Kindle Ebooks




DB Kindle Links - Click Here


கதைக்கரு


1) காதல் வந்ததும் (கண்மணி)


தலைப்பிற்கேற்ற கதைக்கரு தான். நாயகியை பார்த்த நொடி முதலாக அவள் மேல் நம்பிக்கையற்று தன் வசதிக்கு அவளை ஆட்டிப் படைக்கும் நாயகன், அவள் மீது காதல் வந்ததும் எப்படி தலைகீழாக மாறி அவளிடம் தானும் சரணடைந்து, அவளையும் தன்னை உணர வைத்து காதலை ஏற்க வைக்கிறான் என்பதே கதை.

கண்மணியால் மிகுந்த தன்னம்பிக்கை ஊட்டும் நாவல் என பாராட்டுப் பெற்றது.

(நாயகன் - விஷ்ணு, நாயகி - வினயா)

2) எனை மன்னிக்க வேண்டுகிறேன்


தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன், தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம்.

(நாயகன் - அஜய், நாயகி - பவித்ரா)

3) உனக்காகவே நான் வாழ்கிறேன்


கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப் போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள்.

உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நல குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான்.

உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.

(நாயகன் - கவின்வாணன், நாயகி - சிவணி)

4) சின்ன சின்ன பூவே


ஒரு தந்தைக்கும், மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப்பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜ வாழ்வில் நடக்க முடியாத கற்பனை காவியம். ஒரு ஆன்மாவை வைத்து இப்படியும் எழுதலாமா என்று என் கற்பனையை ரசித்து, வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றக் கதை.

(நாயகன் - ரமணன், அஸ்வின் & நாயகி - நந்தினி, மனஸ்வினி)

5) தீயுமில்லை புகையுமில்லை


வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது, தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்?

முதன் முதலில் என் எழுத்துக்களில் நகைச்சுவை முழுவதுமாக தெறித்த நாவல் இது. படிக்கும் எவரையும் ஓரிடத்திலாவது சிரிக்க வைக்கும்.

(நாயகன் - சாய்கிருஷ், நாயகி - சுவாஹனா)

6) நானொரு சிந்து


பெற்ற தாய், தந்தையால் அலட்சியப் படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து, தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை, பெற்றோரின் அரவணைப்பே என்னவென்று அரிச்சுவடி அறியாத ஒருவன், அவளுக்கும் அவள் மகவுக்கும் தாயுமானவனாக மாறி அன்பால், நேசத்தால் அழகிய இல்லறத்தை எவ்வாறு உருவாக்குகிறான் என்பது தான் தெளிந்த நீரோடையாக கதையோட்டம்.

(நாயகன் - சித்தார்த், நாயகி - சிந்துஜா)

7) அழகே அழகே... எதுவும் அழகே


எந்தவொரு தீவிரமான சிந்திக்க கூடிய பகுதி இல்லாமல் முற்றிலும் மகிழ்ச்சியுடன் படித்து ரசிக்க கூடிய வகையில் எழுதிய கதை இது.

இரு வேறு ஜோடிகளின் திருமண ஏற்பாடுகளும், அதை தொடர்ந்த கலாட்டாக்களும் தான் மிகவும் யதார்த்தமாக கதை முழுக்க கலகலப்பாக தொடரும். வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் அவர்கள் இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.

(நாயகன் - மாதவ், சியாம் & நாயகி - அஸ்வதி, அவந்திகா)

8) கண்ணே கலைமானே


பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? தன் பிள்ளை மனதால் படிப்பவரின் மனதை கொள்ளை கொண்டு விடும் நாயகியால் நாயகனின் மனதை கவர்ந்திழுப்பதா கடினம்?

வாசகர்களின் மனதில் பேபிம்மாவாகவும், மாமாவாகவும் ஆழமாக நங்கூரம் பதித்தார்கள் நம் இளாக்கள். காதலிலும், நகைச்சுவையிலும் இது ஒரு பாணியில் வெளிவந்த கதை.

(நாயகன் - இளங்கதிர், நாயகி - இளநகை)

9) யாரோ மனதிலே


பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது.

அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர்.

இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து, நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி.

(நாயகன் - அகிலன், நாயகி - ஹிரண்மயி)

10) என்னை தெரியுமா?


சில எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட சமூகச் சிந்தனை, காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய சுவாரசியமான ரொமான்டிக் குடும்ப நாவல்.

ஜூலை 2017ல் சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் ஆன்லைன் வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் ஆறு மாதங்கள் கழித்து ஜனவரி 2018ல் விரிவாக எழுதப்பட்டது.

(நாயகன் - ஜெய்சங்கர், நாயகி - மணிகர்ணிகா)

11) பூஜைக்கேற்ற பூவிது


முன்னிருபதுகளில் தனிமையில் வாழும் இளைஞன் ஒருவன், பெற்றவர்களை இழந்து அநாதரவாக தன் வீட்டிற்கு வருகைப் புரியும் எதற்கும் அஞ்சி நடுங்கும் ஒரு சிறுமிக்கு தன்னம்பிக்கை கொடுத்து, அவள் வாழ்வை முன்னேற்றப் பாதையில் செலுத்துவான்.

திருமண வயதை அடைந்தப் பெண்ணிற்கு அவன் மாப்பிள்ளை பார்க்கும் முன்பே, அதிரடியாக அவர்களின் வாழ்க்கையில் நுழையும் மற்றொரு நாயகனால் வாழ்வு மேலும் கலகலப்பாக வண்ணமயமாக மாறுகிறது.

(நாயகன் - ரிச்சர்ட், கருண் & நாயகி - அட்சயா, அருந்ததி)

12) மாற்றுக் குறையாத மன்னவன்


ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல், அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை, சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.

(நாயகன் - பரத் சீனிவாசன், நாயகி - ரித்திகா)

13) அலைபாயும் ஒரு கிளி


தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள்.

அவளை பற்றி ஒன்றும் தெரியாமல் உறவுகளுக்குள் பிரச்சனைகள் வளர்கின்ற நேரம், உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை அதிலிருந்து காப்பாற்றி விடுகின்றனர்.

(நாயகன் - ஷ்ரவண், நாயகி - ஶ்ரீநிதி)

14) உனை காப்பேன் உயிராக


தன் சுயத்தை தொலைத்த நிலையிலும் நாயகனின் ஆழ்மனதில் பதிந்துள்ள நாயகியின் மீதான அபரிதமான காதல், சரியான தருணத்தில் தனக்கேற்ற சூழ்நிலைகள் மூலம் வெளிவந்து அவளை அடைவது தான் கதை.

ரொமான்ஸ் கேட்டகிரியில் எழுதிய இந்நாவலுக்கு வரவேற்பும் அமோகமாக கிடைத்து, அமேசான் டாப் 100 புத்தகத்தில் 2வது ரேங்க் வரை வந்தது.

(நாயகன் - பிரவீண், நாயகி - பிரணவிகா)

15) ஒரு விதை உயிர் கொண்டது


இன்று உள்ள கல்வி கொள்கைகளால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் குறித்து சிறு அளவில் அலசி, என் அறிவுக்கு எட்டிய ஒரு தீர்வையும் சொல்லி இருக்கிறேன்.

கதையின் கரு பின்பகுதியில் தான் வரும். அதற்கு முன் நம் நாவல் பிரியர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க நாயகன், நாயகியின் காதலையும், மோதலையும் சுமந்துச் செல்லும் கதை.

(நாயகன் - மன்வந்த், நாயகி - நிறைமதி)

16) வராது வந்த நாயகன்


பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியலில் நிலவும் இன்றைய அலட்சியப்போக்கை மாற்றி அமைக்க நாம் வாழும் சமூகத்தில் இருந்து ஒரு சிறந்த அரசியல் தலைவன் (நோ... இவன் தொண்டன் தான் ஆனாலும் தலைவன் தான்) உருவானால் எப்படியிருக்கும் என்கிற எனது அடுத்த கற்பனை.

