*2*
பைக்கில் தன் அலுவலகம் விரைந்தவன், வழியில் எதிர்பட்ட அனைவரிடமும் புல்லட் ட்ரைன் வேகத்திற்கு ஒரு ஹாயுடன் தன் கேபினிற்குச் சென்றான்.
'பின்னே நேரம் கழித்து எழுந்து, அம்மாவிடம் அடி வாங்கிவிட்டு... கிளம்பி வரும் வழியில் உள்ள டிராபிக்கையெல்லாம் சந்துப் பொந்தில் புகுந்து கடந்து ரைட் டைமுக்கு வர வேண்டும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தால் இப்படித்தான், ஷ்... அப்பா... கேட்கிற உங்களுக்கே இவ்வளவு டயர்டாக இருக்கிறதே... அனுபவிக்கிற எனக்கு எப்படி இருக்கும்? முடியலை...' என்று ஓய்ந்துப்போய் சேரில் தொப்பென்று விழுந்தான் ஜெய்சங்கர்.
"ஹஹா... என்னடா இன்றைக்கும் பைக்கை பிளைட்டாக்கி பறந்து தான் வந்தாயா?" என்றான் சக ஊழியர் மார்ட்டின்.
"அட... ஏன்டா நீ வேறு வயிற்றெரிச்சலை கிளப்புகிறாய்? அதைப்பற்றி பேசி என்னை மேலும் வெறுப்பேற்றாதே... சரி இன்றைய ஹாட் நியூஸ் என்ன அன்ட் நம்முடைய செட்யூல் என்ன?" என்று விவரம் கேட்டான்.
"ம்... ஆஸ் யுஸ்வெல் தான் நத்திங் ஸ்பெஷல். பதினோரு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிற அந்த முன்னால் அரசியல் தலைவரை நான் போய் இன்டர்வ்யூ பண்ண வேண்டும் என்பதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது.
குடிகாரனை போல் தினம் ஒரு அறிக்கை விடுகிற இவனுங்களை எல்லாம் நம்பி நாம் ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறோம். இதில் இவனுங்க கேடித்தனங்கள் அனைத்தையும் லிஸ்ட் போட்டு பைல் செய்து வைத்துக் கொண்டு மேலே இருப்பவன் இவர்களை மிரட்டி நம் பூமியையும், கலாச்சாரத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறான்!" என்றான் மார்ட்டின் முழுவெறுப்போடு.
"ம்... ம்..." என்று ஜெய் ஆமோதிப்பாய் தலையசைக்க, கதவை திறந்துக்கொண்டு வேகமாக நஸ்ரின் உள்ளே வந்தாள்.
"ஹேய் ஜேம்ஸ்பான்ட்... உன்னை தலை கூப்பிடுகிறார்!" என்றாள்.
"ஏய்... நீ ஒரு இவள்... ஆளுக்கொரு பட்டப்பெயரை வைத்து விடுகிறாய். கிரியேட்டிவ் ஹெட்டை தலை என்றும், இவனை மஸ்கிட்டோ மேட் என்றும் சொல்லி ஆளை கொல்கிறாய்.
ஒரு சில நேரம் நீ யாரை குறிப்பிடுகிறாய் என்றே தெரியாமல் நான் ஆள் மாற்றிப் போய் விழிக்கிறேன்!" என்று புலம்பியபடி எழுந்து வந்தவன் தன்னைக் கண்டு கேலியாக சிரித்தவளின் தலையில் வேகமாக ஒரு கொட்டு கொட்டிவிட்டு வெளியே பாய்ந்து ஓடிவிட்டான்.
"டேய்..." என்று கத்தியவள், "நீயெல்லாம் எப்படி தான் இந்த ஜந்துவுடன் ஒரே கேபினில் இருக்கிறாயோ?" என்று மார்ட்டினை பார்த்து சலித்துக் கொண்டாள்.
அதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தவனோ, "பெயருக்கு தான் ஒரே கேபின்... முக்கால்வாசி நேரம் ஆளுக்கொரு பக்கம் தானே இருக்கிறோம், அதனால் பிழைத்தேன்!" என்றான் தோள்களை குலுக்கிச் சின்னக் குசும்புடன்.
கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த ஜெய்யை ஆர்வமாக வரவேற்ற ராம்குமார், "ஹாய் ஜெய்... மார்னிங்!" என்றார் உற்சாகமாக.
"மார்னிங் சார்! என்ன காலையில் வந்ததும் வராததுமாக என்னை தேடி இருக்கிறீர்கள்? எனி இம்பார்ட்டன்ட் நியூஸ்?"
"ஆமாம்பா... நீ சொல்லிக் கொண்டிருந்தாயே வீக்என்டில் 'என்னை தெரியுமா?' என்று புதிதாக ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கலாம் என்று. நம் மாநிலத்தில் புதைந்திருக்கின்ற நிறைய அரிய விஷயங்கள், பகுதிகள் பற்றிய தகவல்கள், அப்புறம்... கால மாற்றத்தால் சிதிலமடைந்து அழிந்துக் கொண்டிருக்கிற நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை இன்றைய தலைமுறையும் தெரிந்துக்கொள்வது போல் நிகழ்ச்சியை அமைக்க வேண்டும் என்று சொன்னாயே!"
