*25*
இந்தச் சின்ன வயதில் எங்கு சென்றாலும் தன் தம்பியிடம் எந்த சண்டையும் போடாமல் பொறுமையாகவும் கவனமாகவும் அவனை பார்த்துக் கொள்கிறான். அதனால் கருணும் அவனிடம் எவ்வளவு பாசமாக இருக்கிறான்... ஆனால் எங்கள் வீட்டில் வந்துப் பாருங்கள் எப்பொழுது பார் ஒரே குழாயடி சண்டை தான்.
இரண்டும் வீட்டில் இருந்தால் ஒரே ரணகளம் தான் என் பிபி லெவலை கொஞ்சமும் குறைய விடாமல் அதிகமாகவே வைத்திருப்பார்கள் என்று தங்கள் பிள்ளைகளை பற்றி என்னிடம் புலம்பி தள்ளுவார்கள். அப்பாவுக்கும் இதை கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எல்லாம் எங்கள் தருண் குட்டியினால் தான் என்று பெருமையாக சொல்வார்!" என சிந்து சிரிக்கவும், தருண் முகத்திலும் மெல்லிய புன்னகை அரும்பியது.
"சரி வா அவன் என்ன செய்கிறான் என்று பார்த்து இழுத்து வருவோம். ஹோம் ஒர்க் செய்ய நேரமாகி விட்டதே என வருகிறானா பார், சேட்டைக்கு மட்டும் குறைவில்லை!" என்று அவன் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.
"இல்லைம்மா இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. நான் வருவதற்குள் உன் படிப்பை முடித்து விடுண்ணா அப்புறம் எனக்கு சொல்லி தர வேண்டும் என்று விட்டு தான் விளையாடப் போயிருக்கிறான், வந்து விடுவான்!" என தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேசியபடி நடந்தான் தருண்.
"நீ அவனுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுவதால் தான் எந்தக் குறும்பு செய்தாலும் அவன் தைரியமாய் உன் பின்னே ஒளிந்துக் கொள்கிறான்!" என்று சீண்டினாள் அவள்.
"குறும்பு தானேம்மா அடாவடி இல்லையே, ஐயோ... அன்று மட்டும் நீங்கள் அந்த எதிர்வீட்டு பிரணவை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் நம் கருண் எவ்வளவு குட்பாய் என்று!" என்றவன் நகைக்க, தன் தோளுக்கிணையாக வளர்ந்துக் கொண்டிருந்தவனின் தோளில் கைப்போட்டு நகைத்தபடி உடன் சென்றாள் சிந்துஜா.
இரவு எட்டு மணிக்கு சித்தார்த் வீடு திரும்ப, சிந்து கிச்சனில் இரவு உணவை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாள். தருணும், கருணும் மும்முரமாக நியூஸ்பேப்பரை வைத்துக் கொண்டு ஏதோ விளையாட்டு பகுதியை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
சித்து உள்ளே நுழையவும் திரும்பி பார்த்த கருண், "ஹை... அப்பா!" என்றழைத்தபடி ஓடிச் சென்று அவன் மீது ஏறிக் கொண்டான்.
அவன் கன்னத்தில் முத்தமிட்டவன், "அப்புறம் குட்டிச்செல்லம் இன்று என்னென்ன குறும்புகள் செய்து அம்மாவிடம் மாட்டினீர்கள்?" என்று கேலியாக வினவினான்.
"ஒன்றுமே இல்லைப்பா குட்பாயா இருந்தேனாக்கும், அண்ணாவை வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்கள்!" என்று அவனை கை காண்பித்தான்.
"உன் அண்ணன் தானே ரொம்பவே உன்னை பற்றிப் புகார் செய்வானே, தம்பி சொல் பேச்சு எதுவுமே கேட்பதில்லை என்று தான் அவன் சொல்வான்!" என தீவிரமாக பேசியபடி அவர்களின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தருணிடம் சென்றான் சித்து.
