About Me




ஹாய் சகோஸ்! 😍

வணக்கம்! என்னுடைய படைப்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தான். அப்பாவுடைய பூர்விகம் அது, அம்மாவிற்கு மேட்டூர். ம்... இதை மறந்து விட்டேனே, எனக்கு இரண்டு பெயர்கள் உண்டு. வீட்டிலும், உற்றார், உறவினர்களுக்கும் நான் தீபா, கல்வி நிறுவனங்களில் என்னுடைய அலுவல் பெயர் ஜெயலக்ஷ்மி.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் பெரும்பாலும் தீபா என்கிற பெயரே நிலைத்து விட்டதால், அதையே எழுத்து உலகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டேன். என் கணவருக்கு மட்டும் ஜெய். திருமணத்திற்கு பிறகு சென்னையில் சில வருடங்களும், பின் கணவரின் பணி மாற்றம் காரணமாக தற்பொழுது நான் வசிப்பது, தொழில் மற்றும் பூக்களின் நகரான ஒசூரில்
.

எனக்குள் தோன்றும் கற்பனையையும், நம் சமூகத்தில், குடும்பத்தில் நடக்கும் அல்லது கேள்விப்படும் விஷயங்களை கருவாக எடுத்துக் கொண்டும் மிகவும் எளிய நடையில் நம் வீட்டிலோ அல்லது அக்கம் பக்கத்து வீடுகளிலோ நடப்பது போல் தான் காட்சியமைப்பு வெகு இயல்பாக இருக்கும்.

ஆனால் அதில் சற்றும் சுவாரஸ்யம் குன்றாது நீங்கள் ரசித்துப் படிக்கும் வகையில் தான் கொடுத்திருப்பேன், தைரியமாக நம்பிப் படிக்கலாம்.

என் எழுத்தை பற்றி அனைவரும் ஒன்று போல் குறிப்பிடுவது, எழுத்துப்பிழை இல்லாமல் அழகிய நடையில் சற்றே வித்தியாசமான கதைகளை எழுதுகிறீர்கள். அதோடு உங்கள் கதைகளை படித்தால் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கிறது. அவ்வளவு தானே... இதுவும் கடந்துப் போகும் என்பது போல் தெம்பளிக்கிறது என்பார்கள்.

உங்கள் நாவலை படித்தால் நாங்களும் அதோடு இணைந்து ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், வருந்துகிறோம் என்று வாசகர்கள் மேற்கோள் காட்டி ரசிப்பர்.

இதில் ஒரு வித்தியாசமான அனுபவம் கூட வாய்த்தது, ஒரு ஆன்மாவுக்காக எங்களை அழ வைத்த புண்ணியம் எல்லாம் உங்களை மட்டும் தாங்க சேரும் என்று கலாய்த்த ஆண் வாசகர்களும் எனக்கு உண்டு. அதேபோல் தோழி, தோழன் சிபாரிசு செய்துப் படித்தேன், அம்மா மகளுக்கு, மகள் அம்மாவிற்கு சிபாரிசு செய்துப் படித்தேன் என்று வாசகர்கள் கூறக்கேட்டு பெரும் நெகிழ்ச்சியடைந்த அனுபவங்களும் உண்டு.

முதல் நாவலுக்கு பிறகு குடும்பச் சூழ்நிலையால் எழுத்திற்கு நீண்ட இடைவெளி விட்டு ஆறு வருடங்கள் கழித்து தான் மீண்டும் ஆன்லைனில் எழுத தொடங்கினேன்.


1.    காதல் வந்ததும் (கண்மணி - 2010 செப்டம்பர்)


2.    எனை மன்னிக்க வேண்டுகிறேன் (செப்டம்பர் - 2016)


3.    உனக்காகவே நான் வாழ்கிறேன் (அக்டோபர் - 2016)


4.    சின்ன சின்ன பூவே (டிசம்பர் - 2016)


5.    தீயுமில்லை புகையுமில்லை (ஏப்ரல் - 2017)


6.    நானொரு சிந்து (மே - 2017)


7.    அழகே அழகே எதுவும் அழகே (ஜுன் - 2017)


8.    கண்ணே கலைமானே (ஆகஸ்ட் - 2017)


9.    யாரோ மனதிலே (செப்டம்பர் - 2017)


10.  என்னை தெரியுமா? (டிசம்பர் - 2017)

      
11.  பூஜைக்கேற்ற பூவிது (பிப்ரவரி - 2018)


12.  மாற்றுக் குறையாத மன்னவன் (ஜுன் - 2018)


13.  அலைபாயும் ஒரு கிளி (அக்டோபர் - 2018)


14.  உனை காப்பேன் உயிராக (பிப்ரவரி - 2019)


15.  ஒரு விதை உயிர் கொண்டது (ஜுலை - 2019)


16.  வராது வந்த நாயகன் (நவம்பர் - 2019)


17.  நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் - குறுநாவல் (டிசம்பர் - 2020)


18.  காதலுக்கு நான் புதிது (மார்ச் - 2021)


19.  விழியில் தெரியும் அழகு (ஏப்ரல் - 2021)


20.  மாலை எனை வாட்டுது (அக்டோபர் - 2021)


21. இது வாலிப சோதனையா... (ஜுன் - 2022)


22. வாழ்க்கை கவிதை வாசிப்போம் (மே - 2023)


23. முடியா ஓவியம் நீ (ஜனவரி - 2024)


*******

இதுவரையில் இருபத்து இரண்டு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்து விட்டது. வருகின்ற 2024 சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய இருபத்து மூன்றாவது புத்தகம் வெளியாகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.


என்றும் அன்புடன்,                

தீபா பாபு


Mail id : rdeepsbabu31@gmail.com

  



















No comments:

Post a Comment

Most Popular