"ம்... ஆமாம், அதற்காக தான் அடுத்த வாரம் தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று விவரங்களை சேகரித்து வரலாம் என நான் திட்டமிட்டிருக்கிறேன்!"
"எஸ்... அதற்குத்தான் நான் உன்னை கூப்பிட்டேன். தஞ்சாவூர் அடுத்தமுறை திட்டமிட்டுக் கொள், முதலில் அரியலூர் சென்று வா.
நேற்று இரவு என் நண்பன் ஒருவன் போன் செய்திருந்தான், அரியலூர் அருகே உள்ள நிண்ணியூர் என்ற ஊரில் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருக்கிறான் அவன்.
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரிக்கும் பொழுது தான் வரப்போகும் உன்னுடைய நிகழ்ச்சி குறித்து அவனிடம் யதேச்சையாக கூறினேன், அவனுக்கு ஒரே சந்தோசம்.
ரொம்ப நல்ல விஷயம் நிச்சயம் செய்யுங்கள், அப்படியே எங்கள் ஊரை பற்றியும் நிறைய வரலாற்று தகவல்கள் இருக்கிறது அதையும் படம் பிடித்துக் காட்டுங்கள் என்றான்.
நீ என்ன செய்கிறாய்? நேராக அவன் வீட்டிற்குச் சென்றுவிடு, விஸ்வநாதன் வீட்டு மாடியிலேயே தனியாக ஒரு அறை இருக்கிறதாம். அதில் நீ வசதியாக தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்து விடுவதாக அவன் கூறினான்.
என்ன ஓகேவா... இதில் உன்னுடைய ஒப்பீனியன் என்ன?" என்று அவன் அபிப்பிராயம் கேட்டார் ராம்.
"ம்... ஓகே... எனக்கொன்றும் பிரச்சினையில்லை, நான் அடுத்த வாரம் அரியலூரே சென்று வருகிறேன். நீங்கள் விஸ்வநாதன் சாரிடம் விவரம் சொல்லி விடுங்கள், அப்படியே அவர் மொபைல் நம்பரை எனக்கு கொடுங்கள். கிளம்பும்பொழுது அவரை நேரடியாக தொடர்புகொள்ள எனக்கு வசதியாக இருக்கும்!" என்றான் ஜெய்.
அடுத்து வந்த புதன்கிழமையில் செண்பகத்திடம் விடைப்பெற்றுக் கொண்டு தன்னுடைய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயனில் அரியலூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.
அவனுக்கு பைக் ரைடிங் என்பது மிகவும் விருப்பமான விஷயம். அதிலும் லாங் டிரைவ் என்றால் காற்றுக்கு இணையாக அதிவேகமாக பறப்பான்.
எந்த மாதிரி ரோடு என்றாலும், ஊர் என்றாலும் அவன் பைக் தான் அவனுக்கு வசதியாக இருக்கும்.
அதிகாலை நான்கு மணி அளவில் சென்னையில் கிளம்பியவன் நிண்ணியூரை அடையும் பொழுது ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.
விஸ்வநாதனிடம் தொடர்புகொண்டு வீட்டிற்கான வழியை கேட்டுத் தெரிந்துக்கொண்டவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் வாசலில் வண்டியை நிறுத்தினான்.
ஜெய்யுடைய புல்லட் சத்தம் கேட்டு வெளியே வந்தவர் அவனை அன்புடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
பயண விவரம் விசாரித்தவர் தன் மனைவி ராஜலட்சுமியை அழைத்து அவனுக்கு அறிமுகப்படுத்தினார்.
"வணக்கம்மா!" என்று கரம் குவித்தவன், "உங்கள் பசங்க எல்லாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?" என்று பொதுவாக விசாரித்துப் பேச்சை ஆரம்பித்தான்.
"எனக்கு ஒரு பெண், ஒரு பையன் இருவருமே வெளியூரில் தான் இருக்கிறார்கள். பெண் திருமணமாகி திருச்சியில் இருக்கிறாள், பையன் கோயமுத்தூரில் வேலையில் இருக்கிறான்!” என்றார் விஸ்வா.
"ஓ!" என்றவனிடம், "நீங்கள் அறைக்குச் சென்று கை, கால் அலம்பி வாங்கப்பா டிபன் சாப்பிடலாம். ஏங்க... அழைச்சிட்டு போங்க!" என்றார் லட்சுமி தன் கணவனிடம்.
இதோ... என்று அவனை அழைத்துக் கொண்டு படியேறியவர் அவன் தங்க வேண்டிய அறையை காண்பித்துவிட்டு கீழே இறங்கினார்.
பெரிய அறையாக வசதியாகத்தான் இருந்தது, அங்கிருந்த செல்ஃபில் தன் பேக்பேகை வைத்தவன் அறைக்கு வெளியே இருந்த குளியலறையில் சென்று முகம் கழுவி வந்தான்.
