*3*
அவன் விழித்திருப்பது தெரியக்கூடாது என்று, அவ்வளவாக அடிபடாத தன் வலக்கரம் கொண்டு தூக்கத்தில் வைப்பது போல் கண்களை லேசாக மூடி மறைத்துக் கொண்டான் ரமணன்.
சில நிமிடங்களில் அடிப்பட்ட அவனது இடது கரம் மென்மையாக ஒரு மலர் கரத்தால் வருடப்பட்டது.
அந்த வருடலில் தெரிந்த பாசமும், அக்கறையும் அவன் உடலை சிலிர்க்கச் செய்தது.
அது ஏதோ ஒரு சிறு குழந்தையின் கரம் தான் என்பதை அவனால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.
மெய்மறந்து அந்த சுகத்தில் கண்கள் மூடி லயித்திருந்தான்.
சற்று நேரத்தில் அந்த வருடல் நின்று போனது. அவன் மனமோ அந்த வருடலுக்காக ஏங்கியது.
மெடிசன் கிட் திறக்கும் சத்தம் கேட்டு தலையை திருப்பாமல் விழிகளை மட்டும் மெதுவாக திருப்பி பார்த்தான்.
அந்த கவரிலிருந்து ஒரு ஆயின்மென்ட் வெளி வந்து, மூடி தானாக திறந்து கொண்டது.
நடப்பதையெல்லாம் அவன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் வலது கரத்தில் இரண்டு மூன்று இடங்களில் லேசாக சிராய்த்திருந்தது, அதற்கு மருந்து போட அவன் மறந்து விட்டான். அதை தான் அது செய்து கொண்டிருந்தது.
பட்டும்படாமல் அவனுக்கு வலித்து விடுமோ என்ற அச்சத்தில் மென்மையாக போட்டு விட்டது.
யார் நீ? என்று உடனே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகியது.
ஆனால் அதை செயல்படுத்தினால், அது எங்கேயாவது தன்னை விட்டு போய்விடுமோ என்று பயமாக இருந்தது.
அவன் தலைமுடியை மெல்ல வருடி கொடுத்தது, அதில் தெரிந்த பாசம் கண்டு அவன் விழிகளில் நீர் சுரந்தது.
யார் இந்த குழந்தை? இதற்கு நான் என்ன செய்து விட்டேன் என்று என்னை இவ்வளவு அக்கறையாக கவனித்து கொள்கிறது என்று எண்ணி இனம் புரியா பாசத்தில் தடுமாறினான்.
சற்று நேரத்தில் அவன் தலையோடு தன் தலையை வைத்துக் கொண்டு அவனை உரசியபடி அது படுத்துக் கொண்டது தெரிந்தது.
ப்ச்... ச்சே... அது என்ன அது? என்ன குழந்தை என்று தெரியவில்லையே...
எவ்வாறு அழைப்பது? பேசி பார்க்கலாமா... என்ற எண்ணம் தோன்றியவுடனேயே அவன் இதயம் ஜெட் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.
பேச ஆரம்பித்தால்... ஒரு வேளை என்னை விட்டு ஓடி விட்டால் என்ன செய்வது? என்று பயமாகவும் இருந்தது.
கண்களுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, காலம் முழுக்க இந்த அன்போடு வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
எவ்வளவு நேரம் தான் அசையாமல் படுத்திருப்பது, மெல்ல அசைந்தான். அது வேகமாக அவனை விட்டு விலகி விட்டதை கண்டு அவனுக்கு வருத்தம் ஏற்பட்டது.
எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி கொண்டிருப்பது... இன்றே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவன், இருபத்துநான்கு மணி நேரமும் அதோடு பழக வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
எப்படி பேச்சை ஆரம்பிப்பது... என்ற யோசனையோடு எழுந்து அமர்ந்தான்.
மெல்ல கைகளை தடவி கொண்டிருந்தவனுக்கு, சட்டென்று பேச்சை ஆரம்பிப்பதற்கு ஒரு வழி கிடைத்தது.
"ஆமாம்... என் கையில் ஒரு மருந்தை தடவி விட்டாயே... அது சரியானதா... டாக்டர் சொன்னதை தானே கரெக்டாக போட்டு விட்டாய்?" என்று கேட்டான் ரமணன்.
எந்த எதிரொலியும் இல்லாமல் அறையில் அமைதி நிலவியது.
