*2*
வீட்டின் பின்புறத்தில் இருந்த குடிலைக் கண்டவுடன் அவன் முகம் மாறியது. கை விரல்களை இறுக்க மூடியவன், சட்டென்று வேகமாக நடந்து பாத்ரூமிற்குள் நுழைந்து ஷவர் அடியில் கண்களை மூடி நின்றான்.
ஷவரிலிருந்து விழுந்த நீரோடு அவன் விழி நீரும் கலந்து கீழே இறங்கியது.
மறுநாள் மாலை தன் அலுவலக அறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தான் ரமணன். அவன் மொபைல் ராகம் பாடியது.
பாக்கெட்டிலிருந்து எடுத்து போன் டிஸ்ப்ளேவை பார்த்தவனின் முகத்தில் எரிச்சல் ரேகை பரவியது.
கால்லை பிக்அப் செய்து காதில் வைத்தான்.
"ஹலோ!"
எதிர்முனையில், "சார்! நான் சொன்னதைக் கொஞ்சம்..." என்ற குரல் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, இவன் அதனை இடைமறித்தான்.
"இங்கே பாருங்கள் ரங்கராஜ்... நான் ஏற்கனவே சொன்னது தான். இப்பொழுது உங்களிடம் பேச எனக்கு நேரமில்லை, நான் ஒரு மீட்டிங்கிற்கு செல்ல வேண்டும். பிறகு பார்க்கலாம்!" என்று எதிர்முனை பேச வாய்ப்பளிக்காமல் லைனை கட் செய்தான்.
ஹோட்டல் லீ மெரிடியனில் எண்டர்பிரனர்ஷிப் மீட்டிங் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவன், வழியில் மியூசிக் ஸாப்பை கண்டவுடன் மெலோடி கலெக்ஷன்ஸ் ஏதாவது புதியதாக வந்திருக்கிறதா பார்க்கலாம் என்று காரை சாலை ஓரம் சென்று நிறுத்தினான்.
தனக்கு தேவையான டிவிடிக்களை வாங்கி கொண்டு காருக்கு வந்தவனின் போன் ரிங்கானது.
எரிச்சலுடன் எடுத்தவன், "சார்..." என்று ஆரம்பிக்கும் பொழுதே,
"சார்! கொஞ்சம் நான் சொல்ல வருவதை காது கொடுத்து கேளுங்கள் ப்ளீஸ்!" என்றார் ரங்கராஜ்.
முகம் சிவந்து கை முஷ்டிகளை இறுக்கியபடி அமைதியாக நின்றான் ரமணன்.
உடனே எதிர்முனையில் இருந்தவர் உற்சாகமாக, அவன் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
"சார்! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்கள் தயாரிக்கிற லோ குவாலிட்டி ரா மெட்டிரியல்ஸ் யூஸ் பண்ணி உங்கள் ப்ரொடக்ட் மேனுவேக்ட்சர் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு நான்கு மடங்கு லாபம் கிடைக்கும். உங்க கம்பெனி பிரொடக்ட்ஸ்க்கு மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறது. அதனால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வழக்கம் போலவே மூவ் ஆகும். நீங்கள் பயப்பட தேவையில்லை..." என்று அவர் நிறுத்திய இடைவெளியில் சட்டென்று புகுந்தவன்,
"போதும் நிறுத்துங்கள்! இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினீர்கள் என்றால் மரியாதை கெட்டு விடும்... நீங்கள் நினைக்கின்ற மாதிரி நான் பேராசை பிடித்து பணத்துக்கு அலைபவன் இல்லை. எனக்கு எதிலும் நேர்மை முக்கியம், எங்கள் பிராண்ட் நேமை நம்பி பிரொடக்ட் வாங்கும் மக்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை, இதற்கு மேல் இது தொடர்பாக எந்த பேச்சும் நீங்கள் பேசினீர்கள் என்றால் நான் சும்மா பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்..." என்று அவன் பேசி கொண்டிருக்கும் பொழுதே அவனை யாரோ வேகமாக பிடித்து கீழே தள்ளி விட்டார்கள்.
என்ன ஏதுவென்று அவன் சுதாரிக்கும் முன்னரே கீழே விழுந்தான், அவனுடைய மொபைல் அவனுக்கு இரண்டடி தள்ளி கீழே விழுந்தது.
கீழே விழுந்த ரமணன் தட்டு தடுமாறி எழுந்தான்.
கைகளில் சிராய்த்திருந்ததால் லேசான எரிச்சல் ஏற்பட்டது.
