*6*
"ஹேய் குட்டிபப்பூ... கண்ணுக்குத் தெரியாமல் நீ செய்கின்ற வேலையெல்லாம் புதிதாக வீட்டிற்கு வருகின்ற யாராவது பார்த்தால்... ஐயோ! இந்த வீட்டில் ஏதோ ஜெகன் மோகினி இருக்கும் போலிருக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!" என்று கலகலவென்று கண்களில் நீர் வழிய வாய் விட்டு சிரித்தான் ரமணன்.
"ஜெகன் மோகினியா... அப்படின்னா என்னப்பா?" என்றாள் அவன் சிரித்ததால் உண்டான மகிழ்ச்சி குரலில் பொங்க.
"அப்படின்னா... டிவியில் மந்திர மாயஜால படங்கள் போடுவார்கள் இல்லை... அதில் வரும் ஒரு கேரக்டர்! யார் கண்களுக்கும் தெரியாமல் அது இந்த மாதிரி தான் ஏதாவது வேலை செய்யும்!" என்றான் புன்னகையுடன்.
"ஓ... சரி சரி!" என்றவள் கப்பில் சர்க்கரை போடுவதை கண்டவன், தன்னை மறந்து இயல்பாக எழுந்த குழந்தை என்ற உணர்வில் அவளை தடுத்தான்.
"பால் ரொம்ப சூடாகி விட்டது போலிருக்கிறது... நீ கப்பில் ஊற்ற வேண்டாம்டா. கைகளில் கொட்டி விடப் போகிறது!" என்று வேகமாக எழுந்து பதற்றத்தோடு அவளருகில் வந்தான்.
"அச்சோ... அப்பா நான் ஏற்கனவே செத்து போனவள்பா. நீங்க மறந்து போய்ட்டீங்க... என்னை இந்த சூடு ஒன்றும் செய்யாது!" என்று கிளுக்கிச் சிரித்தபடி பாலை எடுத்து கப்பில் ஊற்றினாள்.
ரமணன் முகம் இறுக எதுவும் பேசாமல் திரும்பச் சென்று கட்டிலில் அமர்ந்தான்.
பால் கப்பை டீபாய் மேல் வைத்தவள், அவனோடு உரசியபடி கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவன் எதுவும் பேசாமல் புருவத்தை சுளித்தபடி உம்மென்று அமர்ந்திருப்பதை, அப்பொழுது தான் கவனித்தவள் போல, "என்னாச்சுப்பா?" என்றாள் கவலை தோய்ந்த குரலில்.
"நீ பேசுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை பாப்பா... அதென்ன எப்பொழுது பார் நான் இறந்து விட்டேன்... இறந்து விட்டேன் என்று சொல்லி சிரிக்கிறாய், எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. நீ கடவுளிடம் இருக்கும் தெய்வக் குழந்தை... என்று என்னிடம் வந்தாயோ அதிலிருந்து என் மகள் நீ. உன் சுகதுக்கம் அனைத்திலும் எனக்கு பங்கு இருக்கிறது. இன்னொரு தடவை இந்த மாதிரி ஏதாவது சொன்னாய் என்றால் நான் எப்பொழுதும் உன்னோடு பேசவே மாட்டேன். எவ்வளவு பெரிய வார்த்தையை சர்வ சாதரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறாய் நீ..." என்று அவன் கோபமாக பேசிக் கொண்டே போனான்.
"ஸாரிப்பா... இனிமேல் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன். என்னுடன் பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள்பா..." என்று அவள் தேம்பிக் கொண்டே கூறவும் தான் அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்பதே ரமணனுக்கு தெரிந்தது.
சட்டென்று திகைத்தவனுக்கு, அப்பொழுது தான் தன் தவறு புரிந்தது.
'ஐயோ... என்ன மடத்தனம் செய்து விட்டேன். சிறு குழந்தையிடம் போய் என் மன வருத்தத்தையும், கோபத்தையும் காட்டி விட்டேனே...' என்று வருந்தியவன், அவளை தன்னோடு சேர்ந்து அணைத்துக் கொண்டான்.