அவனுக்கு மெல்ல இதழ்களில் சிரிப்பு மலர துடித்தது. அதை கட்டுப்படுத்திக் கொண்டவன், "என்னப்பா... எதுவும் பேச மாட்டேன் என்கிறாய்? உன்னால் வாய் பேச முடியாதோ..." என்று யோசிப்பது போல் பாவனை செய்தான்.
அதற்கும் எந்த பதிலும் இல்லாமல் போகவும், ஒருவேளை பயப்படுகிறதோ... ஆம், அதனால் தான் நான் விழித்திருக்கும் வேளைகளில் அருகில் வருவதில்லை போலிருக்கிறது...
"சரி! என்னை பார்த்தால் உனக்கு வில்லன் போல் தெரிகிறது என்று நினைக்கிறேன்.... என்னை தான் யாருக்குமே பிடிக்காதே... அப்புறம் எப்படி நீ என்னுடன் பேசுவாய்? ம்ஹும்..." என்று வேண்டுமென்றே பெருமூச்செரிந்தான்.
"நீ இங்கே தான் இருக்கிறாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இன்றிலிருந்து அல்ல, என்று என் கையில் கண்ணாடி கிழித்ததோ... அன்றிலிருந்து நீ என் கூடவே தான் இருக்கிறாய். ஏ.சியை போட்டது, பிளாங்கட் போர்த்தி விட்டது. ஆங்... அப்புறம் நேற்று என்னைப் பிடித்து கீழே தள்ளி விட்டது... எல்லாமே நீ தான் செய்தாய் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இப்பொழுது புரிகிறது என்னை பிடிக்காததால் தானே கீழே தள்ளி விட்டாய்?" என்று அக்குழந்தையிடம் கேட்டான்.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்!" என்ற வேகமான அந்த மழலையின் குரல் கேட்டதும், அவன் முகம் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தது.
அவன் நினைத்தது சரி தான், அது ஒரு சிறு குழந்தை தான். ஆனால் குரலை வைத்து ஆணா... பெண்ணா... என்று இனம் காண முடியவில்லை.
"நான் வேண்டுமென்றே உங்களை கீழே தள்ளவில்லை. அந்த வண்டி உங்களை இடிக்கிற மாதிரி வந்ததால் தான் தள்ளி விட்டேன்!" என்று மேலும் பேசியது.
"ஓஹோ... என்னை காப்பாற்ற தான் அப்படி செய்தாயா? ஓகே... ஓகே... தாங்க் யூ!"
"பரவாயில்லை... பரவாயில்லை!"
"என் பக்கத்தில் வருகிறாயா?" என்று கை நீட்டி ஆசையுடன் அழைத்தான்.
மீண்டும் அமைதி நிலவியது.
"ஏன்மா பயமாக இருக்கிறதா...?"
"ம்... ஆமாம்!"
"ஓ... அதனால் தான் நான் விழித்திருக்கும் பொழுது பக்கத்தில் வர மாட்டேன் என்கிறாயா?"
"ம்!" என்றது மெல்லிய குரலில்.
"நான் உன்னை எதுவும் செய்யவில்லையே... அப்புறம் ஏன் பயப்படுகிறாய்?"
"என்னை எதுவும் செய்யவில்லை. ஆனால் எப்பொழுதும் உம்மென்றே இருப்பீர்கள், எல்லோரிடமும் சண்டை போடுவீர்கள்... நேற்று கூட போனில் யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தீர்களே... அதனால் தான் என்னையும் திட்டுவீர்களோ என்று பயமாக இருக்கிறது!"

அவன் முகம் லேசாக வாடியது, பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
"நான் ஏதாவது உங்களை கஷ்டப்படுத்திட்டேனா... ஏன் ஒரு மாதிரி இருக்குறீங்க?" என்று உடைந்த குரலில் கேட்டது.
"இல்லைடா கண்ணா... நீ என் பக்கத்தில் வர மாட்டேன் என்கிறாயே... அது தான் கஷ்டமாக இருக்கிறது!"
"இதோ... வந்துவிட்டேன்!" என்று அவன் அருகில் வந்து வேகமாக அமர்ந்து கொண்டது.
உடனே சந்தோசமாக சிரித்தவன், அக்குழந்தையிடம் தன் கரத்தை நீட்டினான்.
சிறிய தயக்கத்திற்கு பிறகு, அவன் நீட்டிய கரத்தில் தன் பிஞ்சு கரத்தை வைத்தது.
தன் இரு கரங்களுக்குள், அதை பொக்கிஷமாக மூடிக் கொண்டான்.
"ஆமாம்... நீ எவ்வளவு நாட்களாக என்னுடன் இருக்கிறாய்?"