"ம்... இல்லை இல்லை, என் அண்ணா ஒன்றும் அப்படியெல்லாம் என்னை பற்றிப் புகார் சொல்ல மாட்டான். நீங்கள் சும்மா என்னை டீஸ் பண்றீங்க!" என்றவன் மூக்கை சுளிக்க, சிரித்தபடி அவன் குட்டி மூக்கை பிடித்து ஆட்டியவன் தருண் தோளில் கைப்போட்டு அவனை தன்னருகில் இழுத்துக் கொண்டான்.
"பார்... உன் வயதில் இருக்கும் பொழுதெல்லாம் உன் அண்ணன் என்னை கண்டால் எப்படி ஓடி வந்து கட்டிக்கொள்வான் தெரியுமா? இப்பொழுதெல்லாம் சார் பெரிய மனிதராகி விட்டார் தூரத்திலிருந்தே ஒரு சின்னச் சிரிப்பு அவ்வளவு தான்!" என்று போலியாக குறைப்பட்டுக் கொண்டான் சித்து.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைப்பா!" என்று புன்னகைத்தபடி அவன் தோளில் பாசமாக சாய்ந்துக் கொண்டான் தருண்.
அவன் உச்சயில் முத்தமிட்டவன் கருணை கீழே இறக்கி விட்டு, "அம்மா என்ன செய்கிறாள் என்று பார், அப்பா வந்து விட்டேன் என்று சொல் ஓடு!" என அவனை உள்ளே அனுப்பியவன், தருணிடம் பேசிக் கொண்டே உடை மாற்றச் சென்றான்.
இரவு உறக்கம் வராமல் யோசனையில் இருந்தான் தருண். தன் சிறு வயது அனுபவங்கள் மனதினில் நிழலாட, சிந்து குறிப்பிட்டது போல் அப்பொழுதைய நிலைமை லேசாக புரிந்தது அவனுக்கு.
அம்மா சொன்னது போல் அப்பா இல்லாமல் அன்று நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம், யாருமே எங்களை அவர்களோடு சேர்த்துக் கொள்ளாமல் ஒதுங்கி ஒதுங்கி தனியாக தானே இருந்தோம். என்னவென்று முழுதாக புரிந்திராத ஒரு வெறுமை மனதை ஆட்கொள்ள புரண்டுப் புரண்டு படுத்தவன் எழுந்து அமர்ந்தான், திரும்பி கருணை பார்க்க அவன் மெலிதாக வாயைப் பிளந்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பகலெல்லாம் ஆடிய ஆட்டத்திற்கு அடித்துப் போட்டது போல் அசையாமல் படுத்திருந்தான். அவனை பார்த்திருந்தவனின் மனதில் அன்பு பெருக வாஞ்சையுடன் அவன் கன்னத்தை தடவியவன், என்னை போல் எந்தக் கஷ்டமும் என் தம்பிக்கு வரக் கூடாது. இவன் எப்பொழுதும் இப்படியே எல்லோருக்கும் செல்லமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினான்.
மெதுவாக கட்டிலை விட்டிறங்கி கருணுக்கு குறுக்கே தலையணையை வைத்து விட்டு தண்ணீர் குடிக்க வெளியே வந்தால் சித்து ஹாலில் அமர்ந்து லேப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான்.
"என்னப்பா தூங்கவில்லையா?" என்றவனின் குரல் கேட்டு நிமிர்ந்தவன் முறுவலித்து, "இல்லைடா செல்லம், அப்பாவுக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது. நான்கைந்து பில்டிங்கிற்கு ஸ்கெட்ச் போட வேண்டும். பகலில் இன்று ஒரு மீட்டிங் இருந்ததால் இந்த வேலை செய்ய முடியாமல் அப்படியே நின்றுப் போய்விட்டது, நாளைக்குள் இதை முடித்தாக வேண்டும். ஆமாம் நீ என்ன இந்நேரத்திற்கு தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று புருவம் சுருக்கினான்.
"இல்லைப்பா தூக்கம் வரவில்லை!"
"ஓ... நாளைக்கு ஸ்கூல் லீவ் தானே?"
"ம்... ஆமாம்!"