பள்ளி தோழனாக, தேர்ந்த அரசியல்வாதியாக, காதல் கணவனாக என்று என்னால் ரசித்து உருவாக்கப்பட்ட நாயகன். இவனை போன்று ஒருவன் நிஜத்தில் வர வேண்டும் என ரொம்பவே ஆசைப்பட்டு வடிவமைத்த கதாப்பாத்திரம்.

(நாயகன் - மிருத்யுஞ்சயன், நாயகி - மிருணாளிணி)

17) நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்


இதமான தென்றலை போல் மென்மையாக மனதை வருடும் அழகிய குறுநாவல்.

ஒரு ஸ்கூல் டீச்சர், ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சிறுமி இவர்களை சுற்றிப் பின்னப்பட்ட பின்னல்களை என் பாணியில் கொடுத்திருக்கிறேன்.

(நாயகன் - திலீப்குமார், நாயகி - கயல்விழி)

18) காதலுக்கு நான் புதிது


உறவுகளின் கட்டாயத்தின் பேரில் மனம் முழுவதும் வெறுப்பு சூழ்ந்திருக்க, விருப்பமில்லா திருமணத்திற்கு மணமேடை ஏறுகிறாள் அவள்.

தன்னை வெறுப்பவளின் உணர்வுகளுக்கு சற்றும் மதிப்பளிக்காது, தன் உடைமையென அவளை துச்சமாக நினைத்து திருநாண் பூட்டுகிறான் அவன்.

இவர்களின் வாழ்வில் காதல் பூக்குமா?

(நாயகன் - விதார்த், நாயகி - சாத்விகா)

19) விழியில் தெரியும் அழகு


இக்கதையும் வழக்கம்போல் நாயகன், நாயகியை சுற்றித்தான் சுழலும் என்றாலும் அதன் மையமாக நாயகனின் அம்மா இருப்பார்.

நம் விழிகளில் பார்த்தவுடன் பளிச்சென்று தெரியும் ஒருவரின் அழகு, ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுபடும்.

ச்சே... இவங்க எவ்வளவு அழகா இருக்காங்க இல்லை... மெச்சுதலாக நினைப்பது ஒரு வகை.

அவங்களுக்கு என்ன குறை? ஆளை அசரடிக்கும் அழகு என பெருமூச்சோடு பொறாமை கொள்வது அடுத்த வகை.

இன்னொரு வகை, அந்த அழகை தாங்கள் அபகரித்துக் கொண்டு அனுபவிக்க நினைக்கும் வல்லூறுகளின் கொடூரம் சார்ந்து இருக்கும்.

இவற்றில் இந்தக் கதை எதைப் பற்றி பேசப் போகிறது?

தயாராகுங்கள்... சினிமா துறையில் வெற்றிக் கொடி நாட்டிய அம்மா, மகனை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம்.

(நாயகன் - இந்திரஜித், நாயகி - தேஜஸ்வினி)

20) மாலை எனை வாட்டுது

"Feel My Love"A feel good romantic love story. இது தான் கதையோட மையக்கரு. காதல்... காதல்... காதல்...


எந்தவொரு தனிப்பட்ட கருத்தும் இல்லாமல் முழுக்க முழுக்க கமர்ஸியலாக எழுதப்பட்டது.

(நாயகன் - வம்சி கிருஷ்ணா, நாயகி - யாழ்மொழி)

21) இது வாலிப சோதனையா...


என் நீண்ட நாள் அபிமான வாசகியின் தீவிர வேண்டுகோளுக்கு இணங்கி, "சின்ன சின்ன பூவே" மதுநந்தனை நாயகனாக களமிறக்கி, இவர்களோடு "உனக்காகவே நான் வாழ்கிறேன்" கதை மாந்தர்களையும் இணைத்து, ஒரு அழகிய காதல் கதையை உருவாக்கி இருக்கிறேன்.

(நாயகன் - மதுநந்தன், நாயகி - இன்மதி)

**********


இதுவரையில் பதினேழு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்து விட்டது என்பதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

தீபா பாபு

No comments:

Post a Comment

Most Popular