"ஐ ஆம் சாரிடா கண்ணம்மா! அப்பா தான் தப்பு செய்து விட்டேன். உனக்கு என்ன தெரியும் குழந்தை என்று யோசிக்காமல் கோபமாக பேசி விட்டேன். ஆனால் தயவுசெய்து இனிமேல் அந்த மாதிரி எதுவும் சொல்லாதேடா... அப்பாவுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது!" என்றான் வருத்தமாக.
"ம்... சரிப்பா. இனிமேல் நான் அந்த மாதிரி எதுவும் பேசவில்லை. நீங்க டென்ஷன் ஆகாதீங்க... சாப்பிடுங்க!" என்றாள் பொறுப்புடன்.
மெல்ல சிரித்தவன், "என் செல்ல புஜ்ஜு..." என்று கொஞ்சியபடி மீண்டும் ஆசையாக அணைத்துக் கொண்டான்.
சற்று நேரம் கழித்து, தன் லேப்பில் வந்திருக்கும் முக்கியமான மெயிலை செக் செய்து ரிப்ளை செய்துக் கொண்டிருந்தான் ரமணன்.
"அப்பா!"
"ம்..."
"நம்ம வீட்டுக்கு பின்னாடி ஒரு இடத்துல அன்னிக்கு பூவெல்லாம் வைச்சுட்டு அழுதீங்களே... அங்க யார் இருக்காங்க?" என்று அவள் கேட்டதும், அவன் விரல்கள் டைப் செய்ய மறுத்து வேலை நிறுத்தம் செய்தன.
ரமணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, அவள் மீண்டும் அப்பா என்று அழைத்தாள்.
"ம்..." என்றான்.
"என்னாச்சு?" என்று கேட்டாள்.
"ஒன்றும் இல்லைம்மா..." என்று கண்கள் மூடி ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்தியவன், பின் பெருமூச்செரிந்து மெல்ல கண்களைத் திறந்தான்.
தன் கேள்விக்கு பதில் எதிர்பார்த்து அவள் தன்னையே நோக்கி கொண்டிருப்பதை... அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
"அந்த சமாதியில் இருப்பது... உன் அக்கா!" என்றான் அமைதியாக.
"அக்காவா...?"
"ம்... அப்பாவுடைய முதல் பெண்!" என்றான் சற்று தடுமாற்றத்துடன்.
குரலில் எந்தவித வேறுபாடும் தோன்றிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், விழிகளை மறந்து விட்டான்.
அதிலிருந்து புறப்பட்ட நீர் அவன் கன்னங்கள் தாண்டி கழுத்தில் இறங்கியது.
"அச்சோ... சாரிப்பா, நான் உங்களை அழ வைத்து விட்டேன்!" என்றாள் அவனை கட்டிக்கொண்டு கண்ணீர் குரலில்.
மெல்ல தன்னை சுதாரித்தவன், "பரவாயில்லைடா கண்ணம்மா... என் வாழ்வின் மிகப்பெரிய ஈடு செய்ய முடியாத துன்பம் அது. ஆனால் இன்று நீ வந்துவிட்டதால்... அதனுடைய பாதிப்பு எனக்கு சற்றுக் குறைந்துள்ளது!" என்று ஆதரவு தேடும் குழந்தை போல் அவள் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டான்.
"அப்பா... அவங்க..." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவள், சட்டென்று அமைதியானாள்.
"என்னம்மா?"
"ஒன்றுமில்லைப்பா..." என்றாள் தயக்கத்துடன்.
"ஹேய்... என்ன? ஏதோ கேட்க வந்து விட்டு அமைதியாகி விட்டாய்... அப்பாவிடம் கேட்பதற்கென்ன சொல்!"
"இல்லை... வந்து... அந்த அக்காவும் இற... ம்... இல்லையில்லை... சாமிகிட்ட போயிட்டாங்களா?" என்று கேட்டாள்.