"சரி இங்கே வந்து உட்கார், தூக்கம் வருகிற வரை பேசிக் கொண்டிருக்கலாம்!" என்றவனை அருகில் அமர்த்திக் கொண்டான்.
உறங்குவதற்கு முன்பு தருண் மனதில் உண்டாகியிருந்த குழப்பத்தையும், மாலையில் தாங்கள் பேசியதையும் சித்துவிடம் ஏற்கனவே கோடிட்டு காட்டியிருந்தாள் சிந்து.
அவனிடம் பேசியபடி மௌஸை வைத்து வரைந்துக் கொண்டிருந்தவன், "ப்யூட்சர் இன்ஜினியர் சார்... ஹாபியாக இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பா மாதிரி தான் படிப்பேன் என்று சொன்னீர்களே இன்னமும் அதே ஐடியாவில் தான் இருக்கிறீர்களா?" என தருணிடம் கேட்டான்.
"ஆமாம்பா எனக்கு டிராயிங்க்ஸ் நன்றாக வருகிறது என்று நீங்கள் தானே சொன்னீர்கள், அதனால் நான் உங்களை மாதிரி தான் படிப்பேன்!" என அவனை கட்டிக்கொண்டான் தருண்.
சிரித்தபடி அவன் தலையில் முட்டியவன், "சிவில் வேண்டாம் நீ ஆர்கிடெக்ட்சர் படி, என்னை போல் வெயிலில் அலைய வேண்டிய வேலை இருக்காது. ஏதோ அப்பாவுக்கு இப்பொழுது அந்த கோர்ஸ் முடித்ததால் பரவாயில்லை இல்லையென்றால் கால் கடுக்க அங்கே இங்கே என்று ஏறி இறங்கி கொண்டே இருக்க வேண்டும். நீ அந்த மாதிரி எல்லாம் சிரமப்பட வேண்டாம் ஆர்கிடெக்ட் என்றால் உட்கார்ந்த இடத்தில் வேலை முடிக்கலாம்!" என்றான்.
தன் தந்தையின் அக்கறையில் நெகிழ்ந்தவன், "அப்பா! நான் பேசுவதால் உங்கள் வேலை எதுவும் கெடவில்லையே?" என்று கவலையோடு வினவினான்.
"அதெல்லாம் இல்லைடா தங்கம், வாய் தானே பேசுகிறது கையும், கண்ணும் தன் வேலையை சரியாக தான் செய்கிறது நீ பேசு!" என்றவன் அவனுடைய அமைதியை உணர்ந்து திரும்பி பார்த்தான்.
"என்னிடம் எதுவும் கேட்க வேண்டுமா தருண்? அப்பாவிடம் என்ன தயக்கம் உனக்கு என்ன பேச வேண்டுமோ வெளிப்படையாக சொல்!" என்று அவனுடைய கரத்தை தன் கரத்தோடு கோர்த்து அழுத்திக் கொண்டான் சித்தார்த்.
சட்டென்று தருண் உடைந்துப் போய் அவன் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தான்.
"தருண்... ஏய்... என்னடா கண்ணா?" என்று பதற்றத்தோடு அவன் தலையை தடவினான்.
"நீங்கள் ஏன்பா அம்மாவையும், என்னையும் தனியாக விட்டு விட்டுப் போனீர்கள்? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம்? எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, ஒரு தடவை எதற்காகவோ பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் அம்மாவை சுற்றி நின்றுக் கொண்டு எப்படியெல்லாமோ திட்டினார்கள். அவங்க எவ்வளவு பயந்து போய் நின்றுக் கொண்டிருந்தார்கள் தெரியுமா? எனக்கு அதெல்லாம் திடீரென்று ஞாபகம் வந்து மிகவும் கஷ்டமாக இருக்கிறதுப்பா. முதலிலிருந்தே நீங்கள் எங்களுடன் இருந்திருந்தால் அதுபோன்ற பிரச்சினைகள் எங்களுக்கு வந்திருக்காது இல்லையா?" என்று விசித்தபடி சித்துவை கட்டிக்கொண்டான் அவன்.
