*5*
"சரி அம்மா... நீங்கள் அனுமதித்தால் நான் உங்கள் தங்கை பெண் மணியை இவர்கள் வண்டியை விட்டு விட்டு வந்தார்களே அங்கே அழைத்து சென்று அந்த பசங்களை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்து எச்சரித்து வருகிறேன்!" என்று லட்சுமியிடம் அனுமதி கேட்டான் ஜெய்சங்கர்.
வெள்ளை நிற
சான்ட்ரோ கார் ஒன்று ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு பங்களாவிற்குள் நுழைய, அதனை பின் தொடர்ந்து வந்த ஜெய்சங்கர் அருகே இருந்த பெரிய
மரத்தின் பின்னே மறைவாக தன் இருச்சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கே நடமாடுகின்ற
ஆட்களை நோட்டமிட ஆரம்பித்தான்.