அவளின் தயக்கத்தையும், புத்திசாலித்தனத்தையும் எண்ணி, அந்த நேரத்திலும் முகம் கொள்ளா சிரிப்புத் தோன்றியது ரமணனுக்கு.
"என் ஸ்வீட் பப்பு... என் பாப்பா எவ்வளவு புத்திசாலித்தனமாக யோசித்துப் பேசுகிறாள்!" என்று அவளை கொஞ்சியபடி மீண்டும் சிரித்தவன், லேசாக சாய்ந்தமர்ந்தான்.
"ஆமாம்டா... சாமியிடம் சென்று விட்டாள்!"
"ஏன்பா... அவங்களுக்கு என்னாச்சு?"
"ம்..." என்று புருவம் சுருக்கியபடி இழுத்தவன், "ஒன்றுமில்லைடா... உடம்பு சரியில்லாமல் அந்த மாதிரி ஆயிற்று!" என்று வேகமாக கூறி விஷயத்தை அத்தோடு முடித்தான்.
"ஓ... அம்மா?" என்று அவள் கேட்க, அவன் முகத்தில் சற்று சலிப்பு ஏற்பட்டது.
"ப்ச்... அவளும் இல்லை, சாமியிடம் சென்று விட்டாள். போதும் விடுடா... இதற்கு மேல் அதைப் பற்றி எதுவும் என்னிடம் கேட்காதே!" என்றான் முகத்தை சுளித்து.
"ம்... ஓ... சரிப்பா!" என்று வேகமாக அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டாள்.
அவளின் பொறுப்புணர்வை கண்டவனுக்கு மெல்ல புன்னகை அரும்பியது.
"அப்பா மேல் கோபமாடா?" என்று கேட்டான், அவளை தன் கை வளைவுக்குள் சிறை செய்தபடி.
"சேச்சே... அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு அதைப் பற்றி பேச பிடிக்கலைன்னு தெரிந்தது, அதனால் தான் விட்டு விட்டேன்!"
"ஹப்பா... இந்த குட்டி வயதிலேயே என் பாப்பா... எவ்வளவு குட் பாப்பாவாக இருக்கிறாள்...!" என்று கூறி அவன் விழிகளை விரித்து வியந்ததும், அவள் கிளுக்கிச் சிரித்தாள்.
சற்று சிரித்து ஓய்ந்த பின்னர், "அப்பா! ஒன்றே ஒன்று கேட்கட்டும்மா?" என்று அவனிடம் அனுமதி கேட்டாள்.
"ம்... கேளுடா?"
"நான் ஸ்கூலுக்கெல்லாம் போகலை... அக்கா ஸ்கூலுக்கு போனாங்களா?" என்று கேட்டாள்.
அவன் முகம் வேதனையில் வாட, "இல்லைடாம்மா... அவள் தவறும் பொழுது...", தொண்டையில் அடைத்ததை விழுங்கி சமாளித்தவன், "ஆறு மாதக் குழந்தை!" என்றான் விழிகள் கலங்க.
"ஐயோ... ரொம்ப குட்டிப்பாப்பாவா?" என்றாள் பதற்றத்துடன்.
"ம்..." என்று சோர்வாக பதிலளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் மொபைல் ரிங் ஆனது.
எடுத்து டிஸ்ப்ளேவில் காலர் நேம்மை பார்த்தவன், பிக்கப் செய்து பேச ஆரம்பித்தான்.
பத்து நிமிடங்கள் கழித்து, லைனை கட் செய்து விட்டு மொபைலை கீழே வைத்தவன், "குட்டிம்மா!" என்று அழைத்தான்.
"ஆங்...!" என்று பதில் குரல் கொடுத்தாள்.
"என்ன செய்துக் கொண்டிருந்தாய் இவ்வளவு நேரம்?" என்று கேட்டான்.
"சும்மா உங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..."
"ஓ... என்னிடம் பேசுவதற்கு முன்னாலும் இதே வேலையை தான் செய்து கொண்டிருந்திருப்பாய்... ரொம்ப போராக இருந்திருக்கும் இல்லை...?" என்று அவன் வினவ, அவளோ அதை மறுத்து பதிலளித்தாள்.