உணவை முடித்துவிட்டு விஸ்வநாதனிடம் தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டு இடங்களை பார்வையிட கிளம்பினான் ஜெய்.
கண்களில் கண்ணாடி சகிதமாக கிளம்பியவனை கண்டு ஆச்சரியமடைந்த லட்சுமி, "என்னப்பா இது? வரும்பொழுது கூலிங் கிளாஸ் போட்டிருந்தீர்கள், இப்பொழுது என்னடாவென்றால் பவர் கண்ணாடி போட்டிருப்பது போல் தெரிகிறது!" என்று அவன் முகத்தை உற்றுப் பார்த்தார்.
லேசாக சிரித்தவன், "இல்லைம்மா... இது பவர் கண்ணாடி இல்லை. ஒரு சில காரணங்களுக்காக வெளியே செல்லும்பொழுது இதை நான் அணிந்துக் கொள்வது அவசியம்!" என்று மேம்போக்காய் கூறினான்.
லட்சுமிக்கு முழுதாக விவரம் புரியவில்லை என்றாலும் அவன் விளக்கிச் சொல்ல விருப்பமில்லாமல் பூசி மெழுகுகிறான் என்பது தெரிந்ததால், சரி ஏதாவது முக்கியமான தேவையாக இருக்கும் என்று மேலே துருவாமல் விட்டு விட்டார்.
தன் இலக்கை நோக்கி ஜெய்சங்கர் பயணிக்கும் பொழுது அவன் மனதில் அம்மாவட்டத்தை குறித்து விஸ்வநாதன் கூறிய விவரங்கள் அலைமோதி பெரும் வியப்பை அளித்தது.
அரியலூர் மாவட்டத்திற்கு தொன்மையான மற்றும் புகழ்வாய்ந்த வரலாறு ஒன்று உள்ளது. இதன் காலங்கள் இரண்டு இலட்ச வருடங்களுக்கும் முன்னுள்ள வரலாற்றுக்கு முந்தைய நாகரீகத்திற்கு கொண்டு செல்கிறது.
ஆழியின் கீழ் அரியலூர் :
மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம் கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின் காலநிலை மாற்றங்களால், கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ்(gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது.
இந்தப் பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. பதினைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் 'கிரிட்டாசியஸ்' காலம் என குறிப்பிடுகின்றனர்.
கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு இனங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்கள் ஆகின.
எனவே அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் 'புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா' எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இம்மாவட்டத்தில் காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக்காரணங்களால், இம்மாவட்டம் பழங்கால உயிரின படிமப் புதையல்களின் இருப்பிடமாக உள்ளது.
அவருக்கு பள்ளிக்கு நேரமாகி விட்டதால் நீங்கள் முதலில் ஊரை நன்றாகச் சுற்றிப் பாருங்கள் பிறகு இரவில் இன்னும் விவரமாக சொல்கிறேன். சங்க காலம், பல்லவர்கள், சோழப் பேரரசு என்று நிறைய வரலாற்று பொக்கிஷங்கள் இங்கே அடங்கியிருக்கிறது என்றார் விஸ்வநாதன் பெருமையாக.
ஊரின் எல்லையை அடைந்தவன் வண்டியை ஒரு மரத்தடியில் நிறுத்திவிட்டு சுற்றிலும் பாலையாக இருந்த இடத்தை மெல்ல நடந்துப் பார்வையிட ஆரம்பித்தான்.
ஒரு சில இடங்களில் தேவைக்கேற்ப இவன் புகைப்படம் எடுக்க மொபைல் சிணுங்கியது. பார்த்தால்... செண்பகம்.
"சொல்லும்மா!"
"ஓ... சாரி சாரி, வந்தவுடனே அவர்கள் இருவரும் மாற்றி மாற்றிப் பேசவும் மறந்துவிட்டேன். பிறகு... இங்கே ஊரை சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டேன்!"
"இல்லைம்மா... நோ மம்மி... செல்லக் குட்டியில்லை, கோபித்துக்கொள்ள கூடாது. இனி நிச்சயம் மறக்காமல் போன் செய்துப் பேசுகிறேன். ஓகே... சாப்பிட்டாயா?"
"ம்... நான் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டேன். இப்பொழுது தான் சுற்றிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் இங்கே நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறதும்மா... அவர் சொல்லச் சொல்ல எனக்கு ஒரே ஆச்சரியம்!"
"ம்... ம்... எல்லாவற்றையும் சேகரித்து முதல் நிகழ்ச்சியாக இதைத்தான் என் சேனலில் போடப் போகிறேன். அதுவும் இந்த ஜேம்ஸ்பான்ட் பெயரில் தான்!" என்றான் அலட்டலாக.
"ஹாங்... இதையெல்லாம் தொடராக டிவியில் கொண்டு வந்தால் தான் விஷயம் நிறைய மக்களை சென்றடையும். அது குறித்தும் ஊருக்கு வந்தவுடன் எங்கள் சேனல் ஹெட்டிடம் பேச வேண்டும்!" என்று பேசிக் கொண்டிருந்த ஜெய், அவன் வண்டி ஹாரன் சத்தம் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

No comments:
Post a Comment