொண்ணா கேர் எடுத்துக்கனும்னு தோணுது. என்னடா இவன் சின்னப் பையன் எப்படி நம்மளை பார்த்துக்க முடியும்னு சாதாரணமா நினைக்காதீங்க.
சூழ்நிலை கொடுக்கற மெட்சூரிட்டில அது பையனோ, பொண்ணே தான் கூட பொறந்தவங்களை அப்பாவா, அம்மாவா இருந்து பொறுப்பா பார்த்துக்க முடியும் அப்படிங்கும் போது... உங்களை என்னால பார்த்துக்க முடியாதா?” என்றான் பையன் அனாயசமாக.
தான் ஓரிடத்தில் நில்லாமல் சுழன்று ஓடிக் கொண்டு இருக்கையில், தன் துணை இல்லாமல் பெரும்பாலும் தனிமையில் தன்னை மெருகேற்றிக் கொண்ட மகனின் ஆளுமை பெற்றவளுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், இந்தப் பதின்வயதில் இன்னமும் பொறுப்பாய் மிளிர்பவனை பெருமையாகப் பார்த்தாள் சந்தியா.
“என்ன பார்வை?”
அவன் அதட்டலுக்கு, “இல்லை... ரெண்டு வயசுல பறிக் கொடுத்த என் அப்பாவை, திரும்பவும் நாப்பத்தாறு வயசுல பார்க்கனும்னு எனக்கு விதி இருந்திருக்கு பாரேன்!” என்று நாடியில் கை வைத்து அதிசயத்தாள் அவள்.
ம்... என கண்களை இடுக்கியவன், “சரி... இனிமே இப்படி ஒரு முட்டாள்தனமான வேலை எல்லாம் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க!” என்று அவளிடம் தன் வலக்கையை நீட்டினான்.
“என்னது?” என்றவள் வாயைப் பிளக்க, “பின்னே... நீங்க செஞ்ச வேலைக்கு இதைவிட கேவலமா நான் ஏதாவது சொல்றதுக்கு உள்ளே, வேகமா சத்தியம் பண்ணிக் கொடுத்துடுங்க!” என கேலியாய் சிரித்தான்.
“ரொம்பத் தான்... போடா!” என்று உதட்டை சுழித்துக் கொண்டவள், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவன் கையில் தன் கையை வைத்து அழுத்தினாள்.

No comments:
Post a Comment