"இல்லையே... நீங்க செய்றதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறதுன்னா... எனக்கு ரொம்ப பிடிக்கும். ஹப்பா... எல்லோரையும் எப்படி மிரட்டுவீங்க... அவங்கெல்லாம் உங்களுக்கு பயப்படறதை பார்த்தால் பாவமாகவும் இருக்கும்... அதேசமயம் எங்கப்பாவை பார்த்து பயப்படறாங்கன்னு பெருமையாகவும் இருக்கும்!" என்று கூறி கலகலவென்று சிரித்தாள்.
இவனும் சிரித்தபடி அவள் தலையில் செல்லமாக தட்டினான், "கேடி!" என்று.
சில நிமிடங்களில், "அப்பா!" என்று அவனை மீண்டும் அழைத்தாள் அவள்.
"என்ன அடுத்த சந்தேகமா? என்ன கொஞ்ச நேரமாக மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறாய்... சரி சொல்லு, என்ன தெரிய வேண்டும்?" என்று கேட்டான்.
"இல்லை... நான் பிறக்கனும்னா... அம்மா வேண்டும் இல்லை? நான் அவங்க வயிற்றில் தானே வளருவேன். ஆனால் இங்கே அம்மா இல்லையே... அப்புறம் எப்படி நான் பிறப்பேன்?" என்று அவள் கேட்டு முடித்த மறு நொடி அவன் அதிர்ந்தான்.
அவள் கேள்வி அவனை பெரும் திகைப்புக்கு உள்ளாக்கியது.
இது ஒரு சாதாரண விஷயம்... உலக நடப்பு, இயல்பு. ஆனால் தன் தனிமையை போக்க வந்த குழந்தை, தன் மேல் பாசமாக இருந்து தன்னை கவனித்து கொள்கிறாள். நாமும் அவளை நன்றாக வளர்க்க வேண்டும் என்று அதையும் இதையும் எண்ணி ஆவலாக கோட்டை கட்டிக் கொண்டிருந்தவனுக்கு, தங்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக அம்மா தேவை என்பதை எப்படி மறந்து போனேன் என்று எண்ணி குழம்பினான்.
"அப்பா..." என்று அவனை பிடித்து உலுக்கினாள் அவள்.
"என்னப்பா... எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க? அம்மா எங்கே இருக்கிறாங்க?... அவங்களை எப்படி கண்டுப்பிடிக்கிறது? எப்போ அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டி வருவது?" என்று அவனை மாற்றி மாற்றி கேள்விகளால் துளைத்தெடுத்தாள்.
"ப்ச்... உஷ்... ஏய் குட்டிம்மா! கொஞ்சம் அமைதியாக இரு. இப்படி திடீரென்று அம்மாவை கேட்டால்... எங்கே போய்... எப்படி தேடிக் கூட்டி வருவது நான்..." என்று அவளை சற்று அதட்டியபடி புலம்பினான்.
'ஐயோ... இந்த நான்கு மணி நேரமாக... இவள் எனக்கு கிடைக்கப் போகின்றாளே என்ற சந்தோசத்தில் மற்ற எதையும் யோசிக்காமல் விட்டுவிட்டேனே... இப்பொழுது என்ன செய்வது...?'
'இவளுக்கு அம்மா வேண்டுமென்றால்... எனக்கு மனைவி அல்லவா? நான் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா... அது எப்படி? என் வாழ்வில் மீண்டும் ஒரு பெண்ணா? சேச்சே முடியாது... எனக்கு திருமண வாழ்வில் சற்றும் விருப்பமில்லையே... வெறுப்பாக அல்லவா இருக்கின்றது. திருமணம் தவிர்த்து இதற்கு வேறு வழியே இல்லையா...' என்று தன் கன்னத்தை தடவியவாறு தீவிரமாக யோசித்தான்.