திடீரென்று சற்று தொலைவில் ஏதோ பலமாக எதனுடனோ மோதும் சத்தமும், அதை தொடர்ந்து பதறிய பல பேச்சு குரல்கள் தெளிவில்லாமல் ஒன்றுடன் ஒன்று கலந்து கசமுசா என்று ஒலித்தது.
அவனருகில் பதறியபடி நாலைந்து பேர் ஓடி வந்தனர்.
"சார் ஆர் யூ ஓகே! உங்களுக்கு ஒன்றும் பலமாக அடிபடவில்லையே?"
"கடவுள் புண்ணியம் சார் நீங்கள் உயிருடன் இருப்பது. அந்த டெம்போ வந்த வேகத்திற்கு உங்களை மட்டும் இடித்திருந்தால்... அப்பா... நினைத்து பார்க்கவே உடம்பெல்லாம் நடுங்குகிறது!"
"சற்று தொலைவில் அந்த டெம்போ கட்டுபாடில்லாமல் வருவதைக் கண்டு, அனைவரையும் தள்ளி போக சொல்லி நான் கத்தினேன். நீங்கள் மட்டும் போன் பேசி கொண்டிருந்ததால் நான் கூறியதை கவனிக்கவே இல்லை..."
"ஏம்பா... கவனிக்கவில்லை என்றால் எப்படி அவர் அந்த பக்கம் வேகமாக நகர்ந்து விழுந்திருப்பார்? அவர் கடைசி நிமிடம் பார்த்திருப்பார் இல்லையா சார்?"
"இல்லை தூரத்திலிருந்தாலும் நான் நன்றாக பார்த்தேன், அவர் என் பக்கம் திரும்பவே இல்லை. ஆனால் எப்படி கரெக்டாக நகர்ந்து விட்டார் என்று தான் புரியவில்லை!" என்றான் அவன் குழப்பமாக.
"சரி சரி விடுங்க, அது இப்பொழுது முக்கியம் இல்லை. எப்படியோ காட்ஸ் கிரேஸ் அவர் தப்பி விட்டார், அது போதும். அவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று நினைக்கிறேன். சார்... சார்..." என்று ஆளுக்கொன்றாக மாற்றி மாற்றி பேசி கொண்டிருந்தவர்களை அடக்கி ரமணனை அழைத்தார் சற்று வயதில் மூத்தவர் ஒருவர்.
அவன் அவரிடம் தன் விழிகளை திருப்பினான்.
"எதுவும் பலமாக அடிபடவில்லையே?"
"நோ... நோ... ஐ ஆம் ஓகே!" என்றவன் விபத்து நடந்த இடத்தை பார்த்தான்.
"என்னவாயிற்று?"
"ஏதோ ஒரு டெம்போ கன்ட்ரோல் இல்லாமல் வந்து, நேராக இருக்கிறதே... அந்த கடையை முட்டிக் கொண்டு நின்று விட்டது. நல்ல வேளை அந்த கடை இன்று விடுமுறை, இல்லையென்றால் ஏதாவது உயிர்ச்சேதம் ஆகியிருக்கும். டிரைவருக்கு மட்டும் கொஞ்சம் பலமாக அடிப்பட்டு விட்டது, ஆம்புலன்ஸ்க்கு போன் செய்திருக்கிறார்கள்!" என்றார் விளக்கமாக.
ஓ... என்றவன் யோசனையோடு நின்றிருந்தான்.
படையப்பா படத்தில் வரும் அனுமோகன் ரஜினியை பார்க்கும் பொழுதெல்லாம், பாம்பு புற்றுக்குள் கையை விட்டீர்களே அது கடிக்கவில்லையா என்று கேட்பது போல், இங்கே ஒருவன் ரமணனை கேட்டான்.
"சார்! நீங்கள் எப்படி சார் கரெக்டாக வண்டி பக்கத்தில் வந்த பொழுது நகர்ந்து போனீர்கள்?" என்று கேட்டான்.
அவன் சொல்வதறியாது தடுமாற, "சார்! நீங்கள் கிளம்புங்கள் சார். இப்படிதான் தேவையில்லாமல் ஏதாவது கேள்விக் கேட்டு கொண்டே இருப்பார்கள்... கீழே விழுந்து எழுந்ததில் உங்களுக்கும் டயர்டாக இருக்கும்!" என்று அவனை கிளம்ப சொன்னார் அந்த பெரியவர்.
சரியென்று தலையசைத்தவன், அவரிடம் கரம் குவித்து விடைப் பெற்றான்.
மனதில் பெரிய சூறாவளியே நடந்துக் கொண்டிருந்தது.