"ம்... ஒரு மாதமாக இருக்கிறேன்!"
"ஓ... நீ குட்டிப்பாப்பாவா... இல்லை குட்டித்தம்பியா...?"
ம்ஹஹா... என்று மழலை சிரிப்பு சிரித்து விட்டு, "நான் குட்டிப்பாப்பா!" என்றாள்.
"என் மடியில் உட்கார்ந்து கொள்கிறாயா?" என்று ஆசையாக கேட்டான்.
"ம்ஹும்..." என்று மறுத்தாள்.
"ஏன்டாம்மா?" என்றான் ஏக்கத்தோடு.
"நீங்கள் கீழே விழுந்து அடிபட்டுவிட்டது இல்லை... நான் உட்கார்ந்தால் உங்களுக்கு கால் வலிக்கும்!" என்றாள் கரிசனமாக.
அதைக் கேட்டவன் சத்தமாக வாய்விட்டு சிரித்தான்.
"ஆமாம்... ஆமாம்... நீ உட்கார்ந்தாய் என்றால் என் காலே உடைந்து விடும்!" என்று மீண்டும் சிரித்தவன்,
"இவள் பெரிய குண்டோதரி... மண்டோதரி... ஆமாம் உன் வயதென்ன?" என்று கேட்டான்.
"ம்... நான்கு. நீங்கள் சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள். இன்று தான் நீங்கள் இப்படி சிரித்து நான் பார்க்கிறேன்!" என்றாள் ஆச்சரியபடும் குரலில்.
அவன் முகம் மேலும் கனிந்தது.
"நான் ஏன் இன்று இவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன் தெரியுமா? நீ என்னுடன் இருப்பதாலும், பேசுவதாலும் தான். நீ எப்பொழுதும் என்னுடனேயே இருக்கிறாயா... நான் உன்னை எதற்கும் திட்டவே மாட்டேன்!" என்றான் ரமணன்.
"ம்ம்ம்... அது... வந்து... இல்லைப்பா...!" என்று அவள் தயக்கத்துடன் இழுக்க,
"அப்பாவா...?" என்று வேகமாக இடையிட்டான் ரமணன் ஆச்சரியத்துடன்.
எப்பொழுதும் தன் கூடவே இருக்க சொன்னதற்கு, சம்மதம் சொல்லத் தயங்குகிறாளே என்று லேசாக கவலையடைய ஆரம்பித்தவன், அவளின் அப்பா என்ற அழைப்பால் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தான்.
அவனுடைய கேள்வியால் சட்டென்று அமைதியானாள் அவள்.
"என்னடா குட்டிம்மா... மறுபடியும் அமைதியாகி விட்டீர்கள்?" என்றான் அவன் அவளின் கரங்களை மென்மையாக வருடியபடி.
"சாரி..." என்றாள் குழந்தை.
"எதற்கு சாரி?" என்றான் குழப்பத்துடன் நெற்றி சுருங்க.
"இல்லை... உங்களிடம் பர்மிஷன் கேட்காமலேயே நான் உங்களை அப்பா என்று அழைத்து விட்டேன்!" என்றாள் மெல்லிய குரலில்.
"அதனால் என்ன?" என்றான் அவன் மேலும் குழம்பியபடி.
"வந்து... உங்களுக்கு என் மேல் எதுவும் கோபம் வரவில்லையா?" என்று கேட்டாள்.
"ம்ஹும்... அதெல்லாம் இல்லை. என்னை நீ அப்பா என்று அழைப்பது, எனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது தெரியுமா? ரொம்ப ரொம்ப ரொம்ப... இவ்வளவு பிடித்திருக்கிறது!" என்று தன் இரு கைகளையும் நன்றாக விரித்து காண்பித்து சிரித்தான் ரமணன்.
"நிஜமாகவாப்பா... என்னை உங்களுக்கு நிஜமாகவே பிடித்திருக்கிறதாப்பா?" என்று வேகமாக ஏக்கத்துடன் கேட்டாள் அவள்.
"ஏன்டாம்மா... அப்படி கேட்கிறாய்? உன்னை மாதிரி குட்டிப்பாப்பாவை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குமே!" என்று அவள் கன்னம் வருடியபடி கொஞ்சும் குரலில் ஆசையுடன் பதிலளித்தான் அவன்.