சட்டென்று மனதில் ஒரு மின்னல் வெட்டி, முகமெல்லாம் பிரகாசமாகியது.
வாடகைத் தாய்!
வேகமாக தன் அருகில் அமர்ந்திருந்த குழந்தையின் கரம் பற்றியவன், "ஹேய் குட்டிப்பாப்பு! உனக்கு அப்பா மட்டும் போதும் என்ன? உனக்கு எந்த கஷ்டமும் நேராமல் அப்பா நானே உன்னை நன்றாக பத்திரமாக பார்த்து கொள்வேன். அம்மாவெல்லாம் தேவையில்லை... நாம் இருவர் மட்டும் ரொம்ப ஜாலியாக சந்தோசமாக இருக்கலாம்... எப்படி?" என்றான் உற்சாகமாக.
அவள் உடனே, "அம்மா இல்லாமல் நான் எப்படிப்பா பிறப்பேன்?" என்று வேகமாக கேட்டாள்.
'ப்ச்... இவள் ஒருத்தி... மாற்றி மாற்றி கேள்வியை கேட்டே என் வாயைப் பிடுங்குகின்றாள்!' என்று எண்ணி பெருமூச்சு விட்டவன், அவளுக்கேற்றவாறு வாடகைத் தாய் பற்றி விளக்க முற்பட்டான்.
"இல்லைடா... நீ பிறப்பதற்கு அம்மா நம் கூடவே இருக்க வேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லை... நாம் ஹாஸ்பிட்டல் போய் டாக்டரிடம் சொல்லி நீ பிறக்க ஹெல்ப் கேட்டோம் என்றால்... அவர்கள் அங்கேயே அம்மா இல்லாமல் நீ நல்லபடியாக பிறக்க ட்ரீட்மென்ட் தருவார்கள். அதற்கு பிறகு நீ பிறந்தவுடன் நாம் நம் வீட்டிற்கு வந்து விடலாம்... நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன்!" என்று மீண்டும் அவளுக்கு அவனை உணர்த்த முயன்றான் ரமணன்.
அவள் எதுவும் பேசாமல் "ப்ச்..." என்றதோடு முடித்துக் கொண்டாள்.
அவனுக்கோ அவளின் சலிப்பு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.
"என்னம்மா? என் மேல் நம்பிக்கையில்லையா?" என்றான் ஏக்கம் நிறைந்த குரலில்.
"அச்சோ... அப்படியில்லைப்பா. நான் உங்களை ரொம்ப ரொம்ப நம்பறேன்... உங்களை தவிர வேறு யாராலும் என்னை நன்றாக பார்த்து கொள்ள முடியாது!" என்றாள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ஆணித்தரமாக.
"அப்புறம் என்னம்மா?" என்று சற்று சோர்வுடன் வினவினான்.
"இல்லைப்பா... அம்மா எப்பவும் நம்ம கூடவே இருந்தாங்கன்னா... நம்மளை பாசமா கவனிச்சுப்பாங்க இல்லை? நமக்கு வேணுங்கறதையெல்லாம் நாம கேட்காமலே ஆசையா செஞ்சு தருவாங்க... நீங்க என்னையும் பார்த்துகிட்டு ஆபிஸையும் பார்க்கிறதுன்னா எவ்வளவு கஷ்டம்? இதுவே அம்மா இருந்தாங்கன்னா... நீங்க ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு வந்தால், என் கூடவும் அம்மா கூடவும் ஜாலியா விளையாடலாம். உங்களுக்கு டென்ஷன் இருக்காது... நமக்கு உடம்பு முடியலைன்னா அவங்க நல்லா பார்த்துப்பாங்க. இப்ப பாருங்க உங்களுக்கு மருந்து போட கூட யாரும் இல்லை..." என்றாள் நீண்ட விளக்கமாக.
இந்த தடவை சலித்துக் கொள்வது ரமணன் முறையாகியது. அவன் சலித்தபடி தலையை வேறு புறம் திருப்பி கொள்ளவும், அவள் குழம்பினாள்.

No comments:
Post a Comment