நன்றாகத் தெரியும் அவன் தானாக விழவில்லை, அவனைப் பிடித்து யாரோ அந்த புறமாக தள்ளி விட்டார்கள்.
இவன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தால் அருகில் யாருமே இல்லை. அதன்பிறகு தான் நான்கைந்து பேர் அவன் அருகினில் ஓடி வந்தனர்.
அப்படியென்றால் தன்னைத் தள்ளியது யார்? நெற்றியில் லேசாக வியர்வை அரும்பியது.
காரை சாலை ஓரம் செலுத்தி நிறுத்தினான்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று ஒரு கணம் திகைப்பாக இருந்தது.
எப்பொழுதிலிருந்து இந்த மாதிரி வித்தியாசமாக நடக்கிறது? கண்ணுக்கு தெரியாத அமானுஷ்ய சக்தி ஏதோ ஒன்று தன்னை தொடர்கிறதா... ஏன்? எதற்கு?
மெல்ல கழுத்தை தடவியவனுக்கு கையில் வலி எடுத்தது. உஷ் என்று முகத்தை சுளித்தவன், கையை அழுத்தி விட்டான்.
கீழே விழுந்ததில் கையில் இரத்தம் கட்டி இருந்தது. அந்த வலியோடு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எண்ணியவன் நேராக அருகிலிருக்கும் ஹாஸ்பிடலுக்குச் சென்றான்.
டிரீட்மென்ட் முடிந்து வீடு திரும்பியவன், மாத்திரயை விழுங்கி விட்டு சோர்வாக படுக்கையில் விழுந்தான்.
அவனுக்கு இருந்த அயர்வில் எதையும் யோசிக்க முடியாமல், மருந்தின் வீரியத்தில் நன்றாக உறங்க ஆரம்பித்தான்.
அவனுடைய தூக்கத்தை கெடுக்கும் விதமாக தொலைவில் எங்கோ... ஏதோ பாட்டு சத்தம் மெதுவாக கேட்டது.
கண் இமைகளை பிரிக்க முடியாமல், அயர்ச்சி கண்களை இன்னமும் அழுத்தியது, சோர்வாக திரும்பி படுத்தான்.
மீண்டும் ராகம் ஒலிக்கும் சத்தம் கேட்கவும் லேசாக தூக்கம் கலைய சிரமப்பட்டு கண்களைத் திறந்து பார்த்தால், அவன் போன் தான் அவ்வளவு நேரமாக விடாமல் அலறிக் கொண்டிருந்தது.
போனை கையில் எடுத்தபடியே எழுந்து அமர்ந்தான்.
உடல் வலி அதிகமாக இருந்தது, ஒரு கையால் மற்றொரு கையை அழுத்தி விட்டபடியே போனைக் காதில் வைத்தான்.
"ஹலோ!"
"குட்மார்னிங் சார்!"
"ம்... சொல்லுங்கள் கௌசிக்!" என்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
"சார் பத்தரை மணிக்கு அட்மின் மீட்டிங் இருக்கிறது. நீங்கள் இன்னும் வரவில்லையே என்று ரிமைன்டர் கால் செய்தேன்!"
"ஓ... போஸ்ட்பான்ட் செய்திடுங்கள். எனக்கு நேற்று நைட் ஒரு சின்ன ஆக்சிடன்ட் ஆகி விட்டது. பாடி பெயின் அதிகமாக உள்ளதால், என்னால் இன்று ஆபிஸ் வர இயலாது!" என்றான்.
"ஓ காட்! இப்பொழுது எப்படி இருக்கிறது சார்? நான் வேண்டுமென்றால் வந்து ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லட்டுமா?"
"நோ... நோ... நத்திங் டூ ஒர்ரி. நான் நைட்டே ஹாஸ்பிடலில் காண்பித்து விட்டேன். ஐ ஆம் பைன் நௌ! பாடி பெயின் மட்டும் உள்ளது, இன்று ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால் சரியாகி விடும்!"
"ஓ... ஓகே சார். டேக் கேர் பை!"
"ம்... பை!" என்று போன் கால்லை கட் செய்தான்.
எதையும் யோசிக்க... செய்ய பிடிக்காமல் அப்படியே சற்று நேரம் சாய்ந்தமர்ந்திருந்தான் ரமணன்.
வயிற்றில் அலாரம் அலறியது.
ப்ச்... என்று சலித்தவன், சோம்பலாக எழுந்தான்.
வாஷ் ரூம் சென்று ரெப்ரெஷ் செய்து வந்தவன், காபியை கலந்து எடுத்துக் கொண்டு பெட்டில் அமர்ந்தான்.
டீபாய் மேல் முதல் நாள் வாங்கி வந்திருந்த பிரட் பாக்கெட் இருந்தது. அதை சிரமப்பட்டு வலியில் லேசாக முகத்தை சுளித்தவாறே பிரித்தான்.
அன்று அவன் நடந்து கொண்ட விதத்தால், வேலைக்காரி வேலையை விட்டு நின்று விட்டாள். அதைப்பற்றி அவன் அலட்டிக் கொள்ளவில்ல.
வீட்டை சுத்தம் செய்பவள், இரண்டு நாளைக்கொரு முறை வந்து செல்கிறாள்.
மெதுவாக சாப்பிட்டு முடித்து, மருந்து மாத்திரைகளை உட்கொண்டான்.
ஒரு கரத்தால் மற்றொரு கரத்திற்கு லேசாக மசாஜ் செய்தவாறு ஆயின்மென்டை தடவினான்.
மெல்ல சாய்ந்தமர்ந்தவனுக்கு தனிமை கொன்றது. அனைத்து வசதிகள் இருந்தும் யாருமற்ற அனாதையை போல் இருப்பது நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது.
தனிமையை பற்றி யோசிக்கும் பொழுது தான் முதல் நாளைய சம்பவம் அவனின் நினைவிற்கு வந்தது.
உண்மையில் நான் தனிமையில் தான் இருக்கிறேனா...?
விழிகள் ரூமை சுற்றி வலம் வந்தன.
எந்த ஒரு அரவமும் இல்லாமல் பின்டிராப் சைலன்ஸ் என்பார்களே அது போல் இருந்தது.
ஆனால் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது, அந்த கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி அவனருகில் இந்த ரூமில் தான் உள்ளது என்று.
நேற்று அடிப்பட்ட தளர்ச்சியில் லேசாக டென்ஷனான அவனுக்கு, இன்று எந்த திகிலும் தோன்றாமல் மனம் அமைதியாக இருந்தது.
காரணம் சற்று நேரமாக பல முறை யோசித்தும், அந்த சக்தியால் தனக்கு எந்த ஒரு தீங்கும் நேர்ந்ததில்லை என்பதை உணர்ந்திருந்தான்.
எத்தனை நாட்களாக அது தன்னுடன் இருக்கிறது?
அவனுக்கு தெரிந்து, அன்று அவன் கையை கண்ணாடியில் கிழித்துக் கொண்ட நாளிலிருந்து அது கூட இருக்கிறது.
அவன் கையில் வழிந்த இரத்தம் தானாக சுத்தமடையவில்லை... அது தான் சுத்தம் செய்திருக்கும் என்பது இப்பொழுது புரிந்தது.
அதன்பிறகு ஏசியை ஆன் செய்தது, தனக்கு பிளாங்கட் போர்த்தி விட்டது எல்லாம் அதன் வேலை தான்.
நேற்று அது தன்னை தள்ளிவிடவில்லை என்றால்... இன்று என் நிலைமை?
ம்... என்று பெருமூச்சு விட்டவன், நான் இறப்பதை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை... பயமுமில்லை. ஆனால் என் நிர்வாகத்தை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்களே... அவர்கள் வாழ்விற்கு நான் தானே பொறுப்பு என்று எண்ணியவன், யோசனையில் ஆழ்ந்தான்.
அது யாராக இருக்கும்...? கண்டிப்பாக என்னை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
அவர்களெல்லாம் இறந்து ஆண்டு கணக்காகி விட்டதே... இத்தனை நாட்களாக வராதவர்களா... இப்பொழுது வந்திருக்கிறார்கள். நிச்சயமாக இருக்காது, அப்படியென்றால் இது யார்? ஆன்மாவா? இல்லை வேறு ஏதேனும் சக்தியா?
எதை எதிர்ப்பார்த்து அது தன்னை சுற்றி வருகிறது? இனி நான் என்ன செய்ய வேண்டும்? என்று குழம்பியவனுக்கு சட்டென்று ஒரு யோசனைத் தோன்றியது.
எப்பொழுதும் தன்னுடனேயே இருந்தாலும், அவன் விழித்திருக்கும் நேரங்களில் அது அவனுக்கருகில் வருவதில்லை.
கொஞ்ச நேரம் உறங்குகின்ற மாதிரி நடித்து, அது என்ன செய்கிறது என்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தவன், மெதுவாக கட்டிலில் சரிந்து படுத்து கண்களை மூடி கொண்டான்.
ஒரு பத்து நிமிடம் எந்த வித்தியாசமுமின்றி அமைதியாக கழிந்தது.

No comments:
Post a Comment