"இல்லைப்பா... என்னை எங்க அப்பா, சித்திக்கெல்லாம் பிடிக்கவே பிடிக்காதுப்பா... எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருப்பார்கள்!" என்று கூறி கொண்டிருந்தவள் சட்டென்று அவன் மேல் சாய்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
அவளின் வார்த்தைகளை கேட்டு திகைத்தவன், அவளின் அழுகையில் மேலும் தவித்தான்.
அதுவரை எந்த ஒரு வித்தியாசமான உணர்வும் தோன்றாமல் அருகிலிருக்கும் ஒரு குழந்தையிடம் பேசுவது போல் சகஜமாக பேசி கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான் நிதர்சனம் உறைத்தது.
இந்த குழந்தை என் கண்களுக்கு தெரியவில்லை, அப்படியென்றால்... இவள் இறந்து ஆன்மா ஆகி விட்டாளா...?
இது ஓரளவுக்கு அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும்... அவளிடம் பேசி பழகிய பிறகு அந்த உண்மையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் விழிகளில் நீர் பெருகி கன்னங்களில் வழிந்தது.
ஏதோ அவள் இப்பொழுது தான் இறந்து விட்டதைப் போல் அவன் மனம் துடித்தது.
சற்று நேரம் எந்த பேச்சுமின்றி அமைதியில் கழிந்தது.
அவன் அந்த குழந்தையிடம் அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் சாய்ந்தமர்ந்திருக்க, அவள் அவன் மடியில் தலை வைத்து அமைதியாக படுத்திருந்தாள்.
அவன் கரங்கள் தன்னியல்பாய் அக்குழந்தையின் தலையை வருடிக் கொண்டிருந்தது.
"அப்பா!" என்று மெல்ல அழைத்து அந்த அமைதியை கலைத்தாள் அவள்.
"ம்... என்னடா செல்லம்?" என்று அன்புடன் வினவினான் ரமணன்.
"நான் உங்களுக்கே மகளாக வந்து பிறந்து விடட்டுமா? உங்களுக்கு தான் என்னை பிடித்திருக்கிறது இல்லையா... என்னை ஆசையா... பாசமாக... பார்த்துப்பீங்க இல்லை?" என்று ஆவலுடன் கேட்டாள்.
அவளின் பேச்சில் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பினான் ரமணன்.
'என்ன கூறுகிறாள் இவள்? சிறு குழந்தை தானே... ஏதோ உளறுகிறாள்...' என்றெண்ணி பதிலளிக்காமல் அமைதியாக இருந்தான்.
"என்னப்பா... எதுவும் பேச மாட்டேன்கிறீங்க? உங்களுக்கு இதில் இஷ்டமில்லையா... என்னை பிடிக்கவில்லையா?" என்று கேட்டாள், மீண்டும் குரல் கரகரத்தது.
"சேச்சே... அப்படியெல்லாம் எதுவும் இல்லைடா தங்கம். உன் பேச்சு எனக்கு புரியவில்லை..." என்றான் அவன்.
"என்னப்பா புரியவில்லை?"
"இல்லை... நீ எப்படி எனக்கு மகளாக... எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றான் குழப்பத்துடன்.
"அச்சோ... அப்பா! உங்களுக்கு இது கூட புரியவில்லையா? நான் செத்து போயிட்டேன் இல்லை..." என்று அவள் சர்வ சாதாரணமாக எதையோ கூற ஆரம்பிக்கவும், அவனால் தாங்க முடியவில்லை.
அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, "இன்னொரு தடவை அப்படி சொல்லாதடா செல்லம்... ப்ளீஸ்..." என்றான் தவிப்புடன்.
"உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதாப்பா... என் மேல் அவ்வளவு பாசமா?" என்று அவன் இரண்டு கன்னங்களையும் ஆசையாக தன் பஞ்சு கரங்களால் பற்றியபடி கேட்டாள்.
"ஆமாம் டா... உனக்கு ஒரு கஷ்டம் என்றால் என் மனம் துடிக்கிறது!" என்றான் அவள் தலையை வருடியபடி.
"அதனால் தான்பா சொல்கிறேன்... உங்கள் மகளாகவே நான் பிறந்து விட்டால்... நீங்கள் என்னை நன்றாக பார்த்து கொள்வீர்கள். நானும் எப்பொழுதும் உங்களுடனேயே இருந்து விடுவேன்!" என்றாள் அவள்.
"ஆனால் அது எப்படிமா முடியும்?" என்று அவளிடம் வினவியவன் மறுநொடி தெளிந்தான்.
கண்கள் ஒளிர நிமிர்ந்து அமர்ந்தவன், "மறுஜென்மம்..." என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.

No comments:
Post a Comment