தருணை என்ன சொல்லி எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் தன்னோடு சேர்த்து ஆதரவாக அணைத்துக் கொண்டான் அவனின் வளர்ப்பு தந்தை.
"ஐ ஆம் சாரிடா கண்ணா! அப்பா மிகப் பெரிய தவறை செய்து விட்டேன். உங்களை நன்றாக வசதியாக வாழ வைக்க வேண்டுமென்று நினைத்த நான் உங்களின் உணர்வுகளை சரிவர புரிந்துக் கொள்ளாமல் போய் விட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உங்களை பிரிந்திருந்த காலத்தில் தெளிவாக தெரிந்துக் கொண்டேன். அத்தனை ஆண்டுகள் உங்களை தனியாக கஷ்டப்பட விட்டு விட்டேனே என்று நான் வருந்தாத நாளில்லை, ஐ ஆம் சாரிடா குட்டி. ஆனால் தயவுசெய்து என்னிடம் கோபித்துக் கொள்ள மட்டும் செய்யாதேடா என்னால் அதை தாங்க முடியாது!" என்று தானே தவறிழைத்தது போல் சித்து வருந்தினான்.
"இல்லைப்பா... நிச்சயம் இல்லை, என்னால் உங்களிடம் கோபித்துக் கொண்டெல்லாம் இருக்க முடியாது. எனக்கு நீங்கள் வேண்டும்பா, எப்பொழுதும் நீங்கள் என்னுடனேயே இருக்க வேண்டும். ஐ லவ் யூ பா!" என்று அவனை இறுக்கிக் கொண்டான் தருண்.
"மி டூ டா செல்லம்!" என்று அவன் தலையோடு தலைசாய்த்து ஆறுதலாக முதுகை தடவிக் கொடுத்தான்.
தன் அப்பா தங்களை விட்டுப் பிரிந்ததால் தான் தாங்கள் அத்தனை துயரங்களை அனுபவித்தோம் என்றெண்ணிக் கொண்டிருந்த சிறுவனுக்கு தெரியவில்லை, அந்த துயர வாழ்விலிருந்து தங்களை மீட்டெடுத்ததே இந்த அப்பா தான் என்று.
அறையிலிருந்து கருண் உளறும் ஒலி கேட்க சித்துவிடமிருந்து வேகமாக விலகிய தருண், "அப்பா! தம்பி தூக்கம் கலைந்து உளறுகிறான் போலிருக்கிறது, நான் போய் பார்க்கிறேன். உங்களை வேறு வேலையை முடிக்க விடாமல் டிஸ்டர்ப் பண்ணி விட்டேன். நீங்கள் சீக்கிரம் முடித்து விட்டு நேரமாகப் படுங்கள், குட்நைட்!" என கடகடவென்று பேசியபடி ஓட முயன்றவனின் கரம்பற்றி தடுத்தான் சித்தார்த்.
"அப்பா மேல் உனக்கு எந்தக் கோபமோ, வருத்தமோ இல்லையே?" என்று கவலையோடு விசாரித்தான்.
அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த தருண், "கண்டிப்பாக இல்லைப்பா, என் மனதில் எந்தக் கோபமும் இல்லை. ஒன்றாக சந்தோசமாக இருக்க வேண்டிய நாட்களை மிஸ் பண்ணி விட்டோமே என்கிற வருத்தம் மட்டும் தான் இருந்தது. அதுவும் உங்களிடம் பேசியதில் சரியாகி விட்டது. அந்தப் பிரிவுக்கும் சேர்த்து என்னையும், அம்மாவையும் நீங்கள் எந்தளவுக்கு அன்பாய் கவனித்துக் கொள்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஸோ... என்னை நினைத்து எதுவும் கவலைப்படாதீர்கள், என்றைக்கும் நீங்கள் என்னோட பெஸ்ட் அப்பா தான்!" என்று சித்துவின் கன்னத்தில் முத்தமிட்டான் தருண்.

Super story
ReplyDeleteThanks ma 